கவிதை அதிகாரம்

உங்கள் வெற்றி, தோல்வியைக்

கண்டறிய மற்றவர்களின்

நாணயத்தை சுண்டிப்

பார்க்காதீர்,

/

எனது ஆயுளை

வெறும்

இதய துடிப்பல்ல,

உனது

இமைகளின் துடிப்பே

உறுதி செய்கிறது,

/

மின் கடத்தாப் பொருட்கள் போல

உன்னையும்

காதல் கடத்தாப் பொருட்களைக்

கொண்டு செய்திருக்கலாம்,

/

உனது முகத்தை

அட்டைப் படமாகக்

கொண்ட

எனது காதல் புத்தகம்

கடைசி பக்கம் வரைக்கும்

கண்ணீரால் நனைந்திருக்கிறது,

/

ஊர்ந்துச் செல்லும்

அந்த பட்டுப் பூச்சிகளின்

இறுதி பயணமோ

பூமி தாய்க்கு

அழுகையை

வர வைய்த்திருக்கும்

 /

இரவில் சாலையோரத்தில்

தெரியும்

பச்சை விளக்குகள் எல்லாம்

ஏழைகளுக்கு இன்னும்

பசியை தூண்டுகிறது

 /

இரா. மதிராஜ்

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியில் இருந்து  திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ள புதுக்கோட்டைக் கிராமத்தில் பிறந்து, கீழக்கரையில் கல்லூரிப் படிப்பை முடித்து தற்போது காங்கேயத்தில் உள்ளத்  தனியார் நூல் ஆலையில் பணிபுரிகிறேன், தமிழ் இதழ்களில் கவிதை மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறேன், இது வரை கொலுசு மற்றும் காற்றுவெளி போன்ற இலக்கிய மாத இதழ்களில் எனது சிறுகதைகள் வெளி வந்திருக்கிறது, அனைத்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்பையும் வாசிக்கவும், நேசிக்கவும் செய்கிறேன் .

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *