எரியும் மனிதன்
இயந்திர மனிதனுக்கு
ஒரு படி மேலே
எரிந்து கொண்டு
இருக்கிறான்
யாருக்காகவோ தான்
எரிகிறான்
,
அவனுக்கு துணையாக
இருப்பது
அருவி போன்று
விழும் வியர்வை துளிகள்
,
சக்கரம் போன்ற
கல்லும் சேர்ந்து எரிகிறது
வெளியே தெரியவில்லை
நீர் பட்டுவிட்டால் துடித்து
போகிறது
,
விறகு எரிந்து சிவந்து
உடைந்து கொண்டே
இருக்கிறது
,
உலகை காக்கும் அன்னம்
பிறந்து கொண்டே இருக்கிறது
வெவ்வேறு வடிவங்களுடன்
பல்வேறு வண்ணங்களுடன்
,
யாரோ பசியார எல்லோரும்
எரிந்து கொண்டே
இருக்கிறார்கள்
0