குட்டி, ஐந்து ஆண்கள் இடையில் ஒரு பெண் கடைசியாக பிறந்த ரத்தினத்திற்கு இயல்பாகவே குட்டி என்ற பெயர் வந்திருக்கும் என்று தான் அனைவரும் அறிவர். ஆனால் விஷயமே வேறு. ஏழாவது வகுப்பு காலாண்டு தேர்வு வரை படித்த ரத்தினத்தை  யாரும் குட்டி என அழைக்கவில்லை. அவன் படித்த மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தனியே கழிவறையோ, சிறுநீர்கழிக்குமறை என்றெல்லாம் இல்லை. பள்ளியின் கிழக்கு மதில்சுவரில் தான் சிறுநீர் கழித்தாக வேண்டும், மலம் கழிக்க அவசரமென்றால் அரைநாள் விடுப்பு கட்டாயம் அளிக்கப்படும். ஆனால் அது எதை வைத்து உறுதி செய்வார்கள் என்றெல்லாம் தெரியாதவொன்று.

ஏழாவதுக்கு மதியம் தான் தேர்வு. தேர்வுக்கு முன்னர் சிறுநீர் கழிக்க ரத்தினம், சிவசாமி, சண்முகம் மூவரும் கிழக்குப்புறமாக ஒதுங்க, சண்முகம் சிறுநீரில் S என வரைய தொடங்கினான். “ரத்தினம் நீ R வரைடா” எனச்சொல்லும் போது தான் கவனித்தார்கள். ‘குறி’யில் எல்லாரையும் போல ரத்தினத்திற்கும் மயிர் முழைக்கத்தொடங்கியிருந்தாலும். ‘குறி’ என்னவோ பிஞ்சுக்குழந்தை அளவிற்கே இருப்பதை.

தேர்வுக்கிடையே பகிரப்படும் பிட் போல விஷயம், சில இடத்தில் மெல்லமாகவும், சில இடத்தில் வேகமாகவும் ஆசிரியர் கவனித்துக்கொண்டிருந்தாலும் அதையும் மீறி நகைப்போடு பரவத்தொடங்கியது. அதற்கு முந்தைய வாரம் தான், ‘குறி’ யில் முடி முளைக்காதவர் குறித்து, ‘’இன்னும் முடியே முளைக்கல, இவனெல்லாம் அரிப்பெடுத்த அக்கா எவளாச்சும் கூப்டா சமான் கூட எழும்பாது” என பரவலாக பேச்சுகள் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது கூட குட்டி, தனது டவுசரை சன்னமாக விலக்கி மயிர்களை மட்டும் காட்டி தப்பித்துக்கொண்டவன். அத்தோடு விட்டிருந்தாலாவது தப்பியிருப்பான், தன் பங்கிற்கு நாகராஜூவையும், மாரியப்பனையும் “மயிரே முளைக்கல, இவன் சாமெனெல்லாம் மண்டிப்போட்டு சப்பினாலும் எழும்பாது” என தாட்பூட் என பேசியவன்.

நாகராஜூ சும்மாவிட்டாலும், மாரியப்பன் சும்மா விடுவானா “ப்ளேடு வாங்கி நாலு வாட்டி செரச்சா மயிர் மொளைக்கும், உம்பட் குஞ்ச என் வளத்தி வர எத வச்சு சரைப்ப?” என கேட்க ரத்தினம் குட்டியாகிப்போனான்.

சொல்லிவைத்தாற்போல பரிட்சையிலும் பெயிலாக அதைசாக்காக வைத்து, குட்டி என பெயருக்கு தப்ப முழுக்குப்போட்டான். ஆனால் குட்டி பெயர் அடுத்த வீதிவரை பரவியது, குடும்பத்திலும் கடைக்குட்டி என்பதாக இருக்கும் என அதையே சொல்லி அழைக்கி அவர்களிடம் அவுத்துக்காட்டவா முடியும்.

ரத்தினம் குட்டியாகிப்போனான்.

*****

குட்டிக்கு ‘குறி’யில் தான் குறைபாடே தவிர அவனுக்கு, பெண் மீதான ஈர்ப்போ, சுய இண்பம் தூண்டலோ இயல்பாகத்தானிருந்தது. ஒரு முறை தன்னுடைய மல்லிகாக்கா உடைமாற்றும்போதுகூட ‘குறி’ விரைத்தது ஆனால் அரைநொடிக்குள் நனைந்தும் விட்டது. அதுதான் அடுத்த சிக்கல். குட்டி பெயருக்கான உண்மை காரணம் சொல்லி அழைத்தவர்கள் தொழிலோ, திருமணமோ வேறொரு ஊருக்கு மாறிப்போக, வெறும் குட்டியாக இருந்தாலும் விரைப்பதும் அடங்குவதும் ஒருநிமிடம் கூட தாங்காது.

அண்ணன் மகன்/ள் களுக்கும் குட்டிச்சித்தப்பனாகிப்போனதிலெல்லாம் வருத்தமில்லை ஆனா “வயசு முப்பதாச்சு இன்னும் கண்ணால நெனப்பு வல்லியா”, “உன் கண்ணாலத்த மட்டு கண்டா நா கர சேந்துருவன்” என அவனின் பெரியம்மா பேச்சி சொல்லாத நாளில்லை, பெத்தவள் ஏழாவதை பெத்த கையோடு எவனோடோ ஓடி விட்டாள். எடுத்து வளத்ததெல்லாம் பேச்சித்தான், அவளுக்கும் புள்ளயுமில்ல, புருசனுமில்லை.

கட்டைவிரல் அளவுக்குக்கூட இல்லாத ‘குறி’ க்கு கையோடு காரணமும் சேர்ந்து வந்தது. மல்லிகா ஒரு துலுக்கனை காதலித்து இரண்டு பெண்பிள்ளைகளோடு வீடு திரும்பியிருந்தாள். இந்த ஒரு காரணம் ஓரிராண்டுகள் கல்யாணத்தை தள்ளிப்போட காரணமாக இருந்தது.

*****

மல்லிகா மகள் ஜஹனராவின் நாலு வயது பெண் பிள்ளை மண்டு வைத்து துணி மாற்றும்போதுகூட ஆசையெழாமில்லை. ஆனால் என்ன செய்ய ஆனால் அரைநிமிட விரைப்பு, அரை நிமிட விந்து. இந்த நிலையில் எப்படி ஒருத்தியை திருமணம் செய்வது அவள் ஊரை கூட்டி ஞாயம் கூட்டி வைத்தால் குட்டியின் கதை, குட்டிச்சித்தப்பா என அழைக்குமெல்லார்க்கும் தெரியுமல்லவா? அதற்காகவே தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தான்.

எல்லாரும் தனி வீடு கட்டிபோய் விட, பேச்சியின் ஒற்றைசுவர் வீடு மட்டும் குட்டிக்கென்றானது. சுற்றிலும் தார்ச் வீடுகள் முளைக்க, குறுக்கு சந்தில் மட்டுமிருக்கும் பேச்சி வீடும்,  நாகாவீடு மட்டுமே ஒற்றைச்சுவர் ஓட்டு வீடுகள்.

*****

கைப்பழக்கம் கதைக்குதவாது, ஒருமுறையாவது கையை விட்டு ஓட்டிப்பாப்போம் என நாகாவை ஒருமுறை அணுகினான், அவளும் இசையவே அப்போது விந்து முந்திக்கொண்டது. “இப்ப இதெயல்லாம் சரி பண்ணிரலாம்டா ‘குட்’உதட்டை கடித்தப்படி ரத்தினம், யாருக்கும் தெரியாம டாக்டரு ஒருத்தர பாத்துரு” எனச்சொல்லிச்சென்றாள்.

அவளுக்கு எப்படி ‘குட்டி’ பெயர் ரகசியம் தெரிந்திருக்கும் என்பதே அவனது கவலையாக இருந்தது.

அடுத்தவாரமே துண்டுச்சீட்டை ஒன்றுக்கொடுத்தாள் நாகு, புலியகுளத்திலிருந்து பலமைல் தொலைவிலுள்ள பட்டணம் செக்ஸ் டாக்டர் விலாசம்.

சில மாதங்களில் சொல்லிவைத்தாற்ப்போல குட்டிக்கு பத்மாவும், நாகாவிற்கு கந்தனும் அடுத்தத்டுத்த முகூர்த்தங்களில் திருமணம் செய்துக்கொண்டர்.

பேச்சி சிலகாலம் மகள் வீட்டிலிருந்தாள். சிலகாலமே தான். பத்மா சாணிப்பவுடர் குடித்து இறந்தாள் என்ற செய்த வர அனைவரும் கூடினர். பத்மாவிற்கு முன்பிருந்த தொடுப்பின் பிரிவின் காரணமாகத்தான் தற்கொலை என செய்தி எல்லாரையுவிட நாகாவிற்கு நிம்மதியளித்தது. எங்கே குட்டியின் குறைபாடை ஊரறிய வைத்துவிடுவாளோ என்றச்சம் அவளக்கு.. அந்தளவுக்கு குட்டியை நேசித்தாள் குறைபாடிருந்தாலும் கூட.

துக்கம் சொல்லும்போது காதோரமாக சொன்னப்போதுதான் தன்மீது ப்ரியம் கொண்டவர்களுமுண்டு, அவர்களுக்கு குறையோ, குட்டியோ எதுவும் பொருட்டல்ல என நிம்மதியடைந்தான்.

*****

அதற்கு பின் பலமுறை தனியாக சுய இன்பம் செய்ய முயல்வான் விரைக்கும் முன்னே விந்து வெளியே வந்துவிடும். யாரை நினைத்து செய்தாலும் இறுதியுச்சம் இருநொடிகளைத்தாண்டாது. அறுக்கமாட்டான் கைக்கு ஆறுறவா எனக்கணக்காக விரைப்பில்லாத அவன் ‘குறி’ யை மறைந்தே போகுமளவுக்கு மயிர் மண்டிக்கிடந்தது. அதுவே அவன் பொதுவெளியில் மறைப்பில்லாமல் ஒதுங்க உதவியது.

நாகாவின் கணவன் டைபாய்டில் காலமாக குட்டி அவள் மகளுக்கு குட்டியாகிபோனான் இந்த முறை அவனுக்கு ஆசூயை ஏதுமேயில்லை. தன் மகளைப்போல பார்த்துவந்தான். அருகேயிருந்த நாஸ் திரையரங்கத்திற்கு அவந்தான் கூட்டிச்செல்வான். விருமாண்டி ஓடிய முப்பது நாட்களில் ஆறு தினங்களுக்காவது கூட்டிச்சென்றிருப்பான். ஏதோரு சாயலில் நாகாவின் மகள் அபிராமி சாயலில் தெரிய அதைக்காட்டவே மேலும் இரண்டு காட்சிகள்..

*****

பேச்சி இறப்பதற்குள் மற்ற பிள்ளைகள் சொந்தவீடு கட்டிக்கொண்டுவிட, இறந்தபின் அந்த ஒற்றைச்சுவர் வீடு ‘குட்டி’க்கு என்றானது, அருகில் நாகாவும் அவள் மகள் வசந்தியும் ஆனாலும் அதிலொரு சிக்கல் அந்த இடைநிலத்தை தவிர அனைத்து வீடுகளின் கட்டிடடங்கள் உசர இருவரின் நிலத்தை சேர்த்தே நல்ல விலைக்கு எடுத்துக்கொள்ள நான், நீ எனப்போட்டி. ஆனால் விட்டுத்தரவும் அதன் பின் உடல்பந்தமில்லாமின்றாலும் பிரிய இருவருக்கும் மனமொப்பமில்லை.

நாகாவீட்டில்  கலைஞரின் இலவச டிவி. படம் பார்க்க பாதி நாள் நாகா வீட்டில் ‘குட்டி’ இருந்தாலும் அவன் முன்னரே உடைகூட மாற்றுவாள் நாகா, தயக்குமின்றி, குட்டிக்கும் எதுவும் தோன்றாது.

****

குட்டியின் மடியில் வசந்தி அமர்ந்திருந்து சேனலை மாற்றிக்கொண்டே வந்தாள், கேபிள் இணைப்பு கட்டாகி கட்டாகி வந்தது. சன்மீயூசிக்கில் “உன்ன விட பாடல் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருந்து”. அத்தனை காட்சிகளும் மனப்பாடம் என்பதால், கேபிள் கட்டாவது குட்டிக்கு எந்த இடையூறுமில்லை. ஆனால் ஏதோரு குறுகுறுப்பு அவனுக்குள் அதிலும் “அல்லி கொடிய காத்து அசைக்குது

அசையும் குளத்துக்கு உடம்பு கூசுது” என வரிகளில் கமல், அபிராமி இருவரும் உடைகளைந்து ஆற்றில் நெருக்கமாக அவனது ‘குறி’ விரைத்தது, ஆனால் விந்து வரவில்லை பாடல் முழுவதும் விரைத்தப்படியே இருந்தது.

“என்ன கேட்குற சாமிய?” என்று கமல் கேட்க கேட்க அபிராமியை இல்லை இல்லை வசந்தியை மடியிலிருந்து கீழறக்கிவிட்டு ரத்தினம் அடுத்தடியை வீட்டிற்குள் வைத்து எறவானத்தில் வைத்திருந்த சாணிப்பவுடரை கையில் எடுத்தான்.

கடைசியாக ‘குட்டி’யை “அஞ்சு நிமிச சொகத்தையே வீசியெறிஞ்சு உன்ன கட்டினா, அர நொடிக்கு கூட உன் சாமான் தாங்கல” என்ற சொன்னவளின் பத்மாவின் வாயில் சாணிப்பவுடரை திணித்த கை, இன்று ரத்தினமாக உணர்ந்த பின்னர் எடுத்தான்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *