மகிழுந்தில்

செல்லும்போது

காண்பதுண்டு

;

குட்டியானை வண்டியில்

லோடு அடிக்கும்

மாடுகள்

கோமியமும்

சாணமும்‌

போட்டபடி

;

தான்

எங்கே பயணப்படுகிறோம்

எங்கிருந்து எங்கே

அடுத்தடுத்த கணங்களின்

சுமை ஏதும்

தெரியாது

;

புலம் பெயரும்

ஜீவன்கள் ‌

;

மணிக்கணக்காக

பக்கவாட்டு உரசலும்

மருட்சியான விழிகளும்

பரிதாபத்தின் உச்சங்கள்‌

;

இந்த இம்சைகள்

விலங்கின

பாதுகாப்பு அம்சங்களில்

ஏமாற்றப்படுகிறதா‌

;

கோமாதாக்களும்

முரட்டுக்காளைகளும்

ஆறறிவை நுகர்ந்தால்

நாடுகொள்ளாது‌

;

தனித்தனி அறைகளில்‌

ஜீவ இம்சை இன்றி

அழைத்துச்செல்ல

ஆசைதான்‌

;

திருந்தாத

ஆறறிவு ஜீவன்களுக்கு

அரசு பாடம்

எடுக்கட்டும்.

00

சூர்யமித்திரன் .

கவிதை சிறுகதை கட்டுரை என பல்வேறு சிற்றிதழ்களிலும் பேரிதழ்களிலும் நாற்பத்திநான்கு ஆண்டாக எழுதிவருகிறார்.  சூர்யமித்திரன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *