ஏதோ பெரியவங்க

பேசிட்டு இருக்கும் போது

என்னனுக் கேட்டா

சுரைக்காய்க்கு

உப்பில்லைன்னு

சொன்னாங்க,

,

நான் இதை

எங்கேக் கொண்டு

வைக்கனும் ?

கேட்டா

நாய் குரைக்கும் போது

குப்பையில் போடுன்னு

சொன்னாங்க,

,

மழையும் பெய்யுது

வெயிலும் அடிக்குது

என்னன்னுக் கேட்டா

காக்காவுக்கும்,

நரிக்கும்

கல்யாணம் அப்படினாங்க,

,

தாம்பூல வெத்தலையை

நான் சாப்பிடப் போறேன்னு

சொன்னா,

கோழி வந்துக் கொத்தும்ன்னு

அந்த அக்கா சொல்லுறாங்க,

,

இப்படிப் பட்ட கதைகள்

சுவாரசியமாகச் சொல்ல

இந்தக் காலத்தில்

கதைச் சொல்லிகளும்

இல்லாமல் போய் விட்டார்களே

என்று நினைக்கும் போது

மட்டும்

அந்தக் கதைகளை விட

வேதனையாய் இருக்கிறது

+++

பொய்கால் குதிரை

,

பணம் யாருக்கு வேண்டுமானாலும்

யார் வேண்டுமாலும்

செலுத்திக் கொள்ளலாம்,

ஆனால்

ஒரு ரூபாய் பணத்தை

எடுக்கும் போது மட்டும்

கையொப்பம் ஓரே

மாதிரி தான் இருக்க வேண்டும்,

,

வேலை, வெட்டி இல்லாமல்

சண்டைப் போட்டு,

நியாயம் கேக்க

போனால் கூட

ஒரு கோயர்

பேப்பர் ரோட

போக வேண்டியதிருக்கிறது,

,

கல்வி, வேலைவாய்ப்பு,

ரியல் எஸ்டேட்,

வெளி நாடு என

ஏதேனும் சேவைக்கான

அழைப்பு வரும்போதுதெல்லாம்

அவர்களின் பெயரை

யாரோ ஒருவர் பிராடு

என்று பதிவு செய்திருப்பதை

ட்ரு காலர் காட்டுகிறது,

,

பத்து பேர்

பணம் கட்ட

வரிசையாக

நிற்க்கும் போது

கல்வி கட்டணத்தைக் கட்ட

காத்திருந்தவரை

முதலாவது அழைத்தார்

காசாளர்,

+++

கவிதை அதிகாரம் 0007

இதுவரை

அவர்கள்

தொடர்பு கொள்ளப்

பேசிக் கொண்டிருந்த மொழியே

இன்று அவர்களைப்

தனித்தனியேப்

பிரித்து விட்டது

*

நேற்று மக்கள் கூடிய சந்தை

இன்று வெறுமையாய் இருக்கிறது

ஆனால்

புறாக்களும் பறவைக் கூட்டங்களும்

தங்கள் பங்கை

கடை, கடையாய்

கொறித்துக் கொண்டிருக்கிறார்கள்,

*

இங்கே மது அருந்தாதீர்

மீறினால் சட்டப் படி

நடவடிக்கை எடுக்கப் படும்

அறிவிப்பு பதார்தை

அடியில்

காலி புட்டிகளும்,

காகிதக் குடுவைகளும்

+++

இரா. மதிராஜ் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியில் இருந்து  திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ள புதுக்கோட்டைக் கிராமத்தில் பிறந்து, கீழக்கரையில் கல்லூரிப் படிப்பை முடித்து தற்போது காங்கேயத்தில் உள்ளத்  தனியார் நூல் ஆலையில் பணிபுரிகிறேன், தமிழ் இதழ்களில் கவிதை மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறேன், இது வரை கொலுசு மற்றும் காற்றுவெளி போன்ற இலக்கிய மாத இதழ்களில் எனது சிறுகதைகள் வெளி வந்திருக்கிறது, அனைத்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்பையும் வாசிக்கவும், நேசிக்கவும் செய்கிறேன்

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *