“ஏல மாரிமுத்து நேத்திக்கு ஏழு மணி வரைக்கும் என் கூடத்தான் இருந்த அதுக்குப் பெறவு எங்கலேப் போன? உன்னைக் கண்டு பிடிக்க முடியல “

 “அண்னே அது வேற ஒன்னும் இல்ல அண்னே நைட் வீட்டுக்கு போக லேட் ஆச்சுன்னா எங்க அம்மா வந்து என்ன ஏசிச்சிட்டு இருக்கும் அதான் போய்ட்டேன் “

” உங்க அம்மா வந்து எதுக்குடா உன்னை ஏசுறாங்க “

 “அண்னே அது வேற ஒன்னும் இல்ல அண்ணா நைட் ஆச்சுன்னா வந்து காத்து கருப்புனு எங்க அம்மா பயப்படுறாங்க “

 “சும்மா எதாவது உளறாதலே என்னலேப் பெரிய காத்துக் கருப்பு”

“….”

 “காத்து எப்போதும் தான் நம்மக் கூட தான் இருக்கு “

“…”

” அதுக்கு போய் பயப்படலாமா லே “

 “அண்ணனே நீங்கச் சொல்றது நல்லா தான் இருக்கு உங்களுக்கு அதே மாதிரி ஒரு நிலைமை வந்தால் தான் நீங்க நான் சொன்னதை கேப்பீங்கன்னு நினைக்கிறேன் “

 “நீ பாரு வெள்ளையா இருக்க”

“…”

” என்னையப் பாரு அண்ணன் கருப்பா தானே இருக்கிறேன்”

 “யோவ் சும்மா வந்து தெரியாத மாதிரி நடிக்காதும்மையா “

” எனக்கு சத்தியமா தெரியாது லே நீ கொஞ்சம் சொல்லு லே “

” இப்போ உங்க வீட்டு பக்கத்துல இருந்து இந்த இடிஞ்சுப் போன வீடு இருக்குல”

“ஆமா “

 “அங்கிருந்து அப்படியே முனியம்மா ஆச்சி வீட்டு வழியா போனோம்னா

 ரேவதி அக்கா வீட்டைத் தாண்டி முக்குல திரும்பினதும் இடிஞ்சு விடு ஒன்னு கிடைக்கல”

“ஆமாம் லே “

“….”

 “ஆம் லே நீ எதுக்கு ஊர்ல உள்ள எல்லா வீட்டையும் வரிசையா சொல்லிட்டு இருக்க? “

 “யோவ் கொஞ்சம் அவசரப்படாம சொல்றத கேளும் யோய்”

” ஏல சீக்கிரம் சொல்லித் தொலை லே “

 “அப்படியே போனோம்னா சங்கத்தை தாண்டி அவரு யூனியன் ஆபீஸ் லே வேலை பார்க்கல நாராயணா அண்ணாச்சி வீடு இருக்கலா “

“ஏலே கொஞ்சம் கதையை நீப்பாட்டு, நாராயண அண்ணாச்சி வீட்டைப் பத்தி நான் ஏற்கனவே கொஞ்சம் கேள்விப்பட்டு இருக்கேன் லே இப்ப தான் கொஞ்சம் எனக்கு வயித்த கலங்குறது மாதிரி இருக்கு மாரி முத்து “

” யோவ் இதுக்கே இப்படி பண்றீர் யோய் இன்னும் கதையை நான் சொல்லியே முடிக்கல “

“…”

” அப்படி போன சாமியார் முடுக்கு வரும் தெரியுமா? “

 “சாமியார் முடுக்கு தெரியாம இருக்குமா லே நம்ம ஸ்கூலுக்கு பக்கத்துல தான அது இருக்குது”

 சரியா நான் நேரா வந்து உம்ம வழிக்கே வரேன்

“நான் சொல்ற ரூட்ல நீர் மட்டும் நைட்டு ஒன்பது மணிக்குப் போய் வந்திரும்”

“நான் போயிட்டு வந்துட்டா நீ என்னலே செய்வே ? “

 “அப்படி மட்டும் நீர் மட்டும் போயிட்டு வந்துட்டா நீர் ஒரு தைரியமான ஆளு தான்னு நான் ஒத்துக்குறேன் வே “

” சரி நீ சொல்ற ரூட்ல நான் வந்து போயிட்டு வந்துட்டா நீ என்னலே வாங்கி கொடுப்ப சொல்லு லே “

“….”

” நான் கேக்குறது நீ வாங்கி கொடுப்பியா? “

 “யோவ் நீர் என்ன வேணாலும் கேளும் ஓய் இத செஞ்சிட்டு என்னது கேட்டாலும் நான் வாங்கி குடுக்குற ன்  இது பெட் ஒய் “

” சரி நம்ம தீன் பாய் புரோட்டோ ஸ்டால்ல நமக்கு ஒரு செட்டு புரோட்டா மட்டும் வாங்கி கொடுத்திரு லே “

 “இத செஞ்சிட்டு நீங்க கேக்கும் போது உமக்கு கண்டிப்பா வாங்கி கொடுப்பேன்”

” மவனே சனிக்கிழமைக் காசு எடுத்து ரெடியா வை லே “

” பெட்டு தான்யா”

 இப்படி குழந்தை ஆசாரி மகன் மாரிமுத்தும் நானும் பேசிட்டு இருக்கோம். பெட் தைரியமா கட்டியாச்சு. ஆனா உள்ளக்குள்ள ஒரு பயம் இருக்கத்தானே செய்யுது

 ஆறுமுகம் அண்ணன் வீடு, ரேவதி அக்கா வீடு, முனியம்மாச்சி வீடு வரைக்கும் மட்டும் சரி,

அப்பறம் திரும்ப எப்படி அதில் சாமியார் முடுக்கு வரைக்கும் போக முடியுமா? அதுவும் நைட் ஒன்பது மணிக்கு .. இதுல வேற ஒத்தையில வேற போவேன்னு சொல்லியாச்சு

 ஏற்கனவே எங்க அம்மா அப்பா வேற சொல்லி இருக்காங்க அதுல முனி பாய்ச்சல் வேற இருக்குன்னு சொல்லி இருக்காங்க..

நம்ம வேற அவன் கிட்ட வீர வசனம் வேறப் பேசிட்டோம் வீட்ல இதைச் சொன்னா செருப்படி தான் விழும் என்ன பண்றது ?

 நம்ம ஊர்ல ஒரு விவரமான அண்ணன் ஒருத்தர் இருக்காரு அவர்ட்ட நைஸா வேணாக் கேட்டு பாக்கலாம் அவரு என்ன சொல்றாருன்னு தெரியல

 விஷயத்தை சொல்லவும்

“ஏலே என்ன கோட்டிக்கார பையன் மாதிரி பேசுற லே சாமியார் முடுக்குல தான்  முட்டையை அடிப்பாங்க உனக்கு தெரியுமா? தெரியாதா ? லே “

 “ஆமாம் அண்ணன் எனக்கு தெரிம் அண்னே சித்திரை மாசம் வடக்குத் தெரு அம்மன் கோவில் கொடைக்கு கொடை குடுக்கும் அன்னைக்கு முட்டையை வைத்து அடிப்பாங்கனே…”

“சரி சரி பார்த்து சூதானமாய் இரு லே “

“….”

எல்லா இரவுகளிலும் இடிந்த வீட்டின் அருகில் நின்று  முனிப் பாய்ச்சல் தெருவில் நடக்க ஆரம்பிக்கிறேன்

கடைசிவரை அந்த சாமியார் முடுக்குக்கு போய் நான் சேரவே இல்லை.

இப்போதும் மாரிமுத்து மற்றும் நண்பர்கள் அனைவரும் பாய்க்கடை புரோட்டாவை பத்தி ஆகா ஓகோ ன்னு என்ன பேசினாலும் நான் அந்த இடத்தை விட்டு வேறு எங்கேயாவது சென்று விடுகிறேன்….

00

இரா. மதிராஜ்

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியில் இருந்து  திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ள புதுக்கோட்டைக் கிராமத்தில் பிறந்து, கீழக்கரையில் கல்லூரிப் படிப்பை முடித்து தற்போது காங்கேயத்தில் உள்ளத்  தனியார் நூல் ஆலையில் பணிபுரிகிறேன், தமிழ் இதழ்களில் கவிதை மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறேன், இது வரை கொலுசு மற்றும் காற்றுவெளி போன்ற இலக்கிய மாத இதழ்களில் எனது சிறுகதைகள் வெளி வந்திருக்கிறது, அனைத்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்பையும் வாசிக்கவும், நேசிக்கவும் செய்கிறேன்

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *