Call Ringing…….
“ஹலோ”
“ஹலோ, தன்யா”
“ஹ்ம்ம்….சொல்லு”
“பெங்களூர்லதான் இருக்கியா?”
“இல்ல, லண்டன்ல இருக்கேன்”
“லண்டன்லயா?”
“பின்ன, நான் பெங்களூர்லதான் இருக்கிறேனு உனக்கு தெரியாதா?”
“இப்போ ஏன் இவ்வளவு வெறுப்பா பேசுற?, நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்”
“நீ மறுபடியும் ஆரம்பிக்காதடா. எல்லாம் எப்பவோ முடிஞ்சிடுச்சு. இப்போ எதுக்கு நீ Call பண்ண?”
“உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”
“இங்க பாரு,உன் கிட்ட பேசணும்னு எனக்கு சுத்தமா தோணவே இல்ல, உன் கிட்ட பேசுறதுக்கு எதுவும் இல்ல”
“எதாவது இருக்கும் தேடி கண்டுபிடி”
“எது… புரில, தேடி கண்டுபிடிக்கவா? என்னைய டென்சன் ஆக்குறதுக்குனே Call பண்ணிருக்கியா?”
“இப்படி பேசுனா என்ன அர்த்தம்?”
“உன் மேல துளிக்கூட காதல் இல்லனு அர்த்தம். எல்லாம் தீர்ந்திடுச்சு”
“ஏன்?”
“ஏன்னா……. அது அப்படித்தான்”
“நான் உன்னைய லவ் பண்ண டைம்ல உன்னைய எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசிருப்பேனா? உன்னைய Hurt பண்ற மாதிரி நான் எந்த வார்த்தையாவது விட்ருப்பேனா”
“உனக்கு எப்படி புரியவைக்கனு தெரில. நான் வேற மாதிரி எதிர்பார்த்தேன். எனக்கு நல்ல Mature ஆன பையன்தான் வேணும்”
“நான் Mature ஆன பையன் தான். எனக்கு 30 வயசு ஆகுது”
“டேய் வயச பத்தி சொல்லலை. உன்ன லவ் பண்ணும்போது உன் கிட்ட எவ்வளவு பிரச்சனைகளை சொல்லி புலம்பிருப்பேன்? ஆனா நீ அதுக்கு எதாவது Solution சொல்லுவியா? இல்லைல, வெறுமனே நான் சொல்றதை கேட்டுக்க மட்டுந்தானே செஞ்சிக்குவ?”
“உன் பிரச்சனைக்கு நான் எப்படி Solution சொல்ல முடியும்?”
“சொல்லனும் அதுதான் Maturity, அப்படிபட்ட Maturity ஆன பையன் தான் எனக்கு வேணும். ஒரு அப்பா தன்னோட பொண்ணுக்கு எப்படி வழிகாட்டியா இருப்பாரோ அந்த மாதிரி வேணும்”
“அப்பா மாதிரி பையன் வேணுமா?”
“ஆமா”
“You mean Sugar Daddy?”
“செருப்பு பிஞ்சிடும், இப்போ நீ என்ன மயித்துக்குடா Call பண்ண?”
“அதான் சொன்னேனே, உன் கிட்ட கொஞ்சம் பேசணும்?”
“என்ன பேசப்போற, திரும்பவும் ‘வா மறுபடியும் பழகி பார்க்கலாம். இப்போ நான் மாறிட்டேன், Matured ஆ இருக்க Try பண்றேன்’ அதுதானே சொல்லப்போற”
“இல்லை, இது போன மாசம் நான் Call பண்ணும்போது சொன்னது”
“சரி அப்போ வேற என்ன புதுசா சொல்லப்போற?”
“உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். அதான் Call பண்ணேன்”
“நீ எதுக்கு எனக்கு இப்படி அடிக்கடி Call பண்ணிட்டு இருக்கனு நான் சொல்லட்டா?”
“நான் எங்க அடிக்கடி Call பண்ணேன். நீ Break Up பண்ணிக்கலாம்னு சொன்னதுக்கு அப்றம் ரெண்டு தடவ Call பண்ணி அழுதேன். அதுக்கப்புறம் ரெண்டு மாசம் கழிச்சி ஒரு தடவ Call பண்ணப்போதான் ‘வா மறுபடியும் பழகி பார்க்கலாம். இப்போ நான் மாறிட்டேன், Matured ஆ இருக்க Try பண்றேன்’ன்னு சொன்னேன். அதுக்கு “நீ எதுவும் பண்ண வேண்டாம். இனிமே Call பண்றதுலாம் வச்சிக்காதனு” சொல்லிட்டு Cut பண்ணிட்ட. அதுக்கப்புறம் இப்போதான் Call பண்றேன்”
“எப்படியும் நீ Break Upக்கு அப்புறம் நாலு தடவ Call பண்ணிட்டேல. எதுக்கு இப்படி தொடர்ந்து Call பண்ணிட்டு இருக்கனு நான் சொல்லட்டா?”
“சரி சொல்லு”
“நீ இல்லாம நான் நிம்மதியா ஹேப்பியா…………………………
“ஹலோ, ஹலோ, ஹே, எதுவும் கேட்கல ஹலோ”
00
Call Ringing
“ஹலோ”
“நீ பேசுனது எதுவும் கேட்கல. அதான் Cut பண்ணிட்டு கூப்பிட்டேன்”
“நான் என்ன சொல்லிட்டு இருந்தேன்?”
“ஏதோ நீ இல்லாம நிம்மதியானு ஏதோ சொல்லிட்டு இருந்த, அதுக்கப்புறம் கேட்காம போய்டுச்சு”
“ஹா, அதான், நீ என் லைஃப் ல இப்போ இல்ல, நான் ஹேப்பியா இருக்கேன். அதை உன்னால பொறுத்துக்க முடியல. அதனால் என்னைய Traumatize பண்றதுக்கு இப்படி அடிக்கடி Call பண்றேல”
“இப்போ எதுக்கு நீயே கேள்வி கேட்டு நீயே பதில் சொல்லிட்டு இருக்க?”
“ஏன்னா, எனக்கு பசங்கள பத்தி தெரியும். நாம இல்லாம இவ எப்படி இவ்வளவு சந்தோஷமா இருக்கானு உன்னால பொறுத்துக்க முடியாது. பசங்க மென்டாலிட்டி இது”
“சரி, நீ என்ன வேணாலும் நினைச்சிக்கோ, நான் பேச வந்த விஷயத்தை பேச விடுறியா?”
“எனக்குதான் உன் கிட்ட பேசணும்னு இஷ்டம் இல்லைனு சொல்றேன்ல”
“நீ இவ்வளவு நேரம் நீயே கேள்வி கேட்டு நீயே பதில் சொல்லிட்டு இருந்தேல. அந்த நேரத்துக்கு நான் பேசி முடிச்சி ஃபோனையே Cut பண்ணிருப்பேன்”
“சரி என்ன பேச போற? பேசு”
“அது………
“சொல்லு, பேசணும் பேசணும்னு சொல்லிட்டு பேச மாட்டிக்க”
“ம்ம்ம்ம்ம்ம்”
“என்ன இழுத்துட்டு இருக்க, என்னைய கடுபேத்தாத, பேசு இல்லைனா நான் ஃபோன வச்சிடுறேன். Bye”
“ஹே ஹே, Cut பண்ணாத Cut பண்ணாத, நான் உன் Friend-அ லவ் பண்றேன்”
“என்ன?”
“உன் Friend பார்கவி, அவள தான்”
“என்ன?”
“அதான்மா, உன் Friend பார்கவி, அவளை தான், எனக்கு ரொம்ப வருஷமா அவள பிடிக்கும்”
“என்ன சொல்ற?”
“அதான் சொன்னேனே, பார்கவி, எத்தன தடவ சொல்றது?”
“ரொம்ப வருஷமா பிடிக்குமா?”
“ஆமா, அவளை எப்படி கரெக்ட் பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கும்போது உன்னைய வச்சி அவள கரெக்ட் பண்ணலாம்னு உன் கிட்ட Deep ஆ பேச ஆரம்பிச்சேன். ஆனா நீ கரெக்ட் ஆகிட்ட. சரி சும்மா சிங்கிளா சுத்துறதுக்கு உன்னையவாவது லவ் பண்ணலாமேனு லவ் பண்ணேன். ஆனா இப்போ நீ கழட்டிவிட்டுட்ட”
“………………….”
“என்ன அமைதியா இருக்க, ஆனாலும் நீ லவ் பண்ன ஆரம்பிச்சப்போ எனக்கு உன் மேல் ரொம்ப பாசம் வந்தது. இவதான் நமக்குனு ஒரு Feel வந்தது. உனக்கு நான் உண்மையாதான் இருந்தேன். ஆனால் நீ இப்போ விட்டுட்டு போய்ட்ட. நான் என்ன பண்றது. உன் Friend பார்கவிக்கு கூட ரெண்டு நாளைக்கு முன்னால Message பண்ணேன். கொஞ்சம் பேசலாமானு கேட்டேன்.
‘உங்க கிட்ட எப்படிங்க பேசுறது. நீங்க என் Friend ஓட Ex. அப்படித்தான் உங்களை தெரியும் எனக்கு. இதுக்கு முன்னாடி எனக்கு உங்களை தெரியவும் தெரியாது. எப்படிங்க பேச முடியும்’னு கேட்டா. அவ Friend List-ல நான் எட்டு வருஷமா இருக்கேன். அது கூட அவளுக்கு தெரியலயா? ஆனாலும் அவ சொல்றதுல ஒரு Point இருக்கு. Close Friend-ஓட Ex கிட்ட பேசுறது ஒரு மாதிரி இருக்கத்தான் செய்யும். புரிஞ்சிக்க முடியுது. அதனால…..”
“அதனால….”
“நீ கொஞ்சம் அவகிட்ட பேசி இந்த விஷயத்தை கிளியர் பண்ண Help பண்ணா கொஞ்சம் நல்லா இருக்கும்”
“ச்சீ, தூ…. ஃபோன வையி”
000
பெயர் : பிரசாத் மனோ
சொந்த ஊர் : சிவகாசி
வசிப்பது : சென்னை
பணி: Content Writer