1.பிசுபிசுப்பு

ஆமை நகர்வது போல என என்றெல்லாம் தொடர்பு படுத்தி யோசிக்கும் மனநிலையிலெல்லாம் அவன் இல்லை. மேம்பால பணிகளின் காரணமாக வழக்கத்தைவிட இருபது நிமிடங்கள் தாமதமாக பேருந்து நிலையத்தை அடைய சுற்றிச்சொல்லும் வழியில் இன்று ஏதோ கார்ப்ரேஷன் வேலைகள் வேறு.

மேம்பால பணிகளில் பெரும்பாலும் வட இந்தியர்கள்தான், ஆனால் கார்ப்ரேஷன் வேலைகள் இன்னும் பெரிதாக கைமாறவில்லை, இந்த ஒப்பந்த பணிமுறைகள் குறித்து அவனது வேலையின் காரணமாக சிறிது  தெரிந்து வைத்திருந்தாலும் எங்கோ கேட்டோ பாடலின் இடைவரிகளில் ஒன்றி முதல் வரியை தேடும் குழப்பம் போல் நீடித்தது.

அதற்கும் காரணமில்லாமமில்லை, இரண்டு நாட்களாக தன் மகளை தானே புணர்வது போல் கனவு, கனவுகளில் தொடர்ச்சியோ, ஒற்றுமைகள் இருப்பதில்லை என வாசித்ததால் அதிலிருக்கும் ஒற்றுமைகள் அவனை இம்சித்தது. நேற்று மாலை கூட எப்போதும் போல் அவளுக்கு முன் வீடு வந்திருந்தாலும் அவளது இயல்பான விஷயங்கள் கூட இம்சித்தது. அதிலும் அவள் தனது தோள்ப்பையை கழற்ற கைகளை உயர்த்தும் போது தெரிந்த அக்குள் வியர்வையின் ஈரம், ஸாக்ஸ்க்கு மேலே இருந்த சிறிய மயிற்கால்கள் அவளின் பழுப்பு வண்ணத்தில்கூட தனியாக தெரிந்தது.

அவள் தீட்டாக இருக்கிறாள் என்ற குறிப்புக்கூட ஏன் இப்படி தனித்து தெரிகிறது என்றெல்லாம் யோசித்துக்கொண்டே வந்தான்.

முதல் நிலையத்திலிருந்து, இறுதிவரை பயணிப்பதால் ஜன்னலோர  இருக்கை எப்போதும் போல் கிடைத்துவிட்டது. அக்குள் வியர்வை, புணர்ச்சியின் போது முனகும் ஒலி என்பதையெல்லாம் தவிர்க்க வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தான், இயல்பில் ரீல்ஸ்களை ஸ்க்ரோல் செய்துக்கொண்டே போவதால் பேருந்து பழுதாகி நின்றால் கூட அதையறியாமல் பயணிக்க கூடியவன்தான்.

ஜல்லிக்கற்களையள்ளிப்போட்டுக்கொண்டிருவனுக்கு மிக அருகில் வட இந்திய பெண், அவள் தோற்றம் சிக்னலினருகில் யாசிப்பவள் போலிருந்தாள். ஆனால் உழைத்து களைத்தவுடல்தான் தலை மயிறை தேங்காய் சிரட்டைப்போல மாற்றியிருக்க வேண்டும், குழந்தையை இறக்கி உக்கார வைத்தால் அதற்கென மெனக்கெட வேண்டுமோ என மாருக்கு குறுக்கே மற்றொரு சேலையில் கச்சிதமாக பொருத்தியிருந்தாள்.

இவன் கவனிக்கவும் அந்த குழந்தை அவளுக்கு சற்றும் பொருந்தாத ஜாக்கெட்டை இழுக்கவும் சரியாக இருந்தது. ரீல்ஸ்களில் ஸ்லோமோசனில் குழுங்கும் மார்புகளை போலவே இருக்க கண்ணெடுக்காமல் இருக்க முடியவில்லை. எதற்கும் 360° கோணத்தில் தான் கவனிப்பதை பிறர் கவனிக்கிறார்களா? என்றும் சோதித்தும் கண்ணெடுக்காமிலிருக்கவில்லை.

தான் பார்ப்பதைதான் பிறர் தன்னை வக்கிரம் பிடித்தவன் என பார்ப்பது போன்ற எண்ணம் மீறியும்

அத்தனை பெரிய மார்பில்லை, சற்று மேடுதட்டி கூம்பாக இருக்கிறது என யோசித்து யோசித்து கண்ணகலாமல் நிலைக்கொண்டிருந்தது. ஜல்லியள்ளிக்கொண்டிருந்தவன் சிமெண்ட் கைகளால் அவள்  மார்பை தடவி செல்ல அதன் அச்சு அவள் மார்பிலிருந்தது, அவள் அதை மறுக்கவுமில்லை ஏற்கவுமில்லை.

வண்டிகள் விலக பேருந்து வேகமெடுத்து, புழுதி கிளம்பியதுஜல்லிக்கற்கள் சிமெண்ட் துகள்கள் அவன் தலையில் படிந்து பிசுபிசுக்க செய்தது. கனவில் மகளை புணர்ந்த பின் கையொட்டிய அதே பிசுபிசுப்பு.

2.Break the glass

வீட்டிலிருந்து கிளம்பிய போது நெரிசலில் உள்ளே தள்ளி, உள்ளே தள்ளி ஜன்னலோர சீட்டின் கம்பியை பிடித்தபோது தான் கவனித்தேன் சிவப்பு கைப்பிடி சுத்தி ஒன்றும், அதை Emergencyல் பயன்படுத்துங்கள் என்ற குறிப்பும். இந்த சுத்தியலை சமீபமாக எல்லா பேருந்துகளிலுமே பார்க்கிறேன், அதைக்கொண்டு உடைத்தது போல் தெரியவில்லை. உடைந்த கண்ணாடிகளை மாற்றியிருந்தால் கூட அதன் வடுக்கள் இருந்திருக்குமே பழைய மஃப்சல் பஸ்களில் திறக்கவே முடியாத ஜன்னல்களில் கூட உடைக்க முயற்சித்த சில கீறல்களை  பார்த்திருக்கிறேன். ஏதோ ஏதோ நினைவை கண்முண் கொண்டுவருவதற்குள் பேருந்து நிலையம் வந்துவிட்டது.

பாலம் வந்தபிறகு  ரயில்வே கேட், அதை செயல்படுத்தும் சிறிய அறையும் காணமல் போவதை போல் இங்கு ஒரு பேருந்துநிலையமே காணமல் போயிருந்தது.

“பொள்ளாச்சி பஸ் எங்க நிக்கும்?”

உள்ளூர் நிறுத்தமும், வெளியூர் நிறுத்தமும் இப்போது வேறுபடுத்திக்காட்ட முடியாதது போல் ஆகிவிட்டதை பார்த்துக்கொண்டிருக்க மேலே உள்ள பாலங்களை கொண்டு அடையாளப்படுத்த யாரும் கற்றுக்கொள்ளவில்லையா எனத்தோன்றியது? 

“இந்த Appஐ இன்ஸ்டால் செய்து என்னுடைய referral codeஐ பதிவு செய்கிறீர்களா?” என ஐடி கார்டை காட்டியவளுக்கு நிச்சயம் யமுனா வயதுதான் இருக்கும், எனது மொபைலில் அவரது அடையாள எண்ணை போட்ட பிறகு தான் சொன்னார் “பத்துநாள் பயன்படுத்துங்க Please” அவரது வாக்கை காப்பாற்ற இன்னும் கொஞ்ச நாள் இருக்க வேண்டுமா?

பத்து ரூபாய் வாங்கிக்கொண்டு ஆசிர்வதித்தோடல்லமால் “இதென்னபா சட்டைல அழுக்கா, இல்ல டிசைனா?” என்றார். மூன்று நாளாக மாற்றாத அந்த சட்டையில் எதை வைத்து கேட்டார் என தெரியவில்லை.

சரி இந்த அழுத்தத்தை போக்க இன்னொரு பேருந்தில் ஏறி அமர்ந்தால்

என் இருக்கைக்கு நேர் மேலே.

Emergency.

இந்த பேருந்து வழித்தடத்தில் காலை, மாலை என சென்று திரும்பும்,  அத்தனை பேரில் ஒருவருக்கு கூட இந்த எமர்ஜென்சி ஏற்பட்டிருக்காதா? ஒருவேளை எப்போதும் நெரிசலாக போகும் பொழுது எமர்ஜென்சியாக உணர்ந்தால்கூட கைக்கெட்டும் தொலைவிலிருந்திருக்காது போல, இப்போது  கூட்டமேதுமில்லை.

***அத பாக்குறான் பாத்திட்டு போறானே…

கை தேய்க்கறான் தேச்சிட்டு தாக்குறானே***

“தம்பி, இது தான் பிள்ளையார் கோவில் ஸ்டாப்பா”

“ஆமாங்க சீக்கிரம்”

சுத்தியலோடு இணைப்பு சங்கிலி இருக்குமா இல்லை கையோடு வருமா? அப்படி வருமென்றால் எப்படி முழுவதுமாக உடைக்கமுடியும்?

“அடுத்த நிறுத்தம் பிள்ளையார் கோவில்” என்று  குற்ற உணர்வை கூட்டியது புதிய பேருந்து. குற்றவுணர்வு கூடியது, அந்த ஆசீர்வாதம் வேலைக்காகது போல.

**அட இங்கிலாந்து பெண்களும் இந்தியாவில் ஆண்களும்*

விட்ட இடத்திலிருந்து பாடத்தொடங்கியது. வெளியே விழுந்தால் கூட உடைந்து மொபைல் செயலிழந்து தானே போகும் Uninstall செய்தால் தானே  அவருக்கு சிக்கல்.

ஒருவழியாக நம் அவசரத்தையெல்லாம் முடிந்துவிடப்போகிறது என சுத்தியலுக்கு முதன்முதலாக வேலை தர, “நீ ரைட் சொல்லி  ராங்க் ரூட்டில் போடா” என்று அதன் இசையோடு வண்டி சடாரென ப்ரேக் அடித்து அவசர அவசரமாக இறங்கி ஆம்புலன்ஸை அழைத்ததோடு, கீழே கிடந்த  என் மொபைலில் வீட்டு எண்ணை தேட ஒருவர் முயன்றார்.

“அடுத்த நிறுத்தம் ….”

3.அமர்வு

“எஸ், நீங்க ரிலாக்ஸ் பண்ணிட்டு பேச ஆரம்பிக்கலாம், வந்த உடனே தொடங்கனும்னு அவசியம் இல்ல”

“ஓகே, ம்ம்”

“உங்களோட பிரச்சனையோட தொடர்பு இல்லாதப்பட்சத்தில் பர்சனல் தகவல்கள் தேவையில்ல”

“கதைகள்?”

“கனவுகளும், ம்ம்”

“சொல்லுங்க நீங்க அந்த கதைல உங்கள பத்திதான் எழுதினதா உணர ஆரம்பிச்சதுலிருந்து இந்த கனவுகள் தொந்தரவு பண்ண ஆரம்பிச்சிருக்கு”

“இல்ல, அந்த விவரம் தேவைப்படுறப்ப சொல்லுங்க”

“முதலில் நீங்க ரிலாக்ஸ் பண்ணிட்டு பேச ஆரம்பிங்க, துண்டு துண்டா யோசிக்கும்போது சிதறல் அதிகமாத்தான் ஆகும்”

“வெரிகுட், அதேதான் கலைடாஸ்கோப் மாதிரி!”

“இப்ப நீங்க கணவரோட வந்திருக்கீங்க”

“கணவரோட இருந்தப்ப அந்த சம்பவம் நடந்துச்சு?”

“ஒரு சின்ன டாஸ்க்குள்ள போய்ட்டு வந்தோம்னா ஐ தின்க் யூ வில் கெட் பெட்டர்”

“நான் சொல்ற நம்பர்ஸ திருப்பி சொல்லுங்க  5, 3, 0, 18 “

“76,6,3,4”

“வெரிகுட் இப்ப திருப்பி”

“ஆமா, ரிவர்ஸ்ல  8, 26, 7,3”

“97ல இருந்து 3 மைனஸ் பண்ணிட்டே வாங்க”

“82 மைனஸ் 3”

“ஹா, ஹா நிறையவே செசன் போயிருக்கீங்க “

“மெமரீஸ் மோஸ்ட்டா எல்லார்க்கும் அதிக பட்ச பிரச்சனை இதுதான், உங்களுக்கு அது கொஞ்சம் அதிகமா?”

“நான் தவறா புரிஞ்சா நீங்க உடனே சொல்லுங்க”

“உங்க சிஸ்டர் மேரேஜ்க்கு இன்வைட் பண்ண போயிருந்தீங்க”

“அந்த பர்சன் எழுதின கதைல நீங்க எங்க தொடர்ப உணருறீங்க?”

“Cool, cool it is his  FB post am I right?”

“அதுல உங்கள குறிப்பிட்டிருந்திருக்கார் அந்த நெய்பர்”

“தம்பி ம்ம்”

“See, There is a connection நீங்க ஒரு விசயத்துக்கு வேல்யூ கொடுக்கறப்ப தான் அதுல இருக்க தவறுகள் பெருசா தெரிய வரும்”

“எப்படின்னா, நா நெய்பர்னு சொன்னத தம்பின்னு திருத்தறதுல அந்த விஷயம் இருக்கு”

“உங்கள குறிப்பிடுற அந்த வரிகள மட்டும் படிச்சு காட்டமுடிமா?

“ம்ம், ஒன்லி நீங்க கம்ஃபோர்ட்டா ஃபீல் பண்ணினா மட்டும்”

“நீங்க சொன்ன கதைய தான் எழுத… முடிலன்னு, உங்கள ஹிமுலேட் பண்ற மாதிரி சொல்லி அப்ப உங்க கண்ல குற்றவுணர்வு இல்ல, இப்படி அவர் சொன்னதா புரிஞ்சுக்கலாம் இல்லையா?”

“Is he a writer?”

“ம்ம்ம் அது முக்கியமில்ல, இப்ப நீங்க பதட்டமா இருக்கீங்க  5-4-3-2-1 ட்ரை பண்ணுங்க, ஞாபகம் இருக்குத்தான?

“இல்ல இல்ல 3  நீங்க கேக்கறது, 1 நீங்க ஸ்மெல் பன்றது”

“இப்ப ஓகே, கண்டினியூ பண்ணலாமா?”

“நீங்க அதுக்கு தயங்குறீங்கன்னா, கனவ பத்தி சொல்லுங்க “

“கனவ அப்படியே எடுத்துக்க வேண்டிய அவசியம் இல்ல, அது சிம்பல்ஸ் தானே”

“முன்னாடி சொன்னதுதான், நீங்க அத வேல்யூ பன்றீங்க”

“Ooops…அப்யூஸ்”

“நீங்க அத தொடங்குனீங்களா?”

“இப்ப வருத்தபட ஆரம்பிச்சதும், அந்த கனவுகள் வருதா இல்ல கனவுகளுக்கு அப்புறம் வருத்தமா?”

“அது OK”

“அப்ப உங்களுக்கு 24, அந்த பையனுக்கு15”

“பெனிட்ட்ரேட்?”

“மார்பையும், யோனியையும் தொட விடுவீங்க அழுத்தமா?”

“Oral?”

“எவ்ளோ நாள் நீடிச்சுது?”

“அப்ப அந்த பர்சன்கூட ரிப்பீட்டா இருந்ததுக்கு ரீசன்?”

“நான் கேக்கறது ரெண்டு டைமென்சனா பிரிச்சுக்குங்க ஒரு விஷயம் அத திருப்பி செய்ய எந்த காரணமும் இருக்காது ஒரு பழக்கம் அவ்ளோதான், இன்னொன்னு புஷ் அத கட்டாயமா செஞ்சாகிற நிர்பந்தம்”

“Clear that”

“Pushக்கு சரியான காரணம் ஏதும் இருந்திச்சுன்னு சொல்லமுடிமா?

“எப்படின்னா நீங்க அந்த பையன மட்டும் தேர்ந்தெடுத்தது அந்த மாதிரி காரணங்கள்?”

“எதுவாக்கூட இருக்கலாம், அந்த பர்சன் யாரையாவது ஞாபகபடுத்துற மாதிரி இருக்கிறது, ஏன் ஒரு ட்ரெஸ் சூஸ் பன்ற மாதிரி சம்டைம்ஸ் டேஸ்ட் ஆர் சம்டைம்ஸ் ப்ரைஸ்”

“அப்யூஸ் பண்ணினா பிரச்சனை வராதுங்கிறது மட்டும் தான் காரணமா?”

“நீங்க யோசிச்சுக்கூட பதில் சொல்லுங்க ஆனா இது முக்கியமான கேள்வி?”

“ஐ அக்ரி, அடுத்த செசன்ல கூட சொல்லுங்க”

“அதுக்கு பிறகு இப்பத்தான் சந்திக்குறீங்க? ஏன்?”

“அது உறுதியா தெரியுமா?”

“உங்க அப்யூஸாலதான் டிப்ரஸனார்னு உறுதியா தெரியாட்டியதால கூட நீங்க வருத்தப்படமா இருந்துருக்கலாமே?“

“ஆனா, முன்னாடி இதப்பத்தி யோசிக்கலன்னு எடுத்துக்கலாமா?”

“See, Rules & Dignity நாம புரிஞ்சுக்கிற விதத்துல மாற்றம் நிகழலாம், அது ஒவ்வொரு வயசுலயும் மாற வாய்ப்புகளும் இருக்குல்ல”

“நீங்க அந்த அப்யூஸ் பன்றது தப்புன்னு எப்ப உணர்ந்தீங்க?”

“குட், ஆல்ரைட்”

“அதுக்கு அப்புறம் டிஸ்டபர்ன்ஸா பீல் பண்ணினது உண்டா?”

“Not much, தட்ஸ் எ போல்ட் ஏன்சர் உங்க பதில்ல இருக்க தெளிவு இத ஈஸியா பிரிச்சு பாக்க முடிது, அத உணர முடிதா?”

“அதே விதத்துல இப்ப அந்த பதிவு வெளிப்படையா இருக்கிறதால கனவுகள் வருதுன்னு எடுத்துக்கலாமா?”

“இல்ல நீங்க ஒரு தெளிவா சொல்லுங்க இப்ப வந்த உணர்வு பயமா இல்ல வருத்தமா?”

“Okay இன்னைக்கு இந்த அளவுக்கு போதும், உங்க கனவுகள எழுதி வைக்க முடிதா பாருங்க வீ வில் மீட் ஆஃப்டர் எ வீக்.

**

4.விழிப்பு

“ப்ப்பா, இந்த நேரத்துல ஏன் இப்புடி புடிச்சு உலுக்குறீங்க?”

“நான் சத்தம் போட்டனா? நீங்க என்ன புடிச்சு இழுக்கற வரைக்கும் நான் தூங்கிட்டுருந்தன்”

“இல்லாட்டி பாதி கனவுல எழுந்த ஃபீல் இருக்கும், அது எனக்கு தெரியாதா?”

“பத்து வருசம், பாஞ்சு வருச கணக்க கேக்கல”

“நான் ப்ளான்க்கா இருந்தன், இல்லாட்டி முழிச்சப்ப எனக்கு ரியாலிட்டி உடனே தட்டுப்பட்டுருக்காது”

“இல்ல ஐம் ஓகே நவ்”

“டிஸ்டர்பட்டா இருந்தது, ஒரு தெரபி வேணும்னு முதல்ல கேட்டது யாரு?”

“பின்ன ஏன் இப்ப மட்டும் மறைக்க போறேன்”

“நான் சிக் இல்ல டிஸ்டர்பட் அதுவும் இந்த நேரத்துல அப்படி கூடயில்ல”

“அது”

“என்னால ஒத்துக்க முடியாது!”

“நீங்க என்ன விக்டிம்மா கூட கேர் பண்ண வேண்டியதில்ல”

“ஹீ ஹிஸ் ஜஸ்ட் மை நெய்பர்”

“எனக்கு இப்பத்தான் அன்கம்பர்ட்டபிளா பீல் ஆகுது, நான் ஏன் மன்னிக்கப்படனும்”

“அத நா சொல்லிருந்தாக்கூட அது கனவு”

“சில கனவு என்ன பயமுறுத்துச்சு, இனி அப்படி இருக்காது”

“பயமோ இல்ல சம் வாட் தட்ட்ட்ட் ஹான் மன்னிப்பு, ஏதுவா வேணா இருந்தாலும் எனக்குள்ள தான் இருக்க போகுது”

“உங்க குறட்டைய நான் சமாளிக்குற மாதிரி இத நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க”

“நான் அழல”

“நம்ம பொண்ண கம்பேர் பண்ணாதீங்க”

“நான் அழுகல அதுவும் பயம், ப்லாப்டிசேக்ஷன் எதுவும் இல்ல”

“அந்த செசன்ல சந்தேகம்னா அடுத்த செசன்ல நீங்க கூட இருங்க”

“நான் அழல புரிஞ்சுதா”

“நீங்க பாக்குற ட்ராமா மூவில வர மாதிரி எந்த ஒரு பாவமன்னிப்பு எதிர்பார்த்து நான் நிக்கல”

“இப்ப ஓகேவா நான் தூங்கலாமா?”

“நாளைக்கே கூட அப்பாய்ன்மெண்ட் வாங்குங்க எனக்கு எந்த ப்ராபளமும் இல்ல”

“நான் அழல, திரும்ப இந்த பிரச்சனைய இனி எடுத்து வராதிங்க”

“என் தப்புதான்”

“இப்பவும் அதே தான் பன்றீங்க”

“செசன் போனும்னு சொன்னேன் பாத்தேன்ல அது தப்புன்னு தான் நான் சொன்னேன்”

“இப்ப ஓகே தான, தூங்கலாமா? இல்ல நீங்க முழிச்சுருந்து என்ன பாத்துக்க போறீங்களா?”

“இந்த கல்யாண எழவு, இப்ப கனவு மசுறு”

000

நிஜந்தன்

நல்ல வாசிப்பாளரான இவர் சமீபமாக சிறுகதைகள் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *