1. ஆத்மம்
அமைதியில்திளைப்பதும்
வேடிக்கைப் பார்ப்பதுமே
பணியென
அடையாளப்படுத்தப்பட்ட
கடவுள்
ரீங் இடும்
படைப்புகளின்
சிரிப்பொலி சிதறல்களில்
அசைந்து செல்லும்
வலுத்த கட்டுவிரியன் சர்ப்பத்தை
சரீரத்தில் ஏவிவிட்டு
தற்போது
உங்களுக்காக வேண்டி
ஒரு புன்நகையை
கொத்துகிறார்.
2. பரந்தாமன்
உம் வயது
என் அனுபவம் என்பதாய்
ஒரே குதிரையை தடவி
நான்கு முறைநகர்த்தி
மௌனித்து நகைத்தீர்
மேற்படி
நரைத்த உரோமங்களையும்
வெண்ணிற பற்வரிைசையயும்
நீவிய கரத்தினால்
போர் வீரர்களைமுன்னேறச் செய்து
தோற்கடித்தீர்
பரவாயில்லை
காத்தருள மீண்டும் வருவேன்
ஆனாலும்
சதுரங்க களத்தில்
சும்மா எதற்கு
ஆளுக்கொரு கவிதையை
பணையம் வைக்கலாம்.

இயற்பெயர் கார்த்திக். திருச்சியைச் சேர்ந்தவர், ஜமால் முகமது கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர்.முதல் கவிதைகள் கதவு இதழில் வெளிவந்தது.