சிட்டுக்குருவி
சிறகடித்து
மறைந்த நன்னாளில்
பெருக்கல் குறி
மலர்ந்தது
,
சிறுவயது முதல்
பாரதி போட்ட
கைக்குத்தல் அரிசிக்கு
ஆரவாரமிட்டு
கொத்தி கொத்தி
உண்ட
,
தத்தித் தத்தி
சென்ற
சிட்டுக்குருவிகளின்
பேரினம் தரும்
கீச்சுகளில்
,
மனம்
சௌந்தர்யலஹரிகளாய்
மலர
வந்தது மின்னணு
கோபுரங்கள்
,
பேரினவாத சிட்டுக்குருவி
தன் அழிப்பில்
கழிவிரக்கம் நெஞ்சில்
சுழியமிட
பெருக்கல் குறி
சென்சார் போர்டின்
பெருங்குறி
ட்வீட் எமோஜி ஆயிற்று
,
வித்யாவும் நித்யாவும்
ஹாய் சொல்ல
கிளிக்கினேன்
,
என்னிடம்
கேட்ட கொக்கோக
கேள்விகளும்
சந்தேகங்களும்
அப்பப்பா..
,
ஆடை அவிழ்ப்பின்
அச்சங்கள்
அங்கங்கே தென்பட்ட
மச்சங்கள்
,
விரல் நுனியில்
ஆபாசப் பொருள்
அச்சுறுத்த
மௌனித்து
திரும்பினேன்
,
நினைவோடு
கிளியரை அழுத்தி
அகம் கழுவ முயற்சித்தும்
ஆபாச அழுக்கு
மனசெல்லாம்.
++
சூர்யமித்திரன் .
கவிதை சிறுகதை கட்டுரை என பல்வேறு சிற்றிதழ்களிலும் பேரிதழ்களிலும் நாற்பத்திநான்கு ஆண்டாக எழுதிவருகிறார். சூர்யமி த்திரன்.சமீபத்தில் படைப்புக் குழுமம் நடத்திய அம்மையார் ஹைநூன் பீவி நினைவுச் சிறுகதைப் போட்டியில் விருத்த சேதனம் சிறுகதைக்கு இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.