ஏழையின் வீட்டில்

நிரந்தர இடம் இல்லாததால்

பிள்ளைகளின் பொம்மைகள்

இருக்கும் வரை

இடம் விட்டு இடம் மாறி

இயங்கிக் கொண்டே இருக்கிறது

வசதியான வீட்டில்

பிள்ளைகளின் பொம்மைகள்

நிரந்தரமாக

கண்ணாடி பெட்டிக்குள்

சிறைப்படுகிறது

சிறைப்படுத்தியவர்

இறந்த பிறகும் கூட

அந்த பொம்மை

அங்கேயே இருக்கிறது

ஆனால் அந்த இறப்பு

விடுதலைக்கான

கனவினை விதைப்பது

அந்த வீட்டில்

பொம்மைகளுக்கு மட்டுமில்லை

++

ஆதன் ஆரா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதும் க.ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர். இவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். இவர் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு விசைத்தறி நெசவுத்தொழில் செய்து வருகிறார்  இவர் தன்னுடைய மகள்களின் பெயர்களான ஆதன்யா, ஆராநிலா என்பவற்றின் தொடக்கச் சொற்களை எடுத்துதான் தன்னுடைய புனைப்பெயரை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *