நீ

இன்னும் அப்படியே

இருக்கிறாய்

கடுகளவு மாற்றம்

கண்களில் படவில்லை

உன்னில்

என்றான் அவன்

,

நீ

மிகவும் புதியவனாய்

இருக்கிறாய்

அதிசயிக்கத்தக்க மாற்றம்

அரங்கேறி இருக்கிறது

உன்னில்

என்றான் இவன்

,

அவனது பார்வையில்

ஒத்துப் போகிறேன்

இவனது பார்வையில்

முரண் படுகிறேன்

,

அவனுக்குப் புலப்பட்ட

ஒரு பக்கம்

இவனுக்குத் தென்படவில்லை

இவனுக்கு புலப்பட்ட

ஒரு பக்கம்

அவனுக்குத் தென்படவில்லை

,

பகுதிப் பகுதியாக என்னை

பகுத்துப் பார்த்தது

அவர்களின் பிழை

,

நான் நானாகவே

இருக்கிறேன்.

.

எனக்கு கவிதைகள் மீது மாறாத காதல் உண்டு. “இலையளவு நிழல்”

“புன்னகையின் நிறங்கள்” எனும் இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *