“மிஸ்டர் அஹுஜா ஹௌ ஆர் யூ டூயிங்? ஹோப் யூ ஆர் டூயிங் குட்”
“ஆம் நல்லா இருக்கேன்”,
“மிஸ்டர் கேல்கர் ஹௌ அபௌட்டு யூ?
“நானும் நல்லா இருக்கேன்”
“உங்க தொழில் எப்படிப் போயிட்டு இருக்கு? நான் கேள்விப்பட்டேன் உங்க தொழிலிலும் நிறையப் போட்டி வந்துடுச்சாமே!” என்றார் கேல்கர்.
“கேல்கர் எந்தத் தொழிலில் போட்டி இல்ல இந்தத் தொழிலில் அது இல்லாமல் இருக்க”. எல்லாத்தையும் கடந்து வர வேண்டியதா இருக்கு.”
அஹுஜா, பெர்ஃபெக்ட் மார்கெட்டிங் என்ற பெயரில் நிறுவனத்தை வைத்து நடத்தி வந்துகொண்டு இருக்கிறார். அவரது நிறுவனத்தில் சுமார் இருபது நபர்கள் வேலை செய்கிறார்கள். இவர் குறிப்பாக வெளி நாடுகளிலிருந்து. அதி நவீன மெஷினரியை இங்கு இந்தியாவில் உள்ள பல முன்னனி நிறுவனங்களுக்கு அதனுடைய பலன்களை எடுத்துரைத்து, பரிந்துரை செய்து வாடிக்கையாளரை வாங்கும் படி செய்வது அஹுஜாவுக்குக் கை வந்த கலை. ஒவ்வொரு வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப அஹுஜா வெளிநாடுகளில் உள்ள மெஷினரியை தேர்ந்தெடுத்து இங்குள்ளவர்களுக்குப் பரிந்துரைச் செய்வது வழக்கம். ஏதாவது புதிய மெஷினரி மேனுஃபேக்சரரை தொடர்பு கொண்டு இவருடைய அறிமுகத்தை அவர்களிடம் பரிமாறிக்கொண்ட பிறகு. அந்த வெளிநாட்டு மெஷினரி மேனுஃபேக்சரரிடம் . இது போன்று இங்கு இந்தியாவில் ஒரு வாடிக்கையாளர் இருக்கிறார், அவர்களுக்கு உங்க மெஷினரி தான் வேண்டும். ஏனெனில் அவர்களின் விருப்பத்தற்கு ஏற்ப உங்களிடைய மெஷினரி உள்ளது என்பதாலேயே நான் உங்களைத் தொடர்பு கொள்கிறேன் என்று விரிவாக எடுத்து உரைத்த பிறகு, அவர்களுடைய சம்மதத்தையும் பெறுவார்.
***
பிறகு இவருடன் அந்த வெளிநாட்டு நிறுவனம் கை கோர்த்து நடை போட ஆரம்பித்துவிடும். இவரது நிறுவனம் அந்தப் பெரிய வெளிநாட்டு நிறுவனத்துடன் ஓர் உடன்படிக்கையைக் கையெழுத்து இட்ட பிறகு. பரஸ்பரம் நிலவிய பின், இவருடைய நிறுவனம் அந்த வெளிநாட்டு நிறுவனத்துடைய ஏஜென்சியாக உருமாறுகிறது. இதற்கு அப்புறம் இந்தியாவிலிருந்து எந்த மெஷினரி அந்த வெளிநாட்டு நிறுவனத்திடம் வாங்கினாலும் இவருடைய பங்களிப்பு இல்லாமல் இருக்காது. அஹுஜா ஒரு திறமைசாலி, எடுத்த காரியத்தை எப்படியாது முடிப்பது, போராடி ஜெயிக்கும் குணம் உடையவர். என்ன ஒன்னு அவருக்கு அறிமுகமே இல்லாத ஒரு ப்ராடக்ட் இருந்தாலும் சரி, அவர் அந்த நிறுவனத்தின் இணையத் தளத்தில் போய் அவர்களுடைய முழு விவரத்தை முதலில் அறிந்து கொள்வார். பின் இந்தியாவில் உள்ள பெரிய வாடிக்கையாளரிடம் பல முறை நேரில் சென்று அல்லது போன் மூலம் தொடர்பு கொண்டு மெஷினரியின் முழு விவரத்தையும் பேசி பேசி வாடிக்கையாளருக்கு புரியவைப்பார். எல்லா வாடிக்கையாளருக்கும் பிள்ளையார் சுழி போடுவது இவரே. ஆனால் அடுத்து அடுத்து வாடிக்கையாளர் தொடர்புக்கு இவரிடம் பணி புரியும் நபர்களே செல்வார்கள்.
பணி புரியும் நபர்களுக்கும் அஹுஜா தகுந்த ட்ரைனிங் கொடுப்பார், அவருடன் கூடவே அழைத்துச் செல்லுவார் வாடிக்கையாளரிடம். அவரிடம் வேலை செய்பவர்கள், இரண்டு மூன்று முறை அவருடன் கூடச் சென்றாலே போதும் அவரது நெளிவுச் சுழிவு எல்லாம் கற்றுக்கொள்வர் ஒவ்வொருவரும் படிப்படியாக. என்ன பல இடங்களில், இடத்திற்கு ஏற்ப சில பல பொய்களையும் சொல்ல நேரிடும் உண்மையுடன் சேர்ந்து. விற்பனை பிரிவில் உள்ளவர்கள் இதையும் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தில் தான் உள்ளனர்.
***
அஹுஜா இப்போது தான் அவரது சொந்த நிறுவனத்தைத் துவங்கியிருக்கிறார். இதற்கு முன்னதாக இது போன்று வேறு ஒரு நிறுவனத்தில் ஒரு பெரிய பொறுப்பிலிருந்தவர். பல வருடங்கள் அதே நிறுவனத்தில் வேலை செய்து நன்மதிப்பையும் பெற்ற பிறகு. காரியம் கை கூடி வரும் என்று அறிந்தவுடன் அந்த நிறுவனத்திலிருந்து வெளிய வந்து, தானாக ஒரு நிறுவனத்தைத் துவங்கியதிலிருந்து இன்று வரை ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. அஹுஜாவை பல வருடத்திற்கு முன்னதாகப் பார்த்த கேல்கர் மீண்டும் அஹுஜாவை பார்ப்பது இப்போது தான். அதனாலேயே அவர் பரஸ்பரம் விசாரித்த உடனே ஏதோ கேல்கருக்கு அரசல் புறசலாகத் தெரிந்த விஷயத்தைப் பற்றியே கேட்க நினைத்து அஹுஜாவிடம் பல கேள்விகளைக் கேட்டார் கேல்கர்.
“கேல்கர் ஏதோ கேட்க வந்த மாதிரி தெரியுது. ஆனால் கேட்க தான் மாட்டேங்கிற”
“ஆமாப்பா எப்படி உன்னிடம் கேட்பது என்ற தான் தயங்கினேன்”
“இதில் என்ன இருக்கு கேல்கர் தொண்டை வரைக்கும் வந்துருச்சு! பின் என்ன கேட்டுவிட வேண்டியது தானே.”
“அதாம்பா உன்னுடைய நிறுவனத்தில்.”
“சரி, என்னுடைய நிறுவனத்தில் என்ன?”
“ஏம்மா அஹூஜா உன்கிட்ட ஒரு தொழிலாளி?”
“எந்தத் தொழிலாளியை பற்றிக் கேட்கிற?”
“அதாம்பா தீபக் இருந்தானே! அவன் தான்”
“அவனுக்கு என்னப் இப்போ?”
“இல்ல உன்னையே பகைச்சுக்கிட்டு உன்னுடைய போட்டியாளரிடம் போய்ச் சேர்ந்துட்டானாமே!” உண்மையா?
***
”கேல்கர் அந்த நாயைப் பற்றி ஏன் இப்ப நினைவுப்படுத்துற. அவன் என்ன மோசம் பண்ணிட்டு போய்ட்டான். அவனெல்லாம் நல்லா வாழ்ந்திடுவானா? நீ வேணாப்பாரேன்! எண்ணி மூணு மாசம் மறுபடியும் இங்கு என்னிடம் வந்து கெஞ்ச தான் போறான்? நாசமா தான் போவான். என்னை ஏமாற்றி விட்டு இப்படிப் போனவனெல்லாம் நல்லா இருக்கமாட்டான். என்கிட்ட இருந்து தொழிலை கற்றுக்கொண்டு எனக்கே ஆப்பு வைக்க அவனுக்கு எவ்வளவு தைரியம். அவனை நான் சும்மா விடமாட்டேன், எங்க போகப் போறான். இங்கே, அங்கே என்று போனாலும் கடைசயில் என்கட்டத்தான் வரப்போறான்”.
“அஹூஜா ஏன் இவ்வளவு கோபம் உனக்கு, அத்தனை ஆத்திரம் உடம்புக்கு ஆகாது. அவனை நீ ஏன் சபிக்கற? உன்னைப் பார்த்து தான் அவனும் இந்த முடிவுக்கு வந்துட்டான் போல! “
“என்ன சொன்ன கேல்கர்?”
”இல்லப்பா நீயே மற்றவர்களுக்கு ஒரு பெரிய உதாரணம். முதலில் நீ கடந்து வந்த பாதையைச் சற்று திரும்பி பார். அவ்வளவு நாள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தாய். யாரும் எதிர் பார்காத சமயமா பார்த்து அந்த நிறுவனத்திலிருந்து வெளியே வந்து ஒரு புதிய நிறுவனத்தை நீயே துவங்கினாய். அதற்கும் இதற்கும் என்ன பெரியதாக வித்தியாசம் உள்ளது”.
“நீ என்ன சொல்ல வர?” என்னோட அனுபவம் அவனுடைய வயசு. நானும் அவனும் ஒண்ணா? சும்மாவாக்கும் ஏதாவது உளறாத. இந்த ஐஞ்சு வருஷமா அவனுக்கு என்னவெல்லாம் செஞ்சுருப்பேன்! என்ன குறை வைத்திருப்பேன். போக வர வண்டி, தங்குவதற்கு நல்ல வீடு, நிறைவான சம்பளம் இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம். அவனுக்கு மனசு எப்படி வந்தது?”
***
”உன்னிடம் நிறையத் திறமை இருக்கு அவனை எல்லாம் நீ போட்டியா நினைக்கக் கூடாது. விட்டுட்டுப் போயேன் பொழச்சுப் போறான். உனக்குத் தெரியாதா! “மன்னிப்பு கேட்பவன் மனிதன், மன்னிக்கத் தெரிந்தவன் பெரிய மனிதன். நீ அவனை மன்னித்துவிடு”.
“இதை நீ எண்ணிப் பார்க்க வேண்டும். தீபக் உன்னிடம் இருக்கும் வரை உண்மயாகத்தான் இருந்தான் அல்லவா!”
“ஆமாம்”
”தீபக்குடைய செயலில் ஏதாவது குத்தம் கண்டுபிடித்தாயா? அவன் ஏதாவது வேண்டாத செயலை செய்தானா? உன்னுடைய நிறுவனத்திற்கு ஏதாவது கலங்கம் ஏற்படுத்தினானா? வாடிக்கையாளரிடம் நன் மதிப்பையே பெற்றிருந்தான் அல்லவா! உனக்கு ஒரு காலம் வந்த மாதிரி அவனுக்கு ஒரு காலம் வந்திருக்கு. உனக்கு நல்ல காலம் உன் வாசற்கதவை தட்டியது போலத் தீபக்கின் வீட்டு கதவையும் தட்டியிருக்கிறது. உன்னைப்போலவே அவனும் சரியாகப் பயன்படுத்திகொண்டான் இதில் தவறு என்ன இருக்கிறது.
முயற்சியுடன் அதிர்ஷ்டமும் கைசேர்ந்ததால் உன்னைப் போலவே அவன் வேறு ஓர் இடத்திற்குப் போயிருக்கிறான். உன் மனசில் இவ்வளவு குரோதம்,வன்மம், வெறுப்பு, எல்லாம் வேண்டாம். நீ தீபக்கை சகப் போட்டியாளனாகப் பாரு. உனக்கு மனசு நிறைவா இருக்கும், அவனும் அவன் வழியில் போவான். உன் வழியில் அவன் வர மாட்டான்.
ஒவ்வொருவருக்கு வாய்ப்பு அவரவர் கதவை தட்டும் போது கட்டாயம் அந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ள வேண்டும். தவற விட்டவன் மீண்டும் இவ்வுலகில் போராடிக்கொண்டேதான் இருக்கிறான். இவ்வளவு ஏன் நம் அம்மாவின் கர்ப்ப்பப்பையிலிருந்து வெளிவந்த போது என்ன கொண்டு வந்தோம்?. உயிரைத் தவற வேறு என்ன கொண்டு வந்தோம்? நடுவில் இந்த வாழ்க்கை வாழ உயிரை காத்துக்கொள்ளப் போராடிக் கொண்டிருக்கிறோம்.போறப்ப நாம என்ன கொண்டு போகப் போகிறோம் . கொஞ்சம் சிந்தித்துப் பாரு அஹூஜா.
“வாய்ப்பு என்பது எல்லோருக்கும் பொது அஹூஜா.”
000

பாலமுருகன்.லோ
பிறந்த இடம் கரூர் மாவட்டம். பள்ளிப் படிப்பு அனைத்தும் கரூரில் முடித்த பிறகு. வேலை நிமித்தமாகச் சென்னைக்கு 1997-ல் வந்தவன் பல நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது ஒரு ஜெர்மானிய நிறுவனத்துக்கு ஆஃப்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் பிரிவில் வேலை செய்துவருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு எழுதும் ஆர்வம் இருந்தது. ஆனால் வளர வளர படிப்பு, வேலை திருமணம், பிள்ளைகள் என்று வந்த பிறகு எழுதும் ஆர்வம் சற்று மங்கிக் காணப்பட்டது. ஆனால் என்னாலும் மீண்டும் எழுத முடியும் என்று என்னை நான் முழுமையாகக் கண்டுகொண்ட வருடம் 2020 என்று கூறலாம். 2019-ல் இருந்து தீவிரமாகக் கதை மற்றும் கவிதைகளை வாசித்து ஒரு வாசகராக என்னை முழுமையாக மாற்றி இருக்கிறது இந்தக் கலை இலக்கிய உலகம் .
Nalla karuthulla kadhai.pala Manidhargal naam seidhaal thavarillai adhuve matravar seidhaal thavaru ena ninaikirargal.ikkadhayil ulladhu pola konjam sindhikka vendum.
Yes, exactly right, thanks for the comment.:)
வாய்ப்பு சிறுகதை நன்றாக உள்ளது.இது நான் கடந்து வந்த பாதையை நினைவு படுத்துகிறது.Well done 👍 keep it up and going on.
If the story creates an impact and reminds their own old path. As a writer, I’m thrilled to see such comments. Thank you very much 🙂
இன்றைய சூழலுக்கு ஏற்றார் போல் கதை உள்ளது கதையின் முடிவும் மிகவும் எதார்த்தமாக உள்ளது
Thank you very much….:)
உங்கள் ‘வாய்ப்பு’ என்ற கதையை வாசித்தேன். வாசித்தவுடன் எனக்கு தோன்றிய ஒரு கருத்து என்னவென்றால், நவீனத்துவம் என்ற பெயரில் நாம் கைவிடக் கூடாத சில பழைய முறை என்று சொல்லும் உண்மையான எழுத்து நடையை மறந்தும் அல்லது கைக்கழுவியும் விடுகிறது இந்நாட்கள். உங்கள் வாய்ப்பு கதையில் அப்படி மறந்த அந்த எழுத்து நடையை நான் கண்டேன். சொல்ல வந்த கருத்து இக்காலத்திற்கு சொல்ல வேண்டியவையே. வாழ்த்துக்கள்💐
As a writer, Mr. Shanthi Joe has expressed his thoughts beautifully and very elegantly after studying the complete story. I would like to thank him for the effort to reach here and provide his valuable comment.:)
எழுத்தாளர் திரு. ரிஸ்வான் ராஜா அவர்களின் எண்ணப்போக்கை மிக அழகாக, நேர்த்தியாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் இக்கருத்தின் வாயிலாக. யதார்த்தமாக நான் உரையாடிக்கொண்டிருக்கும்போது அவரிடம் கேட்டேன், “என்னிடம் நீங்கள் சொன்னீர்கள் அல்லவா, இக்கதையைப் பற்றி எழுதுகிறேன் என்று?” அப்போதுதான் தெரியவந்தது அவருக்கு உடல்நலம் சரியில்லை என்று. உடனே அவரிடம் கூறினேன், “முதலில் உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள், இது கிடக்கட்டும், அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்” என்று.
ஆனால், அவர் உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல், உடனே தன் மனதில் என்ன தோன்றியதோ அதை கருத்தாகச் சொல்லிவிட்டார். வாழ்த்துகள் நண்பர் திரு. ரிஸ்வான் ராஜா அவர்களுக்கு.
நேரம் கிடைப்பதே அரிதான இக்காலகட்டத்தில், நேரத்தை ஒதுக்கி, கதையினை முழுமையாகப் படித்து, கருத்துச் சொல்வது என்பது மிகப் பெரிய விஷயம். ஆகையால், மீண்டும் அவருக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-பாலமுருகன்-லோ- — with Rizvan Raja.
❤️❤️❤️
அன்பிற்கினிய நண்பர் திரு. இத்ரீஸ் யாக்கூப் அவர்கள் எனது கதைகளைப் பட்டியலிட்டுப் பேசியிருக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், அவர் அனைத்துக் கதைகளையும் வாசித்து, அவற்றிலிருக்கும் நிறைகுறைகளை எல்லாம் சுட்டிக்காட்டியிருக்கிறார். எழுத்தாளனுக்கு அவசியமானது என்னவென்றால், தனது படைப்புகளைப் படிப்பவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதே.
இதுவரையில் எனது கதைகளில் படிப்பவர்கள் பெரியதாக உவமைகளையோ அல்லது வர்ணனைகளையோ பார்த்திருக்க முடிந்திருக்காது; ஏனோ கொண்டுவரவில்லை. அவர் இங்கு குறிப்பிட்டது மாதிரி, அனைவருக்கும் புரியும்படி இருக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்துடன் எழுதுகிறேன். ஏனெனில், நம்முடைய எழுத்தை அகராதியின் உதவி கொண்டுதான் பொருள் தேட வேண்டுமென்றால், எத்தனை நபர்கள் அதைச் செய்வார்கள்? அதனாலேயே, முடிந்தமட்டும் எளிதாக இருக்கும்படி கவனித்துக் கொள்கிறேன்.
அடுத்து இனி வரும் படைப்புகளில் மிகக் குறைந்த அளவில் உவமைகளையும் வர்ணனைகளையும் இணைக்கலாம் என்று எண்ணியுள்ளேன். கதையை படிக்கும் போது அவரவர் பார்வையில் இதைத் தவிர்த்திருக்கலாமே என்று தோன்றும். ஆனால், கதையை எழுதும்போது கதையோட்டத்திற்குத் தேவைப்பட்டாலும் படும் மற்றும் நன்றாக இருக்கக் கூடும் என்று எண்ணித்தான் அனைவரும் எழுதுகிறார்கள். எல்லாமே ஒரு முயற்சிதானே. நண்பர் திரு. இத்ரீஸ் யாக்கூப் சுட்டிக்காட்டியது நல்லதே. படிப்பவர்களுக்கு வேண்டாத பத்திகளை நாம் நிரப்பக் கூடாது என்பதை மனதில் ஏற்றிக்கொள்கிறேன்.
நேரம் ஒதுக்கி, ஒவ்வொரு கதையையும் விரிவாகவும், இரத்தினச் சுருக்கமாகவும் சொன்ன விதம் அருமை. மீண்டும் எனது மனமார்ந்த நன்றியினை நண்பர் திரு. இத்ரீஸ் யாக்கூப் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-பாலமுருகன்.லோ-
——————————————————————————————————-
திரு Loganathan Balamurugan அவர்களின் ‘வாய்ப்பு’ சிறுகதையை இந்த மாத நடுகல் இணைய இதழில் வாசித்தேன். ஆசிரியரின் ‘சாதுரியம்’ கதைக்கு பிறகு இக்கதை எனக்குப் பிடித்திருந்தது. நான் வாசித்த ஆசிரியரின் மற்ற படைப்புகளான ‘மறுக்க முடியாத உண்மை! முதுமை!, நிராகரிப்பு, எடுத்துக்காட்டு’ போன்ற கதைகளில் ‘நிராகரிப்பு’ கதை ஒரு தந்தையின் மனோபாவத்திலிருந்து நன்றாகவே தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. கதையில் பொதிந்திருந்த உணர்வுகளும் மனதிற்கு நெருக்கமாகவே அமைந்திருத்தன. ‘முதுமை’ கதையும் கூட ஒரு நல்ல பேசுபொருளை உள்ளடக்கிய கதைதான். ‘எடுத்துக்காட்டு’ என்னளவில் ரொம்பவே ப்ரீச்சியாக இருந்தது. என்னளவில் அந்த கதையில் சுவாரசியமான கதைக்கான அம்சங்கள் குறைவுதான்.
இந்த மாதம் பிரசுரமாயிருக்கும் ‘வாய்ப்பு’ கதையின் மூலம் ஆசிரியர் தேர்ந்தெடுத்து எழுதும் கதைக்களங்களை நுட்பமாக விளங்கிக் கொள்ள முடிந்தது. எளிய கதை, எளிய நடை என்றாலும், உரையாடல்களிலேயே நீண்டுப் பயணிக்கிறதும் என்றாலும் பெரிய குறைகள் இன்றி சிறப்பாகவே வந்திருக்கிறது என்று சொல்வேன். ஏதார்த்தமான கதையும் கூட. முடித்துவிதம் சிறப்பு ஆனால் அதற்கு முந்தைய பத்தி தேவையில்லாதது என்றே சொல்வேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு அஹுஜா என்ற பெயரை இந்த கதை வழி கேட்கிறேன். கேல்கர், தீபக் போன்ற பெயர்களும் எனக்கு பரிச்சயமானவையே. ஆனால் இது சில வாசகர்களுக்கு கதாப்பாத்திர அளவில் ஒரு அந்நியத்தையும், அதே சமயம் ஒரு புதுமையான வாசிப்பு அனுபவத்தையும் ஒருங்கேத் தரலாம்.
கதையை வாசிக்க…