இத்துணை கோபங்களுக்கிடையே
ஒரு அசட்டு புன்னகை இட்டு செல்கிறாய்
தாய்க்கும் மகளுக்குமான
பந்தங்களுக்கிடையில் பரிதவிக்கும் இயற்கை…..
**
உலர்த்தி விட்டு செல்கிறது வானிட்டு
மழையை மெல்லமர்ந்து நகலெடுத்து
செல்லும் சூரியனும் ஒரு
ஒளிப்பதிவாளர் என்று கூறுவதும்
மிகையாகாது
**
சாமியிடம் மண்டியிட்டு
வரம் கேட்கும் பக்தனுக்கு
உடுக்கையுடன் அருள் பாலிக்கிறார் தனக்குரிய
வரத்தை மறந்து பூசாரி
**
உதிர்ந்த மரக்கிளையை
சிறகொடிந்த பறவை தன் தாயென
இறுகப் பற்றி பிடித்துக் கொள்கிறது
**
இடைவிடாது பெய்யும்
மழையில் அடிக்கடி ஓய்வெடுத்து
கொண்டிருக்கிறது
சூரியன்
**
சில பறவைகளின் சப்தம்
பசியோ வலியோ கீதமோ
புரியாமல் தவிர்க்கிறது பெருங்காடு
***
ச. சத்தியபானு
ஆசிரியராக கடந்த நான்கு ஆண்டுகளாக இணையதளத்தில் கவிதை எழுதி வருகிறார். சிறு சிறு குறுங்கவிதைகளை எழுதி அவ்வப்போது முகநூல் வாட்ஸ் ஆப் இணைய தளங்களில் பதிவிடுபவர். இவரது கவிதைகள் பல இணைய இதழ்களில் வெளியாகி உள்ளது.