1. கேடயம்

வரும்

எல்லாத் தருணங்களையும்

தனதாக்கிக் கொள்ள

ஒவ்வொரு பாகமாய்

கழித்தெடுக்கும் முன்னே

மேலேறி

காட்டிவிடுகின்றன

பல் சக்கரங்கள்

அப்படியே அச்சாய்

நிலத்தில் பதிந்த

மெல்லுடலிகள்

வரப்போகும்

சிரிப்புகளைப் பார்த்து

மெல்ல

ஓர் ஓட்டினை

ஏந்தினாலே போதுமானது.

2. பாலை

இதெல்லாம் நிகழ்வது

மிக எளிதானதென

கண்ணின்

குண்டூசிகளால்

மாறி மாறி

நம்மையே

குத்திக் கொன்றுவிட்டு

ஞாபகங்களை

அகழ இயலா

ஆழத்தில் புதைத்து

எல்லாம்

மிக எளிதாக நிகழ்ந்து என

திரும்பிவிட்டோம் இயல்பிற்கு

எனினும்

இன்னும் மிச்சமிருக்கும்

சிறு சடங்கு

நம்மை நாமே

மூன்றாம் நபராக்கும்

எளியச் சந்திப்பு மட்டும்தான்.

000

இயற்பெயர் கார்த்திக். திருச்சியைச் சேர்ந்தவர், ஜமால் முகமது கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர்.முதல் கவிதைகள் கதவு இதழில் வெளிவந்தது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *