அயர்ந்தூங்கி சோம்பல் முறித்தெழும்
பிள்ளை மேல் வரும் பால்
மணம் – விருப்பம் !
,
வாகனங்கள் இயங்க நிரப்பப்படும்
கிடங்கில் வரும் எரிபொருள்
மணம் – விருப்பம் !
.
பண்டிகை ஒரு வாரம் முன்பிருந்தே
வீட்டில் வரும் பலகாரங்களின்
மணம் – விருப்பம் !
,
அதிகம் காணா பூக்கள் தொடுத்து
கட்டப்படும் பூமாலையின்
மணம் – விருப்பம் !
,
கோடை கால மழையும்
குளிர் கால கதகதப்பும் தரும்
மணம் – விருப்பம் !
,
இவையனைத்தையும் விட போதை
தரவல்லமை படைத்த, புது நூலின்
மணம் – விருப்பம் !
++
பெயர் – கீர்த்தனா
வயது – 25
சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், குறுநாவல் எழுதுவதில் ஆர்வம்.
என் முதல் சிறுகதை என்னுடைய ஆறாம் வகுப்பில் எழுதியது.
இரண்டாண்டுகள் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த அனுபவம் உண்டு.