சிற்றருவி

            ———————–

இருபெரும் மலைகளுக்கிடையே

இறங்கிவரும் சிற்றருவியை

சித்திரமாக்குகிறேன்

,

சாரல் தெறிக்க

சிரங்கள் சிலுப்பி

வானேகுகின்றன

கொண்டைக்குருவிகள்

            பொன்மகுடம்

           ——————————

விடியலில்

தொழுவத்தைவிட்டு

கிளம்பும்

கிடைமாடுகளில் ஒன்று

,

தன் கூரிய கொம்புகளில்

சூரியனைச்சூடி

தோரணையாய் நடக்கிறது

பொன்மகுடம் தரித்த

வனராஜன் போல.

   ஃபில்டர்காபி  பெரியவர்

————————————————

என்றைக்கும் பிரம்மமுகூர்த்தத்தில்

எழுந்துகொள்ளும் பெரியவர்

,

ஆர்மிக்காரருக்கு முன்பாகவே

பூங்காவின் நடைமேடைக்கு

வந்துவிடுபவர்

,

அம்மன் கபேவில்

ஃபில்டர் காபி ஸ்ட்ராங்காக

அருந்துபவர்

,

நாளிதழ்களை வரிவிடாமல்

வாசித்துவிட்டு

நண்பர்களிடத்தில்

விவாதம் செய்பவர்

,

என்றைக்கும்  பிரம்மமுகூர்த்தத்தில்

எழுந்துகொள்ளும் பெரியவர்

,

இன்றைக்கு

பிற்பகலாகியும்

எழுந்துகொள்ளவில்லை.

அவசர நேர பரவசங்கள்

———————————————– 

பண்பலையில் ஒலிக்கும்

துள்ளிசைப்பாடல்

,

கூந்தலில் நீர்சொட்ட

குங்குமத்தீற்றலோடு

எதிர்ப்படும்

இளம்பெண்

,

ஒழுங்கற்ற பவுடர்பூச்சோடு

புன்னகைத்துக் கையசைக்கும்

சீருடைச் சிறார்கள்

,

இராமனைப்பாடிவரும்

அனுமன் வேடமிட்டவர்

பரபரப்பான காலை தான்

பரவசங்கள்  இல்லாமல் இல்லை.

000

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *