Description
மனிதனை ஒரு விசித்திர ஜீவனாக்கி வேடிக்கை பார்க்கிறது இந்த மதுக்குடுவை. இன்ப துன்பங்களுக்கு இதுதான் உற்ற துணை என குடுவைக்குள் இருக்கும் மதுவினில் நீந்தித் தத்தளிக்கிறார்கள். தங்களது ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் மதுக்குடுவைக்குள் திரவ வடிவில் அடைக்கப்பட்டிருப்பதாகவே அவர்கள் உணர்கிறார்கள். இது ஒரு மாபெரும் கொண்டாட்டம். மனிதனின் மனப்பிறழ்வு, அந்தக் கொண்டாட்டத்தை நீட்டிக்க விடுவதில்லை… இப்படியாக திண்டாடுகிற மனிதர்களைத் தனக்கே உரியே எதார்த்த நடையில் சொல்லியிருக்கிறார் வா.மு.கோமு.





