1.கோழிக்குழம்பின் வாசனை          

வடபழநி AVM ஸ்டுடியோவுக்கு எதிர்சந்தில் ஒரு பாடாவதி மேன்ஷனில்  வசிக்கிற

Mr.X சென்னைப் பெருநகரத்தில் திரைப்பட உதவி இயக்குநராகப்

பணியாற்றுகிறார்

,

 ஒரு ஞாயிரன்று மேன்ஷனுக்கு அருகிலுள்ள  காரைக்குடி

செட்டிநாடு  மெஸ்சிலிருந்து கிளம்பிய  கோழிக்குழம்பின் வாசனை அதிகாலையில்

அரைத் தூக்கத்திலிருந்த அவரை கிறங்கடித்து அவரது சொந்த ஊரான

சேடபட்டிக்கு அழைத்துச் சென்றது

,

 அதுமாத்திரமில்லாது  Mr.பாரதிராஜாவின்

‘பதினாறு வயதினிலே’ படத்திற்கு அழைத்துச் சென்றது

,

வைக்கோல் போர் மீதேறி

கோழி பிடிக்கும் Mr.சப்பாணி(எ) கோபால கிருஷ்ணனையும்-  தன் வீட்டுக்

கோழியை களவாடியதாக  பக்கத்து வீட்டு பெண்ணோடு சண்டையிடுகிற

Mrs.குருவம்மாளையும்-உடல்நலம் குன்றிய கோழியை  கண்ணாடிக் கார

மருத்துவரிடம் எடுத்துச் செல்லும்  Miss.மயிலுவையும் அறிமுகப்

படுத்தியது

,

 மேலும் அது அவரை  சொந்த கிராமத்திலேயே  தங்கிவிடும்படியும்

கட்டளையிட்டது

,

 அதுசமயம் அடுத்த ஞாயிரன்று  முனியாண்டி விலாசில் கொதிக்க

இருக்கும் கோழிக்குழம்பின்வாசனை  அதனருகில் மேன்ஷனில் வசிக்கும் Mr.y

மற்றும் Mr.z ஐ   கிறங்கடித்து அவர்களது

சொந்த ஊர்களான ஆண்டிபட்டிக்கும் அரசபட்டிக்கும் விரட்டியடிக்கலாம்

,

Mr.பாரதிராஜாவின் ‘மண்வாசனை’ ‘கிழக்குச்சீமையிலே’ படங்களுக்கு அழைத்துச்

செல்லலாம்

,

மேலும் அவர்களை அங்கேயே தங்கிவிடும்படியும் கட்டளையிடலாம்

000

2. உறுமியின் குரல் 

உறுமியை

வரைந்து

கொண்டிருந்தவனிடமிருந்து

தட்டிப் பறித்த காற்று

 மாயவளை குச்சியால்

 அதன் தேகம் உரச

பெருவெளியில்

 அதிர்ந்ததன் குரல்

“வ்வூ “

“வ்வூ”

3.   சில்வண்டுகளின் பாடல்

அய்யனார் கோயில்

கொல்லையில்

,

சோள நாற்று அறுவடை

,

இரைந்து செல்லும்

Indigo வை

இமைக்காது

ஏறிட்டவர்கள்

,

கடைசி வரை

கண்டுகொள்ளவே இல்லை

,

சில் வண்டுகளின் பாடலை

000

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *