Description
பல வேளைகளில் உடலை நாம் வதைக்கிறோம். அதனை உடல் பொறுத்தருள்கிறது. ஒரு கட்டத்தில் அது நம்மை வதைக்கத் தொடங்கும்போது நமது அஷ்ட நாடிகளும் கலங்கி விடுகின்றன. இன்றைக்கு மனித வாழ்வே உடலுடன் தொடுக்கும் போராகத்தான் இருக்கிற நிலையில் வா.மு.கோமு தன் உடலுடன் நிகழ்த்திய சிறு யுத்தத்தை இந்நாவலில் பதிவு செய்திருக்கிறார். கூடவே உறவுகளுடனான போரும் உள்ளடங்கியிருக்கின்றன.





