Description
ஆண்மை என்பது ஒரு ஆணுக்கு எப்படி உருவாகியிருக்கும். அதற்கு அர்த்தம் பெண்ணை பராமரித்து பாதுகாப்பதில் இருக்கிறதா? இல்லை அவளை அடித்துப் பேசி, திட்டி, அசிங்கமாக நடத்துவதில் இருக்கிறதா?. திருமண பந்தம் என்பது ஆண்மையை நிரூபிக்க கொடுக்கும் லைசன்ஸா என்ன? இல்லை அது குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமா?
திருமணமும் அதில் தாலி கட்டுவதும் இவர்களெல்லாம் நினைப்பதுபோல் பெண்ணை கொடுமைப் படுத்திக்கொள்ள தரும் அனுமதி போலவும் அவளை தனது இஷ்டம் போல கற்பழிக்கவும் கொடுக்கும் அனுமதியொன்றுமில்லை. அவளை கண்ணியமாக நடத்த ஒரு துப்புமில்லாமல் எதற்குத்தான் கல்யாணம் செய்து கொள்கிறார்களோ.