“கூடப்பிறந்தவ
முச்சந்தில நின்னு
கதறி அழுதுகிட்டு இருக்கா
என்ன ஏதுன்னு கேட்காம
எனக்கென்னன்னு
போறாரு பாரு” என்று
தொடங்கி
“கேட்டா வீட்டுல போயி
அந்த அம்மாகிட்ட
யாரு வாங்கி கட்டிக்கிறது” என்று
முடிந்த
அவன் போகிற போக்கில்
ஒரு செவியை
மிக நெருக்கமாக உரசிச் சென்ற
மிகச் சுருக்கமான
புறணியில் இருந்த
கலப்படமில்லாத வாய்மை
சுக்கு நூறாக
ஒருமுறை நொறுக்கியது
அதற்கு முன்புவரை
புறணி பற்றி
அவன் கொண்டிருந்த
எதிர்மறையான
நம்பிக்கைகளை மட்டுமில்லை
000
ஆதன் ஆரா
ஆதன் ஆரா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதும் க.ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர். இவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். இவர் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு விசைத்தறி நெசவுத்தொழில் செய்து வருகிறார் இவர் தன்னுடைய மகள்களின் பெயர்களான ஆதன்யா, ஆராநிலா என்பவற்றின் தொடக்கச் சொற்களை எடுத்துதான் தன்னுடைய புனைப்பெயரை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.