பகலில் அவன் வேறு மாதிரி ஆகிவிடுகிறான். நறுக்கி வைத்த மீசை மாதிரி கறாரான பேச்சு. வரிசை ஒழுங்கில் காரியங்கள். இப்படி இப்படியாக எல்லாமே. நேரத்துக்கு சாப்பாடு வந்துவிட வேண்டும். அதுவும் சூடாக ருசியாக வண்ணமாக. இல்லாவிட்டால் முகம் போகும் போக்கைப் பார்க்கவேண்டுமே..சகிக்காது..ஏற்கெனவே நல்ல ஜாடை..டைமன்ட் சைஸில் தலையும் ஒட்டிபோன கன்னமும். இதில் கோபம் வேறு. இப்படி அடிக்கடி அவன் முகம் காட்டி வைக்க நான் அதை சட்டை செய்யாமல் ஒதுக்கிவிட அந்த அலட்சியமே அவன் கத்துவதற்குக் காரணமாக பகலில் ஒரே சண்டைதான்.

வெளிச்சம் கண்டுவிட்டால் ஒரு ஒழுக்கவாதி அவன் உடம்பிற்குள் வந்து புகுந்து கொள்வான் போல. எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பான்.

‘’சப்பணம் போட்டு உட்கார்ந்து சாப்புடு..”

கால்நீட்டியோ குத்துக்காலிட்டோ உட்கார்வது வசதியாகப்படும் எனக்கு.

ஒதுங்கியிருக்கும் மார்பை முறைத்துப் பார்த்து ஜாடை செய்வான். எப்போதும் அதிலே கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டுமாம்.

அவனுடைய நண்பர்கள் வரும்போது அவன் மட்டுமே பேசினால் போதுமாம். நான் பதிலுக்கு பேசிக்கொண்டிருந்துவிட்டால் அவன் முகமும் பார்வையும்.

முகம் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. என் முகம் மட்டும் எப்போதும் சிரித்தபடியே பளபளன்னு இருக்க வேண்டும் என்பான். தலைமுடி முகத்தில் தொங்கக்கூடாது. உட்காரும்போது நறுவிசாக அமரவேண்டும். சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு எழுந்துவிட வேண்டும். தூங்கும்போது ஆடை நழுவக்கூடாது. குறிப்பாக உள்ளாடை மேலேறி இருக்கக் கூடாது. தேவைப்படும்போது  அவனே தூக்கிவிட்டுக்கொள்வான். ஒன்றுக்கு இருக்கும்போது அவன் மட்டும் கழிப்பறை கதவை மூடாமல் நின்றுகொண்டே போவான். நான் அப்படி உட்காரும்போது அவனுக்குப் பிடிப்பதில்லை.’’கதவைச் சாத்திட்டு உட்காரு’’ என்று பலமுறை சொல்லிவிடுவான்.

இரவானால் ஆள் அப்படியே மாறிவிடுவான். அதுவும் படுக்கையில் அவன் பேசும் பேச்சு இருக்கிறதே..வெண்டை வெண்டயாய் பேசுவான். வெளிப்படையாகவே கேட்பான். ’’எனக்கு அவளைச் செய்யணும்.. இவளைச் செய்யணும்..’’ எனக்குள் பொங்கும் காமத்தைச் சமாளிக்க முடியாமல் அவன் வாய் இப்படி உளறிக்கொண்டிருப்பது எனக்கு வெறுப்பாக இருக்கும்.

சொல்லிவிடலாமா என்று வாய் வரும்.

‘’முதலில் என்ன ஒழுங்கா செய்யமுடியுதா பாரு””

அவன் அதன் பிறகு என்ன ஆவான் என்பதை நினைத்துப் பார்த்து அப்படிக் கேட்பதைத் தவிர்த்துவிடுகிறேன்.

அவனுக்கு நினைப்பு..பெரிய மன்மதக்குஞ்சுன்னு.

அவனது வண்டவாளத்தை நான் ஒன்றும் சொல்லவேண்டியதில்லை. சமீபத்தில் இலக்கியப்பத்திரிக்கை ஒன்றில் வெளியான அவன் எழுதிய கதையை உங்களுக்குப் படிக்கக் கொடுக்கிறேன்.. பிறகு தெரியவரும் அவனது ஒழுக்கமும் அவனது லட்சணமும்.

ஓரிரவும் ஓரிதழ் தாமரையும்

இன்று கார்த்திகை பதினேழு..

அப்போ நேற்று பதினாறாம் நாள்தானே..

பதினாறாம்நாள் சண்டையைப்பற்றிச் சொல்ல வேண்டாமா!

அதற்குமுன் ஒன்று.

காலையில் ஒரு கருந்துளசிச் செடியை மண்ணிலிலிருந்துப் பிடுங்கி துளசி மாடத்தில் நட்டுவைத்து, ஒரு செக்கச்செவேலென்ற செம்பருத்திப் பூவைப்பறித்து அதன் உச்சியில் வைத்து தரையில் மாடத்தின் முன் ஒரு வெண்கோலம் இழைத்து இரண்டு பக்கமும் ஜரிகை இழுத்து அந்த இடத்தையே அழகாக்கிவிட்ட சித்ரா நேற்றிரவு முன்நேரத்தில் என் காதில் கிசுகிசுத்தது என்ன தெரியுமா..

‘’பொண்டாட்டிக்கு கொழகொழன்னு ஊறிக்கிடக்குது’’

சித்ரா இப்படியெல்லாம் பேசப்பேச எனக்குப் பின்வாங்குகிறது..

‘’பொண்டாட்டிக்கு ஸ்வீட் தருவீங்களா”’

‘’ம்..தருவேன்”

‘’எப்போ”

‘’ராத்திரிக்குதான்’’

‘’ம்கூம்..இப்பவே வேணும்..”

சும்மா பிடிவாதம்..எனக்கோ வெறுப்பு ஊறுகிறது.

டிபன் முடித்து குழந்தைகளைத் தூங்கச் செய்துவிட்டுப் பார்த்தால் அவளிடம் குறட்டை. மணி எட்டரைதான் ஆகிறது. அதற்குள் அவளுக்கு நல்ல தூக்கம்..ஸ்வீட் கேட்டவள் தன்னை மறந்து தூங்குகிறாள். ஒன்றுக்கு வருவது மாதிரி அடிக்கடி தோன்றியது. சொட்டுச் சொட்டாக இரண்டொரு முறை போகும்போது சூடாகவும் எரிச்சலாகவும் இருந்தது. மணி ஒன்பதுக்கு அவள் பக்கத்தில் படுத்தேன். நீல இரவு விளக்கு மென்மையான ஒளியைக் கசியவிட்டிருந்தது. அவள் மீது கால்போட்ட உடனே அனிச்சையாக ரவிக்கையின் கொக்கிகளைக் கழற்றிவிட்டாள். என்னை பிராவைக் கழற்றிவிடச் சொல்கிறாள். அப்படியே என் குறியைப் பற்றி மெல்ல நீவுகிறாள்.

‘’வேண்டாம்மா..பாதமெல்லாம் ஒரே எரிச்சலா இருக்குது..அப்புறமா பார்த்துக்கலாம்..’’

கொஞ்சம் திட்டவட்டாகச் சொல்லிவிட்டேன்போல..அவள் கையெடுத்துக் கொண்டது ஆச்சரியமாக இருந்தது. எப்போது தூங்கினோமோ. இரவில் நல்ல தூக்கம்.

விடியற்காலையில் அவள் கிசுகிசுத்தாள்.

‘’ஒரு குருவி ஏதோ பாடற மாதிரி கத்தறது கேட்குதா’’

‘’அப்படி ஏதும் கேட்குதா.. இல்லையே’’

‘’புள்ளைங்களுக்குப் பால் ஆத்திக்கொடுத்திட்டு வாக்கிங் போயிட்டு வரலாமா சித்ரா’’

மடை மாற்றுகிறேன் பேச்சை.

அவளுக்கு உடன்பாடில்லைபோல. எழுந்து பாத்ரூம் போய்விட்டு வந்தாள். நான் வாய் கொப்பளித்துவிட்டு வந்தேன்.

அவள் சேலையைக் கழற்றி ஓரமாய் போட்டுவிட்டு பிறந்தமேனியாய் படுத்தாள். என்னை மேலே படுக்கச் சொன்னாள்.

‘’அப்பாடி என்னா சொகம்,, செய்யவே வேணாம்..சும்மா இப்படிப் படுத்து இருந்தாலே போதும்.’’

‘’அப்படியா’’

‘’ஆமாம்..உங்களுக்கு’’

‘’எனக்கும்தான்’’

நான் முண்டிக்கொண்டிருந்தேன்..அது தானாக உள்ளே நுழைந்து கொண்டது.

‘’சும்மா அழுத்தி வச்சிக்கிங்க..நான் மெதுவா சுருக்கி விரிக்கிறேன்’’

அவள் பிருஷ்டத்தைச் சுருக்கி சுருக்கி விரிக்கிறாள். அது துடிக்கிறது.

‘’அம்மா..அது துடிக்கும்போது எவ்ளோ சந்தோஷமா இருக்குத் தெரியுமா..ஆமாம்..அப்போ உங்களுக்கும் சொகமாதானே இருக்கும்’’

‘’ஆமாமாம்’’

‘’உங்களுக்கு ஜாஸ்தியா..எனக்கு ஜாஸ்தியா’’

‘’எல்லாம் பொம்பளைங்குதானாம்..நான் சொல்லல..பாரதத்துல பீஷ்மர் பிதாமகரே சொல்லியிருப்பதுதான்’’

பிதாமகர் அனுபவிக்காமலே எப்படி உணர்ந்து சொன்னாரோ..பலே ஆள்தான்..

 ‘’யாரல வந்ததிந்த பாரதம்

‘’அட யாரால வந்ததிந்த பாரதம்

அந்த பரிமள கந்திக்கும்

பராசர முனிவருக்கும்

பொறந்த வியாச ரிஷியால வந்ததிந்த பாரதம்’’

ஒரு சாவு வீட்டில் பறை தட்டிக்கொண்டு காதை மூடியபடி ஒருவன் பாடிக்கொண்டிருப்பது கேட்கிறது.

‘’பிள்ளை உண்டாயிடும்னு பயந்துக்கிட்டு இனிமே நீங்க வெளிய எடுத்து விடக்கூடாது தெரியுதா..என்ன ஆனாலும் பரவாயில்ல..இங்கதான் விடணும்..’’

‘’இன்னும் ஒரு மாசம் பொறுத்துக்கோ..நானே பேமிலிப்ளானிங் பண்ணிக்கிறன்..அப்புறமா தூள் கெளப்பிடல்லம்’’

‘’போங்க..இதையே எத்தனை மாசமா சொல்லிட்டு இருப்பீங்க..’’

‘’இந்தவாட்டி நிஜமாவே பண்ணிக்கறேன்..’’

‘’வெளியவிட்டா உங்களுக்கு திருப்தி இருக்குமா’’

‘’அதெப்படி..உள்ளே பாய்ச்சனாதான் ஒரு திருப்தி வரும்’’

நான் இயங்குகிறேன்.

போதிய வேகமில்லை..போதிய விறைப்புமில்ல..முடிவில் போதுமான அளவில் வெளிப்படவுமில்லை.

பதினாறாம்நாள் சண்டை சும்மா பொசுக்கென்று முடிந்துவிட்டது.

காலையில் பேப்பர் படிக்கும்போது அவள் பக்கத்தில் வருகிறாள். செய்தித்தாளோடு வந்த இணைப்புப் புத்தகத்திலிருந்து ஒரு செய்தியை அவளுக்குப் படித்துக் காட்டுகிறேன்.

‘’ஓரிதழ் தாமரை இலைகளை பூவோடு மென்று தின்றுவிட்டு (விடிவதற்கு முன்பே) பசும்பால் குடித்துவர நாற்பது நாளில் சுக்கிலம் பலம் பெறும். உட்சூடு நீங்கும்…நீர்த்தாரை எரிச்சல் போகும்..சிற்றின்ப நாட்டம் அதிகரிக்கும்..’’

கேட்டுக்கொண்டிருந்துவிட்டு அவள் சொல்கிறாள் .

‘’உங்களுக்கு அப்படியே இதல்லாம் இருக்குதானே’’

நான் ஒரு மாதிரியாக அவளைப் பார்க்கிறேன்.

‘’நீங்கதானே சொன்னீங்க..பாதம் எரிச்சலா இருக்குது..வரும்போது சூடா வருது..கெட்டியாகவும் இல்ல..அப்டீன்னு..’’

‘’ஆமாமாம்..இன்னிலேர்ந்து ஓரிதழ் தாமரை சாப்பிட்டுப் பார்க்கலாமா’’

‘’செய்யுங்க..ஏதாவது செஞ்சி சரி பண்ணுங்க..உங்களுக்குப் போன மாசம் நரம்பு அம்மை வந்துச்சு இல்ல..அதுக்குப் பிறகுதான் இப்ப்டி இருக்கு..இல்லையா..’’

‘’அப்படிதான் இல்ல..’’

அம்மைப்புண்கள் காயாத நிலையில் அவளோடு உறவு கொண்டது நினைவுக்கு வந்தது..சூட்டோடு சூட்டை சேர்த்தது தப்போ..

எப்படியோ..ஓரிதழ் தாமரை பூவையும் இலைகளையும் நம்பிதான் என் இனிவரும் இரவுகள் இருக்குமோ..

என்ன..ஒழுக்கவாதியின் கதையைப்படித்தீர்களா..கதை முழுவதும் ஹீரோ ஒரு கெட்ட வார்த்தையைக்கூடப் பேசமாட்டான். அவனுடைய பொண்டாட்டி, அதாவது சித்ரா என்ற அந்தப்பெண் மட்டும் விரகதாபத்தில் எதையாவது மோசமாகப்பேசிகொண்டே இருப்பாள். ஆனால் அவன் ஒரு மோசமான பயல். எங்கூட படுத்துக்கிடக்கும்போது வாய் வெண்டை வெண்டயாய் பேச ஆரம்பித்துவிடும். கையாலாத பயல். அப்படிப் பேசுவது பிடிக்கவில்லை என்று எதிர்த்தும் சொல்லிவிட்டேன். அவன் மாறுவதாக இல்லை. அப்போதுதான் அவனுக்கு தன்னை மீறிய வெறி வருகிறதாம். அதற்காகத்தான் அப்படி பேசுகிறானாம். என்ன இருந்தாலும் ஒரு கதாசிரியன் இல்லையா..எப்படியோ எழுதித் தொலைக்கட்டும். பொழைச்சிப் போகட்டும் வெறும்பயல் என்று இதோடு விட்டுவிடுகிறேன்.

++

சுப்பு அருணாச்சலம்.

நான், சுப்பு அருணாச்சலம் என்ற பெயரில் 1998 முதல் சிறுகதைகளும் கோகிலாராஜ் என்ற பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறேன். நெய்வேலி சொந்த ஊர்.

ரேகை பதிந்த வீடு எனது முதல் தொகுப்பு 2002 -ல் வந்தது. சுந்தரசுகன் எனது யுத்தம் என்ற முதல் கதையை வெளியிட்டது. பிறகு ஆனந்த விகடன், கணையாழி,செம்மலர், சதங்கை,தினமணி கதிர் முதலிய இதழ்களில் கதைகளும் கவிதைகளும் வெளிவந்தன. 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *