மௌனம்
____________
சில சமயம் மௌனமென்பது
மா கடலாகவும்
தொடர் மலைகளாகவும்
பெரு நிலமாகவும்
சிறு விதைகளாகவும்
ஏன் வெண் பஞ்சு
மேகமாககவும் கூட இருக்கலாம்
,
ஆனால் ஒன்றுமில்லாமல் மட்டும்
இருக்கச் சாத்தியமில்லை
,
அப்படி இருந்தால்
அதனை மௌனமென்று சொல்வதில்
எந்த அரத்த்தமுமில்லை
,
ஏனெனில் மௌனமாக இருந்துதான்
கடல் பெருக்கெடுக்கிறது
மலைகள் குமுறுகின்றன
நிலம் வெடிக்கிறது
விதைகள் அடர் வனமாகின்றன
வானம் முழங்குகிறது
●
அன்பின் மொழி
__________________
பிரிவின் அடர்ந்த கண்ணீர் முன்
அன்பைச் சொரியவென
இனிமையான வார்த்தைகளெதுவும்
அப்பாவிடம் இல்லை
,
அதனால் இதழ் பதிந்த
முத்தமொன்றை
மகவின் நுதல் பொட்டில்
பரிசளித்து விட்டு
வீடு திரும்புகிறார் அப்பா
,
விடுதியில் வசிக்கும் காலங்களிடை
வீட்டின் ஞாபகம் வரும்போதெல்லாம்
அப்பாவின் முத்தம்
இனி மகவை ஆற்றுப்படுத்தும்
,
முத்தமென்பது வேறொன்றுமில்லை
அது எல்லையற்ற
அன்பின் மொழியாகும்
●

ஜமீல்
இயற் பெயர் அப்துல் ஐமீல்- 1969
கிழக்கிலங்கையின் அம்பாரை மாவட்டத்திற்குட்பட்ட கல்முனை பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் மருதமுனை கிராமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஜமீல் என்ற பெயரில் 90 களிலிருந்து கவிதைகள் சிறுகதைகளென எழுதி வருகிறார்.
இதுவரை 11 கவிதைப் பிரதிகளை வெளியிட்டுள்ள இவர் கவிதைக்கான உயரிய விருதுகளான இலங்கை அரசின் சாஹித்ய மண்டல விருது கிழக்கு மாகாண சாஹித்ய விருது கொடகே சாஹித்ய மண்டல விருது அத்தோடு வைரமுத்து அறக்கட்டளையால் வருடம் தோறும் வழங்கப்பட்டு வரும் கவிஞர்கள் திருநாள் விருதையும் 2017 ம் ஆண்டு பெற்றுள்ளார்
அத்துடன் சிங்களம், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி ஆகிய பிற மொழிகளிலும் இவரது கவிதைகள் மொழிமாற்று செய்யப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது
வாழ்வியலின் போகுகளை தன் கவிதைகளில் நுண்ணிய மொழியழகுடன் தயாரித்திருப்பது வாசகனின் மனசுக்குள் வாசனை