விரல்களில்

தர்ப்பணமோதிரம்

சம்பந்தி எள்ளு

ஒரு

டேபிள்ஸ்பூன்

வலது

உள்ளங்கை நடுவே

,

தென்னங்காய்

உடைபட்ட ஒருபாதி

திணித்த

இடக்கை.

,

சம்ஸ்கிருத. மந்திரம்

பிஜி எம் மில்

சப்தமிக்க

செம்புத்தண்ணியை

தர்ப்பணமோதிர விரல்

தாரைவார்க்க

,

கோத்ரம்

சிவகோத்ரம்

ராசி

மீனம்

நட்சத்திரம்

ரேவதி

பித்ருக்களோட

பேர் சொல்லுங்கோ

,

பள்ளிக்கூட பிள்ளைகளாய்

பத்துபேரு கொண்ட பிரிவில்

குப்புசாமி முதலியார்

சொக்கலிங்க செட்டியார்

ராமு நாயக்கர்

சென்னாரெட்டி

வேலம்மாள்

ரோஸ்நாயுடு

சொரிமுத்துநாடார்

ஏழுமலை…

,

மஹாளய அமாவசை

திதி கொடுத்ததில்

மகாலயத்தில்

சாதிப்பெயர் சங்கமம்

,

மஞ்சள்தோய்ந்த

நெல்லரிசி பொட்டு

பவ்யமாய்

தலைகுனிந்து

நெற்றி காண்பித்த வினாடிகளில்

,

கலசத்துக்கு

கற்பூரமேற்றி

தீர்த்தத்தை தலைமேல்

தெளித்து

நெகிழிபாட்டில்களில்

தீர்த்தம் பிடித்து

,

நல்லபடியாய்

கற்பூரம் கண்ணில் ஒற்றி

முடிந்தது பத்துபேர்குழு

இனி

அடுத்தவருடம்

சாதிப்பெயர்

வாலாயமாக சங்கமிக்கும்.

000

சூர்யமித்திரன் இ.செல்வராஜ்.இயற்பெயர். புனைப்பெயர் சூர்யமித்திரன். 1983 முதல் எழுதி வருகிறேன். படைப்புகுழுமத்தின் கல்வெட்டு,கொலுசு,காற்று வெளி, நடுகல், தளம்,கணையாழி, சொல்வனம்/ஆனந்தவிகடன் காமதேனு நிழற் சாலை. இப்படியாக நிறைய இணைய இதழ்களில் கவிதை வெளிவந்துள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *