டைமண்ட் கற்கண்டு

பச்சைக்கற்பூரம் இலவங்கம்

ஏலம் நெய் எண்ணெய்

கடலைமாவு முந்திரி

நீர்

பிசைந்த மாவை

,

கடாயில் காய்ந்த

எண்ணெய்

உள்வாங்கும்

பெருங்கரண்டியின்

மிளகுமாவுதுகள்களை

,

வெந்து தணிந்ததும்

பூந்தியின்

இனிப்பு நெய் இதர சேர்ப்பு

,

முடிந்ததும்

ஆறிய கையோடு

உருட்

,

இளவரசி பிறக்க

தாம்பாளத்தட்டில்

லாடு‌ பிறப்பெடுக்க

,

உட்சுவையின்

தாக்கம் ஆஹா ‌

ஓஹோக்களின்

உமிழ்நீர் தெறிப்பு

,

விருந்திலையை

கௌரவமாக்கிய‌

லட்டு‌

இன்றைக்கு

வணிக அரசியலின்‌

உள்ளங்கைகளில்

உருண்டையாக

உருட்டப்படுகிறது‌

,

மாமன்னன்

எமோஜியும்

தர்மத்தாய் எமோஜியும்

கொழுப்பு கலப்பினம்

பிரசாதம்

என அரசியல் லாபியில்

உருட்டும்

வைரல் ஆக பக்தி

பந்திப்பாயில்

அவதிப்பட‌

,

நீங்களே சொல்லுங்கள்

கேப்பையில்

நெய் வடிந்தால்

நம் கோப்பை

நிரம்புமா..

++

கவிதை சிறுகதை கட்டுரை என பல்வேறு சிற்றிதழ்களிலும் பேரிதழ்களிலும் நாற்பத்திநான்கு ஆண்டாக எழுதிவருகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *