மாலை 6 மணி அன்று அந்த அரசு மருத்துவமனையில், டாக்டர் அனிதா வேலை முடிந்து கிளம்பும் நேரம், .அந்த ஊரில் உள்ள பஞ்சாயத்து தலைவரின் மகள் லக்ஷ்மி மிகவும் சீரியஸ் ஆன நிலையில் கொண்டு வரப்பட்டாள். அவரோடு அவர் அம்மாவும் வந்திருந்தார்.. அது அவளுக்குத் தலைகர்ப்பம்.. எட்டு மாதம் ஆகியிருக்கும். முன் கூட்டியே பிரசவவலி எடுத்து விட்டது என்று நினைத்த போது, அவர் வந்த வேளை கொஞ்சம் ஆபத்தானா சூழ்நிலை மாதிரி தெரிந்தது.
தொடர்ச்சியான, ஆனால் கடுமையான இருமல் அதில் இரத்தமும் மிகுந்த சளியுடன்(frank bloody expectoration)வெளிப்படையான இரத்தக்களரி கசிவு)உடன் வந்தார். நல்ல வேளை நான் மற்ற டாக்டர்களை விட அனுபவம் அதிகம் என்பதால், ட்ரீட்மென்ட் கொடுத்து கண்ட்ரோல் பண்ணி அனுப்பி விட்டேன்.
கடந்த அஞ்சாறு மாதங்களாக மருத்துவமனையில், என்னிடம் வழக்கமான பரிசோதனைக்கு வந்து கொண்டிருந்தவர் தான். லக்ஷ்மி. ஊரில் ஆதிக்கச் சாதியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவரின் ஒரே மகள். கணவர் வெளிநாட்டில் உத்தியோகம். மாத மாதம் செக்அப் நல்லபடியாகத் தான் போய்க்கொண்டிருந்தது. 34 வது வார முடிவில் ரெகுலர் செக்ப்க்கு வந்த போது கொஞ்சம் அனமிக்காகக் காணப்பட்டார். வழக்கமான இரத்த பரிசோதனையில் அசாதாரனங்கள் அதாவது no abnormalities. தென்படவில்லை. “தெம்புக்கு டானிக் மற்றும் பழங்கள் சாப்பிடுங்க!” “நீங்கள் இரண்டு வாரம் கழித்து வழக்கமான பரிசோதனைக்கு வந்தால் போதும்” அப்போது டெலிவரி ஆகிவிடும் என்று அவரை அனுப்பி விட்டேன்.
ஆனால் அந்த இருமலுக்கு என்ன காரணம்? நிச்சயம் கண்டுபிடிக்க வேண்டும். ஒருவேளை அது டி. பீ யா இருக்குமோ? இல்லை வேறு காரணம் இருக்குமோ? என்று நானும் இன்னொரு பெண் மருத்துவரும் விவாதித்துக் கொண்டோம். ஆனால் இந்த இருமலும் ரத்தக்கசிவும் கொஞ்சம் சீரியஸ் ஆன விஷயமாக எனக்குத் தென்பட்டது. இன்னொரு மருத்துவரும் அதை உறுதிப்படுத்தினார். ஆனால், எப்படி மேற்கொண்டு இன்வெஸ்டிகேஷன் தொடரமுடியும் டாக்டர்? என்றார் அந்தப் பெண் மருத்துவர். “நீங்க சொல்வது சரி தான்.” “எக்ஸ்ரே, ஸ்கேன் இந்த மாதிரியான கர்ப்பகாலத்தில் எடுக்கக் கூடாது. இன்வெஸ்டிகேஷன் பண்ண முடியாமல், அது தடையாக இருந்தது.. ஆனாலும் எனக்கும் அந்தப் பெண் மருத்துவருக்கும் கம்ப்ளீட் இன்வெஸ்டிகேஷன் அவசியம் தேவைப்படுகிறது என்று நினைத்து, அந்தப் பெண்ணின் அம்மாவிடம் மிக விளக்கமாக விவரித்தோம்.
நீண்ட விளக்கத்துக்குப் பிறகு பெண்ணைப் பெற்றவர்களிடமும், அனுமதி வாங்கிஒரு லீட் ஷீல்ட் மூலம்,அவர் வயிறை முற்றிலும் கவர் பண்ணி, மிக ஜாக்கிரதையாக ஒரு எக்ஸ்ரே மார்பு பகுதியில் எடுத்துவிட்டோம். ஒரு சில மணி நேரம் சென்ற பின் எக்ஸ்ரே பார்த்ததும் எங்களுக்குப் பேரதிர்ச்சி. எக்ஸ்ரே பார்த்தபோது அதில் டி. பி இல்லை; ஆனால் நுரையீரலில் ஒரு இடத்தில் ஒரு பெரிதான கட்டி இருந்தது. இந்தக் கட்டி முற்றிய கேன்சரின் அறிகுறி. எந்த நேரத்திலும் ஆபத்து வர கூடிய நிலையில் உள்ளது எனத் தெரிந்தது. டெலிவரி அருகில் இருப்பதால் அவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் மேல் சிகிட்சை தொடர முடிய வில்லையே தடையாக உள்ளதே.என்று கவலைப்பட்டோம்.
இப்போதைக்கு அந்தப் பெண்மணியின் உடம்புநார்மலாக உள்ளது. எனவே டெலிவரி ஆனவுடன் பார்த்துக்கொள்ளலாம் என்று அமாதனப்படுத்தி அனுப்பி விட்டோம்.. 36 வார முடிவில் திட்டமிட் படி குழந்தை சிசேரியன் மூலம் எடுத்த பின்பு ,அந்தப் பெண்மணியைப் பாதுகாப்பு பண்ணிவிட்டு, பின் ஒரு வாரத்தில், சென்னை செல்லலாம் அங்குத் தான் வசதிகள் உள்ளது என்றும் அறிவித்தோம். நி
னைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்று கண்ணதாசன் சரியாகத் தான் சொல்லி உள்ளார். இங்குதான் விதி விளையாடியது. மனிதன் ஒன்று நினைக்கக் கடவுள் ஒன்று நினைப்பார் என்பது போல், அந்தப் பெண் அடுத்த இரண்டாவது நாளிலேயே ஒரு இரவு வலி வந்து பனிக்குடம் உடைந்துவெளியே சவ்வு உடைந்த நிலையில், ரத்தப்போக்கு அதிகமான நிலையில் அழைத்து வரப்பட்டார். அதிக ரத்தம் சேதமாகி கொண்டிருந்தது. அவர் ரொம்ப ரத்த சோகையில் இருந்தார்.
மருத்துவமனையின் பிரசவ வார்டில் இரவு பத்து மணி.மெல்லிய ட்யூப் லைட் வெளிச்சத்தில் உபகரணங்களின் பீப் சத்தம், காரிடாரில் விரைந்து நடக்கும் நர்ஸ்கள் — அவசர சூழ்நிலைய.காண்பித்தது. \ தாயையும், குழந்தையும் காப்பாற்ற வேண்டும் என்றால் உடனடியாக அவசர சிசேரியன் பண்ணுவது என்று முடிவெடுத்து, அதற்கான ஏற்பாடுகளை வேகமாகச் செய்து கொண்டிருந்தோம்.
அந்தப் பெண்மணி அதிக ரத்தம் சேதமானதால் மிகவும் அனிமிக் ஆக இருந்ததால் சர்ஜரி ஆரம்பிக்கும் முன்பு. ஒரு யூனிட் ரத்தம் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே நினைத்து நான். டூட்டி நர்சிடம் ரத்த வங்கிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கும் தகவல் கொடுக்கச் சொல்லியிருந்தேன். திடீரென மிகுந்த ரத்தச் சிந்தல்.லக்ஷ்மியின் முகம் வெளிறியது, சுவாசம் மந்தமடைந்தது., ECG-யை பார்த்த எனக்கு அதிர்ச்சி — “BP drop ஆகுது…இதயத் துடிப்புக் குறைகிறது. உடனடி இரத்தமாற்றம் தேவை. உடனே AB Positive ரத்தம் வேண்டும்!” “நர்ஸ் ஏற்பாடு பண்ணிட்டீங்களா? சீக்கிரம்.” என்று அவசரப்படுத்தினேன்.
அந்த ஊரில் ஒரு தன்னார்வ இரத்த தான இயக்கம் இருந்தது. அதற்கும் ரத்த வங்கிக்கும் மறுபடியும் போன் செய்தார் டூட்டி நர்ஸ். ரத்த வங்கி கை விரித்து விட்டது. ஏ பி .பாசிடிவ் ரத்தம் தேவை என்று சொன்னவுடன் தன்னார்வ தொண்டிலிருந்து சில நிமிடங்களில், 25 வயது.டோனர் அரவிந்த் வந்து சேர்ந்தான். “என் ரத்தம் AB பாசிடிவ் நான் ரத்தம் தருகிறேன் டாக்டர்” என்றான் அரவிந்த் உறுதியுடன். எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இரவு பகல் பாராமல் அளப்பரிய இரத்ததான தொண்டு செய்து வரும் நிறுவனம் என்பது ஆஸ்பத்திரியின் டாக்டர்களுக்குத் தெரியும்.
அந்தச் சமயத்தில் அப்பெண்ணின் அப்பா அவசரம் அவசரமாக வந்தவர் என்னிடம்”. டாக்டர் என் பெண்ணிற்கு என் ஜாதி டோனர் தான், ரத்தம் கொடுக்கவேண்டும். கண்ட ஜாதிகாரன் கொடுக்கக்கூடாது” என்று சப்தமும் கட்டளையும் போட்டார். அதோடு அவனை வெளியில் விரட்டிவிட்டார். இந்த நூற்றாண்டில் இப்படியும் நடக்குமா? இதைச் சொன்னால் இங்கு யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் அது தான் நடந்தது.. எனக்கு அதிர்ச்சியும் மனவலியும் கோபமும். வந்தது.
வெங்கடேசன் ஐயா, ரத்தத்துக்கு ஜாதி கிடையாது. பொருத்தம் என்பது blood group, Rh factor மட்டுமே.” “நீங்கள் டோனர்-ஐ தேடிப் போகும் ஒவ்வொரு வினாடியும், உங்கள் மகளுக்கும், பிறக்காத குழந்தைக்கும் உயிர்-மரணம் இது தான் வித்தியாசம்.” நான் அவருக்கு எவ்வளவோ பொறுமையாக ,விளக்கமாகச் சொன்னபோதும் மறுத்துவிட்டார். மிகவும் கடுப்பாகி உங்களுக்கு உங்கள் மகள் உயிர் முக்கியமா.. உங்கள் ஜாதி முக்கியமா…என்று கோபமாகத் திட்டி விடும் நிலை ஆனது. “சாதி மதப் போதை தலைக்கேறி நீங்களும் உங்க ஜாதிக்காரங்களும் ஒரு நாள் மிருகத்தின் எச்சம் என்பதைஎன்றும் மறக்காதிங்க? “ என்று கத்திவிட்டேன் நான் டாக்டர் என்பதை மறந்து.
“என்னங்க இந்த நேரத்திலே சாதி பத்தி பேசிக்கிட்டு நம்ம பொண்ணு உயிர் முக்கியம் “சம்மந்தி வீட்டுக்கும் மாப்பிள்ளைக்கும் என்ன பதில் சொல்ல போறீங்க? அவர் மனைவி கெஞ்சினாள். “மரியாதையா நீ போயிடு. அது எப்படி இவ்வளவு வருஷம் கட்டிக் காத்த சாதி பெருமையை விட்டுக் கொடுக்க முடியும்?” “நம்ம கிட்ட விவசாய வேலை செஞ்சவனின் மகன் ரத்தம் நம்ம பொண்ணு உடம்பிலா,?” ஒருவேளை நீங்க கொண்டு வரும் ரத்தம் செலுத்துவதற்குள் மரணம் வரும் முன்னாடி, சாதி போதை யாருக்கும் உதவாது, ஐயா.” “அப்படிப் போகாது“. அவர் எதற்கும் மசியவில்லை. அவர் எங்கெங்கோ தன் ஆட்களை அனுப்பினார். தானும் புல்லட் எடுத்து கிளம்பினார். அரை மணி,நேரம் கடந்து போனது. அந்தப் பெண் உயிர் போகக்கூடாது. இனி தாமதிப்பதில் பிரயோசனமில்லை. அந்தச் சில நிமிடங்கள் உயிருக்கும் மரணத்திற்கும் இடையிலள்ள இடைவெளி.
குழந்தையின் இதயத்துடிப்பு மானிட்டர் எண்கள் குறைந்து, லக்ஷ்மியின் பல்ஸ் சரிந்து கொண்டிருந்தது. “அரவிந்த், இரத்ததைக் கொடுத்த பின்பு லக்ஷ்மிக்கு ஏத்துங்க” நர்ஸ். இனி நேரம் வீணாக்க முடியாது. நான் லீகல்ரெஸ்பொன்சிபிலிடி எடுத்துகிறேன்.” என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.” “நான் ஒரு உயிரை மட்டுமல்ல இரண்டு உயிர்களையும் காப்பாற்ற வேண்டிய கடமை உணர்ச்சியில் இருக்கேன்”. நடப்பது நடக்கட்டும் என்று அரவிந்தின் ரத்தத்தை அப்பெண்ணிற்குக் கொடுக்கப்பட்டது. சிசேரியன் மூலம் குழந்தையையும் தாயையும் இறைவன் அருளால் நல்லபடி காப்பாற்ற முடிந்தது…
அரைமணி நேரத்தில், வெங்கடேசன் திரும்பி வந்தார். என் சாதிலே AB Positive கிடைக்கலை. நகரத்து ரத்த வங்கியிலும் இல்லன்னு சொல்லிட்டாங்கா.…” அனிதா அமைதியாக —“உங்கள் மகளையும் குழந்தையையும் காப்பாற்றியது, நீங்கள் மறுத்த அந்த இளைஞனின் ரத்தம் தான்.” “தானத்தில் சிறந்தது அன்னதானமும், இரத்ததானமும் என்போம்.” “ஏனேனில் இது இரண்டில் தான் ஜாதி மதம் உயர்வு தாழ்வுக்கு இடமில்லை என்போம்.” “எனினும் அன்னதானத்தினல் கூடச் சில இடங்களில், ஜாதி தலைதூக்கியதால் “சமபந்தி போஜனம்”நடத்தவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம்.”.ஆனால் இரத்ததானத்தில் அப்படி எங்கும் இல்லை. ஆனால் இரத்ததானத்திலும் ஜாதி பார்த்த ஒரு ஈனப்பிறவியைச் சந்தித்தது தான் என் மருத்துவ வாழ்வில் நான் மிகுந்த மனவலி அடைந்த தருணம்..
ஶ்ரீ ராமானுஜர்,பாரதியார், அம்பேத்கர் ,பெரியார் போன்றவர்கள் சாதி இல்லை எல்லோரும் சமம் தான் என்று சொல்லிவிட்டுப் போயிருந்தாலும் நீங்கள் இன்னும் மாறாமல் அப்படிதான் இருக்கிறீர்கள். வேரறுக்க வேண்டிய சாதி விஷ செடியை மீண்டும் மீண்டும் துளிர் விட வைக்கிறீர்கள்.
வெங்கடேசன் தலை குனிந்து, கண்களில் கண்ணீரோடு அரவிந்தை நோக்கி — “மன்னிச்சிடு அரவிந்த் … நான் தவறாக நினைத்தேன். உயிருக்கு ரத்தம் தான் முக்கியம். சாதி, மதம், மொழி ஒன்றும் பொருள் இல்ல.” அரவிந்த் புன்னகையுடன் — அய்யா… ரத்தம் எப்போதும் சிவப்புதான். அதுதான் நம்ம எல்லாரையும் இணைக்கும் ஒரே நிறம்.” பல ஆண்டுகளாக அவரிடம் இருந்த சாதி போதை, அந்த ஒரு சிவப்பு பாய்ச்சலால் அழிந்தது. .பத்து நாள் கழித்து லக்ஷ்மி சென்னை அடையார் புற்று நோய் மையத்துக்கு அனுப்பபட்டு .பின்னாளில் அவர் முழுமையாகக் குணமாகி நலம் பெற்றார் என்பது தனிக் கதை.
000

ஆனந்த் ஶ்ரீனிவாசன்
வயது 76. ஓய்வு பெற்ற அஞ்சல் துறை உயர் அதிகாரி. கடந்த நான்கு வருடங்களில் 125 கதைகள் எழுதப்பட்டு பல் வேறு பத்திரிக்கையில் பிரசுரம் கண்டுள்ளன. இது வரை 6 கதைத் தொகுப்புகள் வெளியிட்டு உள்ளேன்.
மறுக்க முடியாத உண்மையும் மற்றும் அதை நினைத்து வருந்தாமல் இருப்பதுமே காலத்தின் கொடுமை. ஆம், திரு ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் இக்கதையின் வாயிலாகத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார். அனைவரும் தங்களது மனதில் எதைப்பற்றி என்றுதானே யோசிக்கிறீர்கள்? அது வேறு ஒன்றுமில்லை, மனிதர்களுக்கு இடையில் பேதம் பார்ப்பது இன்றும் ஆங்காங்கே நடந்தவண்ணமாகத்தான் இருக்கிறது.
நவீனமயம் என்று மார்தட்டிக்கொள்ளும் அனைவரும் அடிப்படையில் ஒன்றை மறந்துதான் போய்விடுகிறோம். தன் குடும்பம், தனது சாதி என்று வரும்போது வேறு எந்த சிந்தனையும் ஓடுவதில்லை. ஒரே ஒரு எண்ணமானது மனதில் குடிகொள்கிறது, இந்தச் சாதியை எப்படி காப்பாற்றுவது என்று. “சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்று அன்றே பாரதி பாடிவிட்டுப் போய்விட்டான். ஆனால், இன்றும் நாம் சாதியை பிடித்துத் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறோம்.
மனிதர் மத்தியில் இரத்தம் பொதுவானது என்ற புரிதல் எப்போது, எந்தக் காலத்தில் சக மனிதர்கள் மத்தியில் புரிந்துகொள்ளப் போகிறார்கள்?
இன்று அதிர்ச்சிகரமான சம்பவங்கள் இந்தியா முழுவதும் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் நடக்கத்தான் செய்கின்றன. இதை எப்படித் தடுப்பது? யார் போதிய புரிதலை மக்கள் மத்தியில் கொண்டுவருவார்கள்? இந்த மனித பேதத்தைப் பற்றிப் பேசும் சிறுகதையாக நமக்கும் தந்துள்ளார் எழுத்தாளர் திரு. ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள். வாழ்த்துகளும் பாராட்டுகளும் அவருக்கும் மற்றும் இதனைப் பிரசுரம் செய்த நடுகல் இணைய இதழ் குழுமத்திற்கும்.
-பாலமுருகன். லோ –

மறுக்க முடியாத உண்மையும் மற்றும் அதை நினைத்து வருந்தாமல் இருப்பதுமே காலத்தின் கொடுமை. ஆம், திரு ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் இக்கதையின் வாயிலாகத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார். அனைவரும் தங்களது மனதில் எதைப்பற்றி என்றுதானே யோசிக்கிறீர்கள்? அது வேறு ஒன்றுமில்லை, மனிதர்களுக்கு இடையில் பேதம் பார்ப்பது இன்றும் ஆங்காங்கே நடந்தவண்ணமாகத்தான் இருக்கிறது.
நவீனமயம் என்று மார்தட்டிக்கொள்ளும் அனைவரும் அடிப்படையில் ஒன்றை மறந்துதான் போய்விடுகிறோம். தன் குடும்பம், தனது சாதி என்று வரும்போது வேறு எந்த சிந்தனையும் ஓடுவதில்லை. ஒரே ஒரு எண்ணமானது மனதில் குடிகொள்கிறது, இந்தச் சாதியை எப்படி காப்பாற்றுவது என்று. “சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்று அன்றே பாரதி பாடிவிட்டுப் போய்விட்டான். ஆனால், இன்றும் நாம் சாதியை பிடித்துத் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறோம்.
மனிதர் மத்தியில் இரத்தம் பொதுவானது என்ற புரிதல் எப்போது, எந்தக் காலத்தில் சக மனிதர்கள் மத்தியில் புரிந்துகொள்ளப் போகிறார்கள்?
இன்று அதிர்ச்சிகரமான சம்பவங்கள் இந்தியா முழுவதும் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் நடக்கத்தான் செய்கின்றன. இதை எப்படித் தடுப்பது? யார் போதிய புரிதலை மக்கள் மத்தியில் கொண்டுவருவார்கள்? இந்த மனித பேதத்தைப் பற்றிப் பேசும் சிறுகதையாக நமக்கும் தந்துள்ளார் எழுத்தாளர் திரு. ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள். வாழ்த்துகளும் பாராட்டுகளும் அவருக்கும் மற்றும் இதனைப் பிரசுரம் செய்த நடுகல் இணைய இதழ் குழுமத்திற்கும்.
-பாலமுருகன். லோ –