1.

ஈரத்துணி

………………..

தொடர் மழை

தொடரமுடியாத

தொழிலாளர்கள் பணி,

,

ஈரத்துணி

அவர்கள்

தலையில் மட்டுமில்லை

வயிற்றிலும் கூட..

………………

2.

தொடர் மழை

…………………..

தேங்கி நிற்கும்

தண்ணிர்

வடியவில்லை,

,

வாழ்க்கைக்கு பாதையின்றி

கண்ணீர் வடிக்கும்

நடைப்பாதை வியாபாரி.

………………

3.

மழைக்காலம்

அடுப்பு பற்றவைக்க

முடியாமல்

செங்கல்

சூளைக்காரர்.

,

வயிற்று பசியை

அணைக்க முடியாமல்

தவிக்கும்

செங்கல் சூளை

தொழிலாளி.

……………..

4.

விவசாயமுமில்லை

விலைகளும்

குறையவில்லை

நிரந்தர வேலையுமில்லை

வேலைக்கு ஏற்ற

ஊதியமுமில்லை

ஆனாலும்

மறைமுக வரிகளால்

சுமைதாங்கிகளாய்

ஏழைகள்.

……………….

5.

செயலிகளில்

வாசிக்கப்படும் புத்தகங்கள்

பாசிக்கு உணவாகும்

நூலக புத்தகங்கள்.

00

மு. பிரபு

*வேலூர் மாவட்ட இணை செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

 *வாசகர் வட்டம், மாவட்ட கிளை நூலகம். கே.வி.குப்பம்.

சமூக ஆர்வலர், கவிஞர், நூல் விமர்சகர், கவியரங்க கவிதை வாசிப்பவர். புத்தகத் திருவிழாக்களில் உரையாற்றியுள்ளார்.

இவரது கவிதை படைப்புகள்

தினத்தந்தி, இனிய உதயம், காக்கைச் சிறகினிலே, பேசும் புதிய சக்தி, ஹக்கூ தின்ணை போன்ற இதழ்களில் வெளிவந்திருக்கிறது.

கீற்று, படைப்புக்குழுமம், Bookday மின்னிதழ், காற்றுவெளி போன்ற மின்னிதழ்கள் வலைதளங்களில் இவரது கவிதைகள் வெளிவந்திருக்கிறது.

இவர் எழுதிய நூல் விமர்சனங்கள் Bookday மற்றும் கீற்று இணையளங்களில் வெளிவந்திருக்கிறது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *