அறை எங்கும் துழாவியாயிற்று  

 எதிலிருந்து நாற்றம் வருகிறதென்றே தெரியவில்லை 

 மிகவும் அருகாமையில் உணர்கிறேன்.

 கண்களை மூடிய சில போழ்தில்

 உள்ளிருந்து நாசி வழியாக

 நாற்றம் வெளிவருவதை உணர்ந்தேன்.

,

 இந்த வாழ்வு

 மரணத்திற்காக மட்டுமே  

துடித்துகொண்டிருக்கிறது.

,

அன்பின் போதாமை அல்ல காதல்.

அதே பாதையில் பூத்த

இன்னொரு மலர்.

,

 நாய் என்பது நாயே அல்ல.

 அது ஒரு மொழிப் படலம்.

 மூடி மறைக்கப்பட்ட தினவு..

,

அறிவின் போதாமை   

பிரபஞ்ச எல்லையில்  

விரல் நழுவி செல்கிறது.

,

கால்கள் எம்மை சுமந்து

சென்ற காலம் போய்

இப்போது கால்களை நாம்.

00

சுரேசுகுமாரன்

இயற்பெயர் சுரேஷ்குமார்.வீ, கட்டுமானத்துறை பொறியாளர். உடுமலைப்பேட்டை. 2016-ல் ’விஷ ஊற்று’ என்கிற கவிதை நூல் வெளியாகியிருக்கிறது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *