மீன்கள் நீந்தும் குளமோ
கடலுக்கு விரையும் ஆறோ
பூப்பூத்த செடியோ
கிளை பரப்பிய மரமோ
,
கூரை வேய்ந்த குடிலோ
வானளாவிய கோபுரமோ
விளைந்த நெல் வயலோ
அடர்ந்த பெருங்காடோ
,
சிதிலமடைந்த குன்றோ
பசுமை தவழும் மலையோ
கார்கால மேகமோ
வளைந்த வானவில்லோ
,
கடந்து போகையில்
சலனப்படுத்தி விடுவது என்பது
அத்தனை இலகுவான
செயல் அல்ல
இலக்கு நோக்கிப் பயணிக்கும்
சிறு பறவையின் சிறகடிப்பை.
++
ஐ.தர்மசிங்
நாகர்கோவில்.
எனது படைப்புகளாக” இலையளவு நிழல்” ” புன்னைகையின் நிறங்கள்” என
இரு கவிதை நூல்கள் வெளியாகியிருக்கின்றன.
தினசரி, வார, மாத இதழ்களில், மற்றும் 13 கவிதைத் தொகுப்புகளில் எனது கவிதைகள் வெளிவந்துள்ளன.