எத்தனை முறை மண்டியிட்டாலும் மறவாத மதுவை நீ அருந்த
மனம் மாறி மருந்தை நான் அருந்தா
மரணித்த பொழுதுகளில்
நீ இட்ட குங்குமத்தோடு சாவக் காட்டில் குடி கொள்கிறது ஆன்மாவை துறந்த வெற்று உடல்
—
சாளரத்தின் வழியே எட்டிப் பார்க்கிறது வானுயர்ந்த மழையின் சாரலில் ஒரு துளி….
—
அழுத்தமாக கூறப்பட்டது
ஊனமுற்றோருக்குரியது அந்த இருக்கையென்று
ஏறி தான் செல்ல முடியவில்லை ஏடுகளில்
எழுதப்பட்டாலும் இன்னும் அவரவர் மனங்களில் தான் எழுதப்படவில்லை…
—
பாலைவனத்தில் பூக்கும்
முட்செடியாய் காய்ந்து
கொண்டே போகிறது
என் மெளன வரிகள்….!
கடுமையான வெயிலும்
உடலிருந்து வெளிப்படும்
வியர்வைத் துளிகளாய்
உயிர்த்தெழுகிறது என்
மெளன வரிகள்…..!
இருண்ட வானில்
இமைகளைத் தேடி
அலைவது போல
தொலைகிறது என்
மெளன வரிகள்….!
கலங்கிய நீரில் உறங்கிய
குட்டைகளாய் தெரிகிறது என் மெளன வரிகள்….!
ஓடும் ஆற்றில்
உருண்டு ஓடிய
மணல் திட்டுகளாய் தெரிகிறது என்
மெளன வரிகள்…..!
உதிர்ந்த மரத்தில் சிறக்கடித்து பறக்கும் சருகுகளாய் தெரிகிறது
என் மெளன வரிகள்…..!
—
ச. சத்தியபானு
ஆசிரியராக கடந்த நான்கு ஆண்டுகளாக இணையதளத்தில் கவிதை எழுதி வருகிறார். சிறு சிறு குறுங்கவிதைகளை எழுதி அவ்வப்போது முகநூல் வாட்ஸ் ஆப் இணைய தளங்களில் பதிவிடுபவர். இவரது கவிதைகள் பல இணைய இதழ்களில் வெளியாகி உள்ளது.