சங்கிலியால் பூட்டப்பட்டு
கழட்டி விடப்படாத
யானையின் கால்களைப் போன்று
பூட்டியே கிடக்கும் மதகுகள்
,
கற்கள் எறியப்படாத
குளத்து நீராய்
சலனமற்று இருக்கும் மடைகள்
,
கண்கள் கட்டி
அரவமற்ற காட்டில்
விடப்பட்ட சிறு குழந்தை போல்
வழி தெரியாதிருக்கும்
கால்வாய் நீர்
,
நீரின்றி வெடிப்புற்று
கிடக்கும் நிலத்தில்
வளர்ந்து நிற்கும்
கருவேலி மரங்கள்
,
விவசாயம் மறந்து
பட்டாசுத் தொழிற்சாலையில்
அனுதினமும் தினக்கூலியாய்
வேலை பார்க்கும்
எம்மூர் மக்கள்
,
இப்படியே நீரின்றி
நிலமும் வீணாகிப் போனது
விவசாயமும்
கடந்து போனது…
***

கண்ணன்.க,
தொலைந்து மீண்டவன் மற்றும் மௌனத்தின் உரிமைக்குரல் என இரண்டு கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளேன்.
Wow excellent great