ஆசைதான்
ஆகாய மார்க்க பயணம்
அந்தரத்திலிருந்து
விழுந்து விட்டால்
,
ஆசைதான்
அலைகளின் மேல் பயணம்
ஆழ்கடலில்
மூழ்கி விட்டால்
,
ஆசைதான்
மகிழ்வுந்து பயணம்
நேருக்கு நேர்
மோதி விட்டால்
,
ஆசைதான்
இருசக்கர வாகன பயணம்
அதல பாதாளத்தில்
நழுவிவிட்டால்
,
ஆசைதான்
சாலையோர நடைபயணம்
முதுக்கு பின்னால்
குத்தி விட்டால்…
,
மரணத்தின் நாழிகை
முன்பே தெரிந்தாலும்
மரண பயம் மட்டுமே
மனதில் நிலைத்தாலும்
அக்கணமே மரணிப்பது
அழகு
,
ஆகாயத்தில் பறந்து போவோம்
பறவையாக மிதந்து பார்க்கலாம்
,
அலைகளில் மிதந்து போவோம்
மீனாக நீந்திப் பார்க்கலாம்
,
மகிழ்வுந்தில் கடந்து போவோம்
மனம் புதுப்பிக்கப்படலாம்
,
இருசக்கர வாகனத்தில் பயணிப்போம்
இன்பம் கை கூடலாம்
,
அனுதினமும் நடந்து போவோம்
ஆரோக்கியம் நமதாகலாம்
,
நாளை என்பது வசப்பட்டால் தான்
நமக்கானது
ஒவ்வொரு நொடியும்
வாழ்ந்து விடுவோம்
,
அஞ்சுவதைப்போல
நடித்து வாழ்ந்தாலும்
வாழ்வதைப் போல
நடித்து அஞ்சினாலும்
,
கருணைக் காட்டப்போவதில்லை
மரணம்…
00
ஐ.தர்மசிங்
“இலையளவு நிழல்” “புன்னகையின் நிறங்கள்” என இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.
வார, மாத இதழ்களில் தொடர்ந்து எனது படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன்.