இயல்பாகத்தான்
இருந்தது
அத்தனை
பாரங்களோடு
அணைந்திருந்த
அவ்விக்கட்டிலும்
,
பெரிதாயெல்லாம்
இல்லவே இல்லை
நுண்ணிதாய்
ஒரு சிறு விரிசலால்
அந்த அணை
இப்படி
பெருவெடிப்பானது
எனக்கு இன்னும்
அணுக்கமாகத்தான்
இருக்கிறதேயன்றி
ஆச்சரியமாய்
இல்லவே இல்லை
00
உங்களுக்காகத்தான்
எல்லாம்.
அத்தனை
எல்லாத்தையும்
பதுக்கி வைக்கவும்
பத்திரப்படுத்தவும்
தெரியாமல் தான்
தவிக்கிறேன்
ஒன்றே ஒன்றே தான்
உங்களிடமிருந்து
எனக்காக எதுவுமே
வேண்டாம்
00
தவறுகளின்
நெடுமுகமாய்க்
கருதியோரிடத்து
மீண்டும் மீண்டும்
கண்ணாடியைக்
காட்டுவது
சரியெனப்படுவதுதான்
பிரபஞ்சத்தின்
திரிபு முடிச்சைத்
தூக்கித் தாலாட்டுகின்றன.
00
தகித்துப்
பொறிகின்ற
ஜுவாலையின்
உச்சியில்
கூத்து
நிகழ்த்துகிற
ஆழ்மனதின்
அரிதாரத்தை
எந்தக் காற்று
எந்தக் கணத்தில்
களவாடியது
என்பது
தெரியாமல்
மண்டித்திரிகிறது
சாம்பல் துகள்கள்.
00

இயற்பெயர் க. சந்தோஷ். மனதின் ஆழ்ந்த தகித்தலால் அவ்வப்போது எழுதுகிறேன். பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக உள்ளேன்.

