GST ரோடு- திருப்பரங்குன்றம்

————————————————————-

16ஆண்டுகளுக்குப்பிறகு….

ஸ்கூட்டியும்

ஸ்பெலண்டரும் மேம்பாலத்தில்

நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட க்ஷணத்தில்

,

அம்மேம்பாலம் சுக்குநூறானது

,

மேம்பாலம் துவங்கிய இடத்தில் பூக்களை உதிர்த்தபடி

ஒரு புளியமரம் நின்றிருந்தது

,

அதனருகே கீற்று வேய்ந்த

பெட்டிக்கடை

அதன் மரபெஞ்சில் சைக்கிள் மிதித்த

களைப்பை மறைத்து கன்னித் தீவு வாசிப்பதாய்

பாவ்லா செய்து கொண்டிருந்தது ஸ்பெலண்டர்

,

ஸ்பெலண்டர் இருப்பதைக்

கண்டும் காணாமல்

ரெட்டைஜடைப்பின்னலை சரிசெய்தவாறு

ராயல் என்ஃபீல்டை ஏறிட்டு

பகுமானமாய்ப் போனது ஸ்கூட்டி.

000

காவல்தெய்வத்தின் கதை                

————————————————    

கண்கள் நிலைகுத்த 

கன்னத்தில் கைபதித்து  உற்சாகத்தோடு

‘ஊங்’ கொட்டிய   கடைசிச் சீவனும்  காலாவதி ஆகிவிட

,

கதைகள் அனைத்தையும்

கைப்பற்றி  அழைத்துப் போய்  

ஆழ்கிணற்றில் வீழ்ந்தான் ஆஜானுபாகுவான

கதைசொல்லி

,

சனம் பதறி  குத்தத்திற்காய் பரிகாரம் தேட  அன்று தொட்டு

எட்டாம் நாள்

,

கதைகளும்

கதைசொல்லியும் உயிர்த்தெழ  பரிவாரங்களாயின

கதைகள்-

காவல் தெய்வமானான் கதைசொல்லி

,

பிறகென்ன  ‘ஊங்’ கொட்ட ஊரே

திரண்டது  ஊதுபத்தி சூடத்தோடு.

===

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *