தமிழாக்கம் : அரவிந்த் வடசேரி

**

இரவில்

ஒப்பனை செய்துக்கொண்டு 

மரணத்தின் நடனம்.

புகை உமிழும் 

நிலவின் ஒளி

இரத்தத்திலானதொரு ஆகாயத்தை தைத்து முடித்திருக்கிறது.

,

கருவறைக்குள்ளான அமைதி

என்பதான  பதட்டம் அது எனக் காண முடியும் நாம் அதை

நமக்கு  அருகாமையில் சாக்கடையிலிருந்து 

ஒரு நகரம்

மரணவார்ட் போன்று எழுந்துநிற்க

முயல்வது போல.

,

மக்களே மக்களே

எனக்  கதறும்

ஆம்புலன்ஸ் ஒன்று  திசை தவறி மூச்சு முட்டச் செய்யும் சிக்னலில் தடைபட்ட 

நலமாக

தலைகீழாக நிற்கிறது

அய்யோ என இவ்விரவு மரணவேதனையையும் 

மறந்து ஓடோடி வருகிறது.

,

ஆகாயம் நெருப்புத்துண்டங்களை

கீழே எறிகையிலன்றோ

அடிவயிர் வலிக்கிறது

யோனி திறக்கப்படலாம்

ஒரு நாட்டின்

மெலிந்த வரைபடம் வரக்கூடும்.                

அது கேட்கும்

நான் யார் அம்மா?

,

என்ன பெயரிடுவீர்கள் எனக்கு?

இரத்ததில் தோய்ந்த

அந்த உயிரிடம் நான் என்ன சொல்வேன்?

இந்த பதுங்கு குழியின் 

பிரசவ வார்ட் குறித்தா?

,

நெஞ்சு நனைவது 

முலை நிறைவது 

மழையினால் அல்ல

அருகிலிருந்து பொங்கி

வழியும் பச்சை இரத்ததினாலெனச்

சொல்ல  விழைந்த கருகிய உதடுகளின்  அசைபபு

முழுமையடையும் முன் ..

,

கண் சிதறிப்போன

ஒரு பிஞ்சுக்குழந்தை          

ஒரு வசந்தத்தை கால்தூக்கி கடந்து

ஓடும் காட்சியில்

அவள் எரிந்தடங்கினாள்.   

அந்த நொடியில்

ஏதோ ஒன்றை 

கூவி அழைத்தாளே..

,

ஒரு சரித்திரம்    

இடிந்த கட்டிட மிச்சங்களின்

விலா எலும்பில் தனது துண்டை

தேடிப்பிடிக்க

காயப்பட்டு

பார்க்கிறது 

தீயாக எழுகிறது.

,

யுத்தம் முடியவில்லை. 

00

அரவிந்த் வடசேரி

1964 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்த இவர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோவையில் வாழ்ந்து வருகிறார். நெடுங்கால வாசகர் எனினும் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாகத் தான் எழுதுகிறார். சொந்தமாக சிறுகதைகள் எழுதுவதோடு மலையாளம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து கதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளையும் மொழிமாற்றம் செய்துள்ளார். இவரது படைப்புகள் ஆவநாழி, இருவாட்சி, தாய்வீடு மற்றும் கலகம் இதழ்களில் வெளியாகியுள்ளது. ஆவநாழி மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் எனும் சிறுகதைத் தொகுப்பு 2023 ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. ஆவநாழி மென்னிதழின் துணை ஆசிரியராகவும் செயல்படுகிறார்.             

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *