குடும்பப் பெண்களும்

கொடுப்பினையற்ற நானும்.

பணமீட்டலுக்கான

நெடும்

பயணத்தின்

பிரியும் நேரம்

ஒரு சேர

அழுது நிற்கும்

நாங்கள்

எடுத்த முடிவு

இதற்கு முன்

எங்களுக்கு தெரியாததல்ல.

,

இதற்காக

கொஞ்சம் சச்சரவுகள் செய்திருக்கிறோம்.

கொஞ்சம்

சண்டைகள்

போட்டிருக்கிறோம்.

கொஞ்சம்

அழுதிருக்கிறோம்.

கொஞ்சம்

நாட்கள்

பேசிடாமல் இருந்திருக்கிறோம்

,

காலக் கரைதலின்

பயனாக

மாட்டிய

மூஞ்சுக்கூட்டால்

தொப்புள் கயிறும்

தாலிக் கயிறும்

மூக்கணாங்கயிறாகாமல் போனது

பெரும் பேறு.

,

ஒளிந்து கிடந்த

அன்பின் பொருட்டால்.

வயிற்றில் சுமந்தது

வீட்டின் கீழேயும்

மனதில் சுமப்பது

வீட்டின் மேலேயுமாக

வசிக்க

நாங்கள்

எடுத்த முடிவின்

பொழுதொன்றில்.

,

வாய்த்த

என்

அயலகப்பிரிதலுக்காக

நிறையவே

அழுகின்றோம்.

பிணக்குகளை

பின்னே வைத்து

பிறரை

வெல்ல வேண்டிய

கட்டாய

வாழ்க்கையானதால்.

***

உகந்ததாகவொரு ஊற்றுக்கண்.

,

நிராகரிப்பின்

அவதியில்

களைப்பாற்ற முடியாத

துயரத்தை

சொற்களால்

சொல்ல முடியாது

நிதானமற்ற

பிளிரலைத் தவிர.

,

கேவலுக்கு

கிடைக்காத

தோள்களால்

திக்கற்றபொழுது

பற்றிக் கொள்கிறது

பாதகமொன்று

அற்ப

ஆறுதலாக

பலருக்கு

வாழ்வைக் கொன்று.

,

யாவற்றிற்குமிடையில்

நீர்த்துப்போகாத

நம்பிக்கையின் பொருட்டால்

ஊற்றெடுக்கிறது

சொட்டுக்கலாக

சுகந்தம்.

புரிதலின் மேன்மையால்

வாழ்க்கை

தளர்வுறாமல்

சிலருக்கு

எப்பொழுதும்.

***

அப்பொழுதின் போது.

இப்படியான

பொழுதொன்றின்

மகிழ்விற்கிடையில்

அணில்

அணிலென நினைத்துவிட்டது.

நானும்

நானென

நினைத்துவிட்டேன்.

பிறகென்ன

நாங்கள்

விலக வேண்டியதாகிவிட்டது.

***

கள்ள மனம்.

நான் பார்த்த

வானம்

அசைந்து கொண்டிருந்தது.

நீந்தியது

மீனில்லை

என்பதனால்.

***

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *