1.

ஒரு நாளைக்கு இரண்டு முறையேனும்

 அந்தப் பெயரை உச்சரித்துவிடுவாள்

அவள்

,

செல்லும் இடங்களிலெல்லாம்

அந்தப் பெயரை தவறாமல் எழுதிப் பார்ப்பவள்

யாரும் பார்க்காத வண்ணம் அழித்துவிடுவாள்

,

 எப்போதும் அந்தப் பெயருடன் உரையாடலை தொடங்குபவள்

நேரங்கள் கடந்தும் உரையாடிக் கொண்டே இருப்பாள்

இன்று பெயருக்கு உருவத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறாள்

கால முகத்தின் அடையாளங்களைக்கொண்டு.

,

2.

ஜன்னல் வழியே வேடிக்கை பார்ப்பவனின்

பார்வை ரெண்டு துண்டாக வெட்டப்பட்டது

முதல் பகுதியில் வெகுதூரத்தில் தென்பட்ட

சற்று மெலிந்த தோலுடன்

செருப்பின்றி நடந்துசெல்லும் உருவத்திற்கும்

அவனுக்கும் இடையிலான புரிதலை

உணராமலே வாழ்ந்து வந்தன

ஜன்னல் கம்பிகள்

000

நான் கவிஞர் சாயசக்தி சர்வி என் ஊர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி நான் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில்.  கவிதை நூல்களை வெளியிட்டுள்ளேன் 

எனது சிறகில் ஒளிரும் காடு எனும் நூல் இங்குள்ள ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜ கல்லூரியின் பாடத்திட்டத்தில் இணைக்கபட்டுள்ளது கவிதைக்காக நிறைய விருதுகள் வென்றுள்ளேன்

மேலும் நான் pianokeyboard ஐ இரண்டு விரலில் வசித்து உலக சாதனை செய்துள்ளேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *