உமிழ்ந்துவிட்டுப்போன
அவ்வார்த்தைகளைக்கூறுபோட
ஏனோ இயலவில்லை
,
நிகழ்வுகள்
நடப்புகளுக்குத்தோதாய்
ஏதும் செய்ய
எத்தனிக்கவில்லை
,
பறி கொடுத்த
பொருட்களின் மீதான
பெரும் ஏக்கம்
தீர்ந்த பாடில்லை
,
மனம்
ஒத்துழைக்க இவ்வாறான
கீழ்த்தரங்களுக்கு
அடிமைகள் பலரென
யோசனை நீள்கிறது
அவ்வாறானவர்களை
சபித்திடவும்
நேரமில்லை
,
இயங்கி
இது
முடிந்துவிட்டதோவென
ஓர் நினைவு
எழுதல் நிஜம்
,
இனி வேண்டாம்
போதும்
என ஒதுங்கி
நடக்கத்தலைப்படுகிறேன்
,
அவன்
நாடக ஆக்கங்கள்
ஒன்றும்
சரியில்லை போலும்!
………….

ரேவதி மகேஷ்
என் பெயர் எஸ்.மகேஷ் வயது 56. குடும்பத்துடன் வசிப்பது சென்னையில். சிறு வயது முதல் கவிதைகள் எழுதுவேன்.
அலுவலகப் பணிகளில் இருப்பதால் நேரம் கிடைக்கையில் ரேவதி மகேஷ், மற்றும் மகேஷ் என்கிற பெயர்களில் எழுதி வருகிறேன். பல இணைய இதழ்களில் மற்றும் சில அச்சு இதழ்களில் நவீன கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறேன்.

