ஒரு  வசீகரமான  கைம்பெண்ணின்  முகம் 

இத்தொகுப்பில்  உள்ள  ஒவ்வொரு  கதைகளையும்  வாசகனாகிய  நாம்  கதை  நடக்கும்  நிலம்  பழக்க  வழக்கங்கள்  மற்றும் கலாச்சாரப் பண்பாடுகளையும்  தொடர்பு  படுத்தியே  உணர  வேண்டும்.  ஏனென்றால்  ‘மிகவும்  இனிப்பான’  கதைப்போன்ற  ஒன்றிரெண்டு  கதைகளை  மேலோட்டமாக  வாசித்தால்  மிகவும்  சாதாரணமான  கதையாகத்  தோன்றும்.  ஆனால்  கொஞ்சம்  ஆழ்ந்து வாசித்துப்  பார்த்தால்  அரேபியர்களின்  கொள்கை  அடிப்படையில்  ஒரு  பெண்ணின்  உடை  கலாச்சரம்  என்பது காலப்போக்கில்  எவ்வாறு  மாற்றம்  அடைந்துள்ளது  மற்றும்  காய்கறி  சந்தையில்  கூவிக்கூவி  வியாபாரம்  செய்யும்  ஓர்  இந்திய  இளைஞன்  அரேபிய  பெண்களை  காமமும்  காதலும்  கலந்ததொரு  பார்வையில்  பார்ப்பதென்பதை  ஓர்  அரேபிய  எழுத்தாளர்  எவ்வாறு  பதிவு  செய்துள்ளார்  என்பதுவும்,  அதேபோல்  மிக  முக்கியமானதொரு  பதிவாக  இந்த  சிறுகதையின்  தலைப்பாக  உள்ள ‘ஒரு  வசீகரமான  கைம்பெண்ணின்  முகம் ‘ சிறுகதை  உள்ளது.  பொது  புத்தியில்  ஓரு  பெண்  அதுவும்  விவாகரத்து  ஆன  அல்லது  தனித்து  வாழும்  ஒரு  பெண்ணின்  மீதான  அவள்  அப்படிதான்  என்பது  போன்ற  இழிவான  பொதுவான  கண்ணோட்டத்தை  செவிலில்  அடித்து  சிந்திக்க  வைக்கிறது.

இந்தியாவில்  பெண்களை  திருமணம்  செய்துக்கொள்ள  வேண்டி  ஆண்கள்  கேட்கும்  வரதட்சணைகள்  ஒழித்துக்கட்ட  வேண்டும்  என்பதை  வலியுறுத்திக்கொண்டிருக்கும்  காலக்கட்டத்தில்,  அரேபிய  நாடுகளில்  இஸ்லாத்தின்  கொள்கையின்படி  ஆண்கள்  திருமணத்தின்போது  பெண்களுக்கு  மகர்  என்று  கொடுக்கப்பட  வேண்டியத்  தொகை  அதிகரித்து  அரேபிய  ஆண்கள்  சிலர்  வசதியின்மையால்  வெளிநாட்டுப்  பெண்களை  மணம்  முடித்துக்கொள்வதால்  அவர்களின்  குடும்பங்களில்  நிகழும்  பிரச்சனைகளை  ஆழமாக  பேசும் ‘ஓர்  முடிவு’ கதை  கவனிக்கப்பட  வேண்டியுள்ளதாய்  இருக்கிறது.

அதேபோல்  பதூவி என்ற பாலைவனப் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறைகளையும், பிறந்த  இடத்திலேயே  வளர்ந்து  வாழ்ந்து  மடிவேனேத்  தவிர  நாகரீகம்  வளர்ச்சி  என்ற  மாயைக்குள்  சிக்கமால்  சொந்த  இடம்விட்டு  நகரமாட்டேன்  என்கிற  பதூவி  இன  கிழவி  என்று  இப்படியாக  அரேபியர்களின்  வாழ்க்கை  முறை  ஒருபக்கமென்றால்,  மறுபக்கம்  பணம்  வேண்டி  அரேபிய  நாடுகளில்  வாழும்  வெளிநாட்டவர்களின்  வாழ்க்கைப்பாடுகளையும்,  குடும்பம்  மணைவி  காதலியைப்  பிரிந்து  வாழும்  ஆண்களின்  துயரங்களை  பதிவு  செய்வதாய்  அமைந்த ‘பனிக்காலம்’,  ‘குழி’ ,  ‘அப்படியான  ஒரு  நேரத்தில்’,  ‘வயதான  பாகிஸ்தானி  ஓட்டுனர்’,  ‘மின்விசிறியின்  அடியில்’  கதைகள்  நெஞ்சை  அறுக்கின்றது.

இந்த  தொகுப்பில்  உள்ள  அத்தனை  கதைகளும்  ஒரு  மொழிப்பெயர்ப்பு  கதைகள்  என்ற  எண்ணத்தை  தவிர்த்து,  ஒவ்வொரு  கதைகளோடும்  வாசகனாகிய  நம்மை  ஒன்ற  வைக்கின்ற  வார்த்தைத்  தேர்வுகளை  சிறப்பாக  செய்து  சிறந்ததொரு  மொழிப்பெயர்ப்பு  ஆசிரியராக  எழுத்தாளர்  பிரியா  அவர்கள்  கவனத்தை  ஈர்ப்பதோடு  வருங்காலத்தில்  கவனிக்கப்பட  வேண்டிய  இளம்  எழுத்தாளாராக  அறியப்படுவார்.  வாழ்த்துகளும்  அன்பும்.

நூல் –  ஒரு  வசீகரமான  கைம்பெண்ணின்  முகம்  (அரபிக்

மொழிப்பெயர்ப்பு) 

ஆசிரியர்  –  பிரியா  (தமிழில்)

வெளியீடு  –  டிஸ்கவரி  புக்  பேலஸ்

இவரின் முந்தையப் படைப்பு –

காலநதி (நாவல்- டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு)

ரிஸ்வான் ராஜா

சொந்த ஊர் முத்துப்பேட்டை. துபாயில் தபால் நிலையத்தில் வேலை செய்கிறார். தேர்ந்த வாசகர்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *