1. தெரிந்தது
எனக்கென தெரிந்தது
ஒன்றும் தெரியாதென்ற
ஒன்று மட்டும்தான்
,
ஒன்றும் தவறில்லை
அந்த ஒன்றைப்
பற்றியாவது
ஒன்று
சொல்லெனக் கேட்டால்
அந்த ஒன்றா என்று
அலட்சியம் செய்வதை தவிர
என்னிடம் சொல்வதற்கெல்லாம்
ஒன்றும் இல்லை.
,
2. மயிர் கடவுள்
,
புதிதாய்
பிறக்கும் நேரங்களில்
சமயம் பார்த்து
நம்பிக்கை மயிர் கோதும்
கடவுளை
வேண்டாம் மயிரே
என்றே தட்டிவிடுகிறேன்.
3.
கண்ணாடி முன்
முகம்தனைக் காண்,
தன் அழகை
சரிவர சீரழிப்பதும்
ஓர்
தற்கொலை முயற்சியே
4. மியாவ்
,
சாப்பிடும்
தூங்கும்
திறந்த வெளியில்
கக்கா கழிக்கும்
வேறெதுவும் செய்யாது
என் மியாவ் பூனைக் குட்டி
,
மெல்ல அதன் கழுத்தை
இறுக்கிப் பிடித்தால்
மேலும் கீழுமாக
அப்பாவியாய் பார்க்கும்
என் கொடூர பாடல்களுக்கு
நடனமாடுயென
வற்புறுத்தினால்
முன்னங்கால்களை
என்னிடமே கொடுத்துவிடும்
எல்லை மீறி
சில நேரங்களில்
மூக்கைப் பொத்தினால்
நான் இரசிப்பதற்கென
கண் மூடி சிமிட்டும்
,
நேற்றும் ஒருமுறை மரித்த
என் ஆசை மியாவ் குட்டி
புதிதொன்றாய்
மீண்டும் எழும்
மூன்றாம் நாளில்.
00
என் பெயர் கார்த்திக்.புனைவுப் பெயர் சீவகன். திருச்சி, ஜமால் முகமது கல்லூரியில் ஆங்கில முதுகலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறேன். என்னுடைய முதல் கவிதைகள் கதவு இதழில் வெளிவந்ததுள்ளது.