குழந்தைகள் உருவாக்கிய கதைகளும், ஓவியமும்

ஆகாயம்

ஒரு ஊரில் பெரிய வானம் இருந்தது. அது ஒரு மாலை வேளை. மழை வரும் அறிகுறியோடு வானம் தெரிந்தது. சூரியன் மறையும் முன்னே மழை வந்து பறவைகள், மரங்கள் எல்லாவற்றையும் நனைத்து சந்தோசப்படுத்தியது. அப்பொழுது மரங்களில் உள்ள இலைகள் எல்லாம் காற்றில் அசைந்து உற்சாகமாய் நனைந்தது. ஒரு சிறு பையன் மரத்தின் அடியில் சென்று மரத்தை ஆட்டி அதிலிருந்து விழும் மழை நீரில் நனைந்து சந்தோசப்பட்டான். புல்,பூண்டு,செடிகளின் மீது விழுந்த மழை நீர் முத்துக்கள் போல சூரிய ஒளியில் தெரிய, ஊரில் இருந்த குழந்தைகள்  மழைத்துளியில் ஆனந்தமாய் விளையாடினார்கள். மழை நீரால் குளம்,குட்டை,வயல் வெளிகளில் தண்ணீர் நிரம்பிற்று. வயல் வெளிகளில் இருந்த நெல் நாற்றுகள் உற்சாகமாய் தலையை அசைத்தது. மழை பெய்து முடிந்த கொஞ்ச நேரத்தில் வானத்தில் வானவில் அழகாய் தோற்றம் அளித்து குழந்தைகள் அனைவரையும் மகிழ செய்தது.

காற்று

ஒரு முயல் நடந்து போயிட்டு இருந்துச்சாம். அப்போ வேகமாக காற்று வீசினாதால அந்த முயல் பாம்பு புற்று அருகில் விழுந்துச்சாம். அந்த சமயத்துல பாம்பு வந்ததாம். அந்த முயல் பயத்தோட பார்த்தாதாம். அந்த பாம்பு முயல பார்த்து ‘ச்சு ச்சு’’அப்படின்னு பயம் படுத்தினதாம். அந்த முயல், ’பாம்பு ராஜா என்னை விட்டு விடு’ன்னு பயத்தோடு வீட்டுக்கு போனதாம். ஆனா அந்த பாம்பு முயல பின்னாடியே துரத்திட்டு வந்திச்சாம் அந்த முயல் பயந்துட்டு புதர்ல போயிட்டு ஒளிஞ்சிக்கிச்சாம். அந்த முயல் வீட்டுக்கு போய் தூங்கிச்சாம் ஆனாலும் அந்த பாம்பு கனவுல வந்ததாம். முயல் அலறி எழுந்ததாம். முயல் அம்மா வந்து சமாதானம் செய்ததாம். சரி அம்மா நான் இனிமே எதுக்கும் பயப்படாம நல்ல முறையில் பேசி எல்லோரையும் நண்பர்களாக மாற்றி கொள்ளுவேன்னு முயல் சொன்னதாம். 

நிலம்

ஒரு தூரத்து கிராமத்துல வயல் நிலங்கள் இருந்தது, அந்த நிலம் முழுக்க நெல் கதிர்கள் அழகாக நிமிர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. வயல் வரப்புகளில் இருந்த நண்டு வலைகளில் ஒரு நண்டு எட்டி பார்த்துக் கொண்டிருந்தாதாம். வயலுக்கு நடுவே இருந்த வாய்க்கால்களில் தண்ணீர் ஊடிக்கொண்டிருந்ததாம். வாய்க்கால்களின் ஓரத்தில் புற்கள் செழுமையாக வளர்ந்து நின்றதாம். வயலை பாதுகாக்க சோலைக்காட்டு பொம்மைகள் நடுவில் நின்று கொண்டிருந்துச்சாம். வயலின் ஓரத்தில் ஆங்காங்கே தென்னை மரம்,மா மரம்,பனை மரம்,தக்காளி தோட்டம்,ஆடு மாடு,எருமை போன்ற விலங்குகள் புற்களை மேய்ந்துக்கொண்டிருந்துச்சாம். அந்த காட்சிகள் மனதுக்கு இதமாக இருந்தது

கதை உருவாக்கிய குழந்தைகள்

ரா.ஈசாக், ச.ஆசேர், மனிஷ், மரியாள், உத்தமன், அக்சயா

பூ   

ஒரு ஊருல ஒரு பெரிய பூத்தோட்டம் இருந்தது. அதுல ஒரு  பெரிய மலர் இருந்ததாம். அந்த மலர் பெயர் ரோஜா. அந்த ரோஜா சிவப்பு நிறத்துல ரொம்ப அழகா இருந்ததாம். அந்த தோட்டத்துக்கு ஒரு பெண் வந்தாளாம். அந்த பூவ பெண்ணுக்கு பிடிச்சதாம். அந்த தோட்டத்துல வேலை செய்ற தோட்டக்காரர் வந்தாராம். அந்த பூவை பறிக்க கூடாதுனு சொன்னாராம். ஆனா அந்த தோட்டத்துக்கு பின்னாடி ரொம்ப அழகான செடிகள் இருக்கும். அதை எல்லாம் எடுத்துக்கோனு சொன்னாராம். அந்த பொண்ணு அந்த செடிகளை வீட்டுக்கு எடுத்துட்டு போய் வீட்டுல நட்டு வைத்தாளாம். அந்த செடி வளர்ந்து நிறைய பூ பூத்ததாம். அதை எல்லாம் பார்த்து இரசிச்சசாங்க. அவ அந்த பூக்களை எல்லோருக்கும் கொடுத்தாள்.

பூங்கா 

ஒரு சின்ன பையன் பூங்காவ பார்க்க ரொம்ப ஆசைப்பட்டானாம். அவன் கிட்ட பூங்காவுக்கு செல்ல காசு இல்லையாம். அவங்க அப்பா,அம்மாகிட்ட கேட்கவும் பயமா இருந்துச்சாம். அவனோட நண்பர்களெல்லாம் வாரம் வாரம் போயி பூங்காவுல சந்தோஷமா விளையாடிட்டு வருவதை பார்த்து மிகவும் வருத்தத்தோடு வீட்டுக்கு சென்றானாம். அவன் அப்பா அம்மாவிடம் சென்று தயங்கி தயங்கி சொல்ல, அவனுடைய அப்பா அந்த வாரம் அவனை பூங்காவுக்கு அழைத்து சென்றாராம். அவன் பூங்காவிற்குள் நுழைந்ததும் ஊஞ்சல்,சறுக்கு மரம்,சீசா,மேலே ஏறும் ஏணிகள், செடி, மரம்,ஒரு சின்ன குளம், அதில் முழுக்க தாமரை பூக்கள், தின்பண்ட கடைகள், பூங்காவை சுற்றி சிறுவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்தான். அவன் அப்பாவோடு சேர்த்து பூங்காவில் ரொம்ப நேரம் விளையாடினார்கள். அவனுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. அடுத்த நாள் பள்ளிக்கு சென்று தன் நண்பர்களிடம் அப்பாவும் அவனும் பூங்காவுக்கு போய் அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டானாம் 

பூச்சிகளின் அட்டகாசம்

சின்னு ஒரு நாள் மாலையில் வீடு திரும்பினான். அவனுக்கு அம்மா கடலை மிட்டாய் கொடுத்தாள். அதில் சின்னு கொஞ்சம் மட்டும் சாப்பிட்டு விட்டு கபடி விளையாடச் சென்றான். அவன் விளையாடி விட்டு வீட்டுக்கு வந்தவுடன் அவன் சாப்பிட்டு விட்டு மீதி வைத்த கடலை மிட்டாயை பூச்சிகள் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அதை அம்மாவிடம் ‘அம்மா அம்மா’ கடலை மிட்டாயை தின்கிறது என்று கூறினான். அவன் பூச்சிகளை விரட்டி விடாமல் தூங்க சென்றான். அந்த பூச்சிகள் அவன் மேலே ஏறி அவனை தூங்க விடாமல் செய்துக்கொண்டிருந்தது. அவன் எழுந்து பார்த்த பொழுது அவனை சுற்றி நிறைய பூச்சிகள் பறந்துக்கொண்டிருநதது. ஓடி போய் அதை அம்மாவிடம் சொன்னான். அம்மா அவனுக்கு மூலிகை மருந்து தடவி படுக்க வைத்தாள். மூலிகை மருந்தை வீடு முழுக்க தெளித்து பூச்சிகளை வெளியே துரத்தி விட்டாள்.

 மாமரம்

     ஒரு  மலையில பெரிய மாமரம் இருந்துதாம். அதுல தித்திப்பான மாம்பழம்  இருந்துதாம். ஒரு பொண்ணு வந்து அந்த மலை மேல ஏற முயற்சி பண்ணி எப்படியோ மலை மேல ஏறிட்டாளாம். அவ மலை மேல ஏறி அந்த இயற்கையை சுற்றி பார்த்துட்டு இருந்தாளாம். அப்போ தூரத்துல ஒரு மாமரத்த பார்த்தாளாம். அந்த மரத்துல பழங்களை பார்த்ததும் அந்த பழத்த  பறிச்சி சாப்பிட ஆசைப்பட்டாளாம். ஆனா அந்த மாமரம் ரொம்ப உயரமா இருந்துச்சாம். அந்த மரத்து மேல ஏற முயற்ச்சி பண்ணாளாம்.  ஆனா அவளால ஏற முடியல.  ஆனாலும் அவ திரும்ப திரும்ப முயற்ச்சி பண்ணிட்டே இருந்தாளாம். என்னால முடியும்னு நம்பிக்கையோடு  ஏறினாளாம் . அப்போ ஒரு மேஜிக் நடந்துச்சாம்.  அவ மரத்து மேல ஏறி மாம்பழத்த பறிச்சி சாப்பிட்டுட்டு அந்த விதையை வீட்டுக்கு எடுத்துட்டு போனாளாம். அவ வீட்டு தோட்டத்துல நட்டு வைத்து வளர்த்தாளாம். இந்த மரம் பெரிசாகி பழம் வந்தவுடன் அத எல்லோருக்கும் கொடுப்பேன்னு சொன்னாளாம்.

                         வீடு

ஒரு நகரத்துல ஒரு வீடு. அந்த வீட்டுல ஒரு குழந்தை இருந்ததாம். அந்த வீட்டுல அப்பா,அம்மா,குழந்து,தாத்தா,பாட்டி,பாப்பா எல்லாரும் இருந்தாங்க. அப்போ அம்மா சமையல் வேலை பார்த்தாங்க. குழந்தை தொட்டிலில் படுத்திட்டு இருந்துச்சாம். அப்போ ஒரு பூனை குட்டி வந்து தொட்டிலை ஆட்டி விட்டுச்சாம். ஏன்னா குழந்தை தொட்டிலில் படுத்துட்டு அழுதுதாம். நாய் பூனையை பார்த்துதாம். குழந்தை அழுவுற சத்தம் கேட்டதும். அம்மா ஓடி வந்தாங்களாம். ஆனா வந்து பார்த்தா குழந்தை தூங்கிட்டு இருந்ததாம், ஏன்னா தொட்டிலுக்கு பக்கத்தில் பூனை படுத்துட்டு இருந்துதாம். அதை பார்த்த அம்மா பூனை பாராட்டினாங்களாம்.

கதை மற்றும் ஓவியம்

உருவாக்கிய குழந்தைகள்

ஆசேர், மெர்சி, கிரேஸ், இசரவேல், சிவண்யா, சபரி, உத்தமன், ரித்தீஷ், அக்சயா   

                           தீபம்

தீபப்பண்டிகை வருகிற நாள் நெருங்கி வந்தாச்சி. மக்கள் அனைவரும் ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார்கள். .திருவிழா காலங்களில் நிறைய கடைகள் இருக்கும். பொம்மை கடை, வளையல் கடை, மருதாணி, மண் பொம்மைகள், தேநீர் கடை, ஓட்டல், பஞ்சு மிட்டாய், சோளம், புல்லாங்குழல், கலர் லைட் பொம்மைகள், வண்ண வண்ண பலூன், ஐஸ் கீரிம் கடைகள் என மலையை சுற்றி போட்டிருந்தார்கள். கோவில் கோபுரங்களில் வண்ண சீரியல் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இவை எல்லாவற்றையும் பார்க்க மரியா,சாந்த ப்ரியா, வருண் சுஜன், மணிகண்டன், தர்சன், சுசாஸ்ரீ,லிக்கித், எல்லோரும் பண்டிகைக்காக காத்துக்கொண்டிருந்தார்கள். அந்த நாள் வந்தவுடன் நண்பர்கள் அனைவரும் உற்சாகமாக தீபத்தை பார்க்க சென்றார்கள். மரியாவின் குட்டி நாயும் அவர்களோடு வந்தது. எங்கள் ஊர்களுக்கு அருகே இருந்த மக்கள் எல்லோரும் சந்தோஷமாய் வந்தார்கள். மலையை சுற்றி மக்கள் கூட்டம் நிறைய இருந்தது. அந்த சமயத்தில் சிறு மழை பெய்தது, அந்த நாள் பெளர்ணமி என்பதால் நிலா வெளிச்சத்தில் மக்கள் சந்தோஷமாய் மலையை சுற்றினார்கள். சாயந்திரம் ஆறு மணிக்கு மலையில தீபம் ஏற்றியதும் மக்கள் அனைவரும் பரவசமாய் தீபத்தை கண்டு மகிழ்ந்தார்கள். தீபத்தை பார்த்து விட்டு நிறைய விளையாட்டு பொம்மைகள், தின்பண்டங்கள் எல்லாத்தையும் வாங்கி கொண்டு சந்தோஷமாய் வீட்டிற்கு வந்தோம்.

கதை உருவாக்கியவர்கள்

மரியா

சாந்தப் ப்ரியா

வருண்

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *