வீட்டுக்குள்ளே இருந்து போர் அடிக்குது டிவி யாது பார்ப்போம் டிவியை போட்டான் சுரேஷ். இன்றைய செய்தி அறிக்கை வானிலை நிலவரம் சென்னை கடலூர் மயிலாடுதுறை ஆகிய இடங்களில் புயலோடு கூடிய கன மழை பெய்யக்கூடும்…

செய்தியை கேட்டதும் சுரேஷுக்கு தூக்கி வாரி போட்டது. அவன் பணி நிமித்தமாக டெல்லி வந்திருந்தான். தன் மனைவியும் கைக்குழந்தையுமான மகளும் எப்படி சமாளிப்பார்கள் என்று புரியாது திகைத்துப் பார்த்தான்.

உடனே செல்போனை எடுத்து தன் மனைவி லதாவுக்கு போன் செய்தான். லதா இரண்டு முறை போன் அடித்தும் எடுக்கவில்லை. அவனுக்கு பயம் அதிகமானது….

பிறகு அவனது நண்பனான கண்ணனுக்கு போன் செய்தான். அவன் எடுத்து மச்சான் இங்கு அதிகமான மழடா என்னால, போன் பேச முடியல’டா எல்லா லைனும் துண்டிச்சிருக்குடா! என்றான்…

-அப்படியாடா என் மனைவிக்கு போன் பண்ண எடுக்கவே இல்ல அதாண்டா உன்கிட்ட கேட்டேன்.

-எல்லா ஏரியா சைடு சரியான மழைடா யாரு என்ன பண்றாங்க என்னன்னு தெரியல டா எல்லாரும் வீட்டுக்குள்ளே இருக்காங்க டா வீட்டுக்கு முன்னாடி தண்ணி தப்பாம நிக்குது என்றான். சுரேஷுக்கு மேலும் பயமும் பதற்றமும் அதிகரித்தது…..

லதாவின் தந்தைக்கு போன் செய்தான். அவர் போனை எடுத்தார்.

-மாமா லதாவிடம் பேசினீங்களா என கேட்டான் அதற்கு லதாவின் அப்பா ஒரு கால் மணி நேரத்துக்கு முன்னாடி தான் அப்பா பேசினேன் என்றார்….

 -அங்க ஒன்னும் பிரச்சனை இல்ல மாமா!

 -இல்லப்பா ஒரே மழையா வீட்டு முன்னாடி எல்லாம் தண்ணி நிக்குதா அதை வீட்டை கூட்டிட்டு பத்திரமா இருப்பா அப்படின்னு சொல்லி இருக்கேன் மாப்பிள என்றார். லதா போன் பண்ணா என்னிடம் பேச சொல்லுங்க என்றான்…

-சரிங்க மாப்ள கண்டிப்பா சொல்றேன் பேச சொல்றேன் மாப்பிள அப்படின்னு பேச, போனை அணைத்தான்….

பிறகு ஆபீஸ் போகவேண்டிய சூழல் இருந்ததால் சுரேஷ் தனது முக்கியமான ஆபீஸ் ஃபைல்களை எடுத்து வைத்து புறப்பட்டான்….. வெளியில் ஆட்டோவை மறைத்து ஏறிச் சென்றான். செல்லும் வழியில் சுரேஷின் போன் ஆனது ஒலித்தது. யாரென எடுத்து பார்த்தான்….

லதா போன் செய்திருந்தாள். பிறகு அவளிடம் பேசத் தொடங்கினான்

-சென்னையில் ஒரே மழை என்று சொல்றாங்க நீ குழந்தை பத்திரமா இருக்கீங்களா? குழந்தைக்கு தேவையான பால் எல்லாமே இருக்கா வீட்டுக்கு தேவையான பொருள் எல்லாம் இருக்கா? என்று விசாரிக்க ஆரம்பித்தான்.

அதற்கு, லதா ’அனைத்துமே இருக்குங்க குழந்தைக்கு பால் தாங்க இல்ல பால் மட்டும் வாங்கணும். ஒரே மழையா இருக்குங்க. வீடு முழுக்க ஈரமா இருக்குங்க. வாசல்ல தெருவுல எல்லாம் தண்ணி நிறைஞ்சு வழியுதுங்க. வீட்டில பாதி அளவு தண்ணி வந்துரும் போல இருக்கு. நல்லவேளை நம்ம மொட்டை மாடியில் இருக்கிறதுனால தண்ணி நமக்கு வரல கரண்ட் வேற கட் பண்ணிட்டாங்க…..

 -எந்த ஒரு நியூஸ் என்னால பாக்க முடியல. போனுக்கு சார்ஜ் கூட போட முடியலைங்க. இப்பதான் பவர் பாயிண்ட்ட வச்சு கனெக்ட் பண்ணி போட்டுட்டு உங்க கிட்ட பேசுறங்க! என்றாள் லதா….

 -சரி பத்திரமாக இரு நான் இன்னும் நான்கு நாள்ல வந்துருவேன், என்று பேசிவிட்டு போனை கட் செய்தான் சுரேஷ்…..

லதா ஏதோ அர்த்தமான காட்டிற்குள் தன்னை தனியாக விட்டு சென்றது போல வீட்டிற்குள்ளேயே குழந்தையும் அவளும் அமைதியாக இருந்தனர். எதிர் வீட்டில் இருக்கும் ஒரு குடும்பமானது எப்போதுமே யாருடனுமே பேச மாட்டார்கள். அவர்களுடைய வேலையை அவர்களை செய்து கொள்வார்கள்.

கீழ் வீட்டில் இருக்கும் ஓனர் அம்மாவும் நல்லவங்க தான். ஆனா காசு விஷயத்துல ரொம்ப காரரா இருப்பாங்க. அவங்க கிட்ட உதவி கேட்க முடியாது. இவ்வளவு தண்ணியா கிடைக்க இந்த தண்ணி எப்ப சுத்தம் செய்ய எப்படியும் மூணு நான்கு நாட்கள் ஆவது ஆகும்…..

அதுவரைக்கும் குழந்தைக்கு தேவையான சில பொருட்களை எப்படி வாங்குவது? அதுபோக பால் பவுடரும் இன்னும் மூன்று நாளைக்கு தான் இருக்கு. அதுவும் தீர்ந்து போச்சுனா நான் என்ன பண்றது என்று கவலையோடு அமர்ந்திருந்தாள் லதா….

இப்படியே இரண்டு நாட்கள் ஓடியாச்சு….பால் பவுடரை கலந்து லதா தனது குழந்தைக்கு கொடுத்தாள். இன்னும் ஒரு நாளைக்கு தான் வரும் போல மிச்சம் நாளைக்கு என்ன பண்றது புரியாம முழிச்சுக்கிட்டிருந்தாள் லதா….

மதியம் இரண்டு மணி இருக்கும் மெதுவாக எதிர் வீட்டு கதவு திறந்ததை பார்த்தால் பதில் பேசாது ஒரு பையன் இறங்கி கீழே சென்றான். இவள் அவனிடம் கொடுப்போமா வேண்டாமா கொடுத்தால் வாங்கி வருவானா என்று பதட்டத்தோடு இன்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் விறுவிறுவென மாடியை விட்டு கீழே இறங்கி சென்றான்.

பிறகு கதவை பூட்டி அறைக்குள் நுழைந்தாள் லதா. வீட்டில் இருக்கும் விளையாட்டு ஜாமானை எடுத்து போட்டு தனது குழந்தையை விளையாட விட்டாள். மேலே யாரோ வருவது போல சத்தம் கேட்டது…..

சரி இந்த பையன் தான் போயிட்டு திரும்பி வந்திருப்பான் கதவா லைட்டா திறந்து பார்த்தாள். அப்ப அவன் கையில சில பொருட்கள் வாங்கி இருப்பதை கண்டால் ஒருவேளை கடை இருக்கும் போல இருக்கு. நம்மளே போய் வாங்கிட்டு வருவோம் அப்படின்னு கீழே கடைக்கு செல்ல புறப்பட்டாள்….

அப்போது பார்க்கவே அருவறுப்புடன், அழுக்கு சட்டையுடனும் , வெகு நாட்களாக தாடி,மீசையை சவரம் செய்யாது அடர்ந்த காடுவோ வளர்த்திருந்தார். ஒரு பிச்சைக்காரன் மாடிப்படியில் அமர்ந்திருந்தான்….

அவனை முகத்தை சுழித்து பார்த்து கீழே இறங்கலாம் என்றால் தண்ணீர் அவளது இடுப்பளவு இருக்கும் போல இருந்தது. அந்த தண்ணீருக்குள் பூச்சிகளும் புழுவுகளும் கூறி வருவது போல இருந்தது….. அங்கேயே சற்று நேரம் நின்று கொண்டிருந்தால் இப்போது குழந்தை அழ ஆரம்பித்தது. அழாத அழாத என்று முதுகில் தட்டி கொடுத்தாள். பிறகு வந்த வழியாகவே திரும்பினாள்….

படியில் அமர்ந்திருந்த அந்த பிச்சைக்காரன், ’அம்மா உங்களுக்கு எது வாங்க வேண்டுமா?’ எனக் கேட்டான் அதற்கு பதில் பேசாது முறைத்து பார்த்து  மேலே ஏறினாள்….

 -அம்மா, உன்கிட்ட தான் அம்மா கேட்கிறேன் உங்களுக்கு எது வாங்கணுமா சொல்லுங்க நான் போய் வாங்கிட்டு வரேன். ஊர் எங்கும் தண்ணியா இருக்கு. உங்களால் அவ்வளவு தூரம் எல்லாம் போக முடியாதுமா. நான் போய் வாங்கிட்டு வரேன்! என்று சொன்னான்

மௌனமாக நின்று கொண்டிருந்தாள்…. “பசியானது அவளது வயிற்றை கிள்ள ஆரம்பித்தது.  இருந்தாலும், மனதிற்குள் ஒரு பயம். இவர் யார் என்றே தெரியவில்லையே பார்ப்பதற்கு திருடன் போல இருக்காரு இவர்ட்ட போய் கொடுக்கலாமா?

ஒருவேளை காசை கொண்டுட்டு ஓடி போயிட்டாருன்னா? என்று பல யோசனைகள் லதாவுக்கு ஓடியது.

இவற்றிற்கு இடையே குழந்தை முகமானது மீண்டும் பசியாக வாடத் தொடங்கியது…..

-காசு இருந்தா குடும்மா உனக்கு உன் குழந்தைக்கு தேவையான உணவு வாங்கிட்டு வந்து தரேன், என்று மறுபடியும் அழுத்தமாக கேட்டார்….

அதற்கு பதில் பேசாது லதா அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்….

வேறு வழி இல்லாமல் பசியால் இருவரும் வாடி வதங்கி விடுவோம் போல இருக்கிறது. இவரிடமே கொடுத்து விடுவோம்…..

என்று மனதிற்குள் நினைத்து நினைத்துக் கொண்டு அவரை அருகில் அழைத்தாள் லதா. பிறகு அவரிடம் பணத்தை கொடுத்து அவளுக்கு தேவையான பொருட்களை வாங்கிட்டு வரச் சொல்லிட்டு பிறகு அவரையும் மீத காசுக்கு ஏதாவது வாங்கி சாப்பிட்டுக்கோங்க என்றாள்….. சிரித்தபடியே நடந்தார்..

அவர் வேக வேகமாக காசை வாங்கிக் கொண்டு புறப்பட்டார். அவரை திகைத்தபடி அவர் சென்ற வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள் லதா…

வெகு நேரம் ஆகியும் அவர் பிறகு அவளுக்கு பயமானது அதிகரித்தது. போய் கீழ இருக்க ஓனரம்மாட்ட சொல்லிவிடுவோமா அப்படின்னு யோசித்து பார்த்தாள்….

சற்று சலசலவென சத்தம் கேட்டது அவர் வந்து கொண்டிருந்தார். பிறகு அவரிடம் பொருட்களை வாங்கினாள் லதா…மீத காசையா அவளிடமே கொடுத்தாள் அவர்….

அதற்கு ’தாத்தா இந்த காசு நீங்களே வச்சுக்கங்க தாத்தா. உங்களுக்கு தேவையான சாப்பாடு வாங்கி சாப்பிட்டுக்கோங்க’ என்றாள் லதா….

அதற்கு அவர் சிரித்தபடியே கீழ் வீட்டிற்குள் சென்றார்… என்ன இவரு ஓனர் அம்மா வீட்டுக்குள்ள போறாரு? அப்படின்னு லதா அவர் பின்னாடியே போனாள்…

வாசப்படியில் குழந்தையோடு நின்றாள்! அங்கு சென்று பார்த்தால் அவர் ஓனர் அம்மாவின் மாமனார்.  

உடல்நிலை சரியில்லாத  தனது மகன் வீட்டிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்திருக்கிறார், என்று லதா கேட்காமலேயே அனைத்தையும் கூறினாள்…. ஓனரம்மா

பிறகு அவரிடம் சென்று லதா என்ன “மன்னிச்சிடுங்க தாத்தா” உங்கள தப்பா நினைச்சுட்டேன் என்றாள்….

சரி பரவாயில்லை. அதனால ஒன்னும் இல்லம்மா நான் ஒன்னும் தப்பா நினைக்கல, என்றார் அவர்…..

பிறகு எதுவும் பேசாது தலை குனிந்தபடி குழந்தையோடு மாடிக்கு சென்றாள்….

++

ச. சத்தியபானு முதுகலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன் எனக்கு கவிதை, சிறுகதை எழுதுவதில் நாட்டம் அதிகம். எனது கவிதை, சிறுகதை காற்று வெளி, கணையாழி, படைப்பு ஆகிய இணைய இதழ்களில் வெளியாகியுள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *