யாரும் என்னை தேடாதீர்கள்
தேடவும் உங்களுக்கு
நேரம் இருக்காதென்று
எனக்கும் தெரியும்
உன்னுடனான என்னுடைய
பழைய நினைவுகளை
நினைத்து தங்களை தாங்களே
தழுவி அழுது கொள்ளுங்கள்
அழுவதும் எனக்கு கேட்க கூடாது
இப்பொழுது
நானொரு மரமாகி விட்டேன் உங்களுக்கென்று
நிழல் தருவேன்
காய் தருவேன்
கனி தருவேன்
ஏன் இப்பொழுது கூட
என்னையே தந்திருக்கிறேன்
வாருங்கள் தூரத்து
என் கிளையிலிருந்து
விழும் ஒற்றை சருகை
எடுத்து பத்திர படுத்துக்கொள்ளுங்கள்
அது நானாகவே இருப்பேன்,
++
யாருமற்ற ஓர் சிறிய அறை
முக்கோண மூளையில்
தலைதொங்கி கிடக்கும் உடல்
123 வது பக்கத்தை
புரட்டிப் படித்திருந்தாக நீளும்
விரல் ரேகை வடுக்கள்,
எவ்வளவு நேரமாய்
பூட்டியிருக்கிறதோ
யென்று உறவினர்களுக்கென்று அச்சம்
சில அலைபேசி அழைப்புகள்
பல மெசேஞ்சர்கள்
சில வாட்சாப் ஸ்டேட்ஸ்கள்
வீட்டை சுற்றி
கூட்டம் கூடிவிட்டது
நானோ கனவுகள் மிதக்கிறேன்
இன்னும் கொஞ்சம்
தூரம் இருக்கிறது
என் வீடு போய் நான் சேர ,
++
சிலருக்கு அப்பா இருக்கிறார்கள்
அம்மா இல்லை
சிலருக்கு அம்மா இருக்கிறாள்கள்
அப்பா இல்லை
பலருக்கு இருவருமே
இல்லாமல் கூட இருக்கலாம்
தெருவோர அனாதை கட்டிலில் படுத்துறங்கும் குழந்தைகளுக்கு கனவுகளில் சோறு ஊட்டுகிறது நிலா
எப்படி சொல்லி புரிய வைப்பது
குழந்தை இறந்துவிட்டதென்ற
செய்தியை அந்த தூரத்து நிலவிடம் ,
*
புன்னகை இதழ், கொலுசு இதழ், வாசகசாலை இணைய இதழ், ஆதிரை இதழ், புக் டே இணைய இதழ் என பல்வேறு இதழ்களில் என்னுடைய கவிதைகள் இடம்பெற்றுள்ளன
என்னுடைய முதல் கவிதை தொகுப்பு விரைவில் வெளியாகவுள்ளது ,