பரபரப்பான சாலையில் அடிக்கடிக் குறுக்கே ஓடுவது
பெரும்பாலும் ஓட்டுநர்களாகவே இருக்கிறார்கள்,
இருசக்கர வாகனங்களில் வரும் போது
தலைக்கவசம் அணியாமல் அலைபேசியில் பேசிக் கொண்டு வருவது
கச்சிதமாகச் சீருடையணிந்த
சீருடைப் பணியாளர்களாகவே இருக்கிறார்கள்
சாலையில் ஏற்படும் நெரிசலில்
போக்குவரத்து விதிமீறல்கள்
பிரச்சனையில்
பெரும்பாலும் படித்த மேல் தட்டு மக்களே பங்கேற்கிறார்கள்,
அரசின் வரி ஏய்ப்பு நடவடிக்கையும் இப்படிதான்
நடிகர்களும், தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும்,
மதபோதர்களுமே, அதிகமாகவே
மாட்டிக் கொள்கிறார்கள்,
ஆனால் உடனுக்குடன் தீர்ப்பு வருவது,
சட்டத்தின் மூலம் தண்டனைக் கிடைப்பது என்னவோ
ஏழைப் பாட்டாளிக்கு தான்,
இரா. மதிராஜ்
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ள புதுக்கோட்டைக் கிராமத்தில் பிறந்து, கீழக்கரையில் கல்லூரிப் படிப்பை முடித்து தற்போது காங்கேயத்தில் உள்ளத் தனியார் நூல் ஆலையில் பணிபுரிகிறேன், தமிழ் இதழ்களில் கவிதை மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறேன், இது வரை கொலுசு மற்றும் காற்றுவெளி போன்ற இலக்கிய மாத இதழ்களில் எனது சிறுகதைகள் வெளி வந்திருக்கிறது, அனைத்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்பையும் வாசிக்கவும், நேசிக்கவும் செய்கிறேன் .