சீதையின் துயரம் இன்னும்
தீரவில்லை…
நட்சத்திரங்கள் பலவும்
நிரம்பிய நிலவு வானத்தை அண்ணாந்து பார்த்தேன்,
ஆள்காட்டி பறவையின்
வேதனை குரல் கேட்டது,
இன்னமும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது.
ஆனால்.
நட்சத்திரங்கள் பலவும்
வெகுதொலைவில் நின்று
வேடிக்கை தான் பார்த்துக்கொண்டிருக்கிறது..!
விவசாய நிலங்களனைத்தும்,
அழித்திக் கட்டிய
கான்கீரிட் வீடுகள் அனைத்தும்,
கல்லறை தோட்டங்களாகவே தெரிகிறது,
காடுகள் கடத்தப்பட்ட
பறவைகளுக்கு..!
வெகு தொலைவில் இருந்து
வந்தவர்களெல்லாம்.
பார்த்து விட்டு, -அதை
நடுவழியிலேயே
இறக்கி விட்டுவிட்டு
சென்றுவிடுகிறார்கள்.
அந்த காட்டின் அமைதியை..!
000
அ. செல்வராஜ்,
கண்ணமநாயக்கனூர் கிராமம்,உடுமலைப்பேட்டை. இவர் கவிதை, சிறுகதை. ஆய்வுக் கட்டுரை.போன்ற தளங்களில் இயங்கிவரும் இவர்,குறும்படம் மற்றும் பாடல்கள், எழுதுவதில் கவணம் செலுத்தி வருகிறார், இவரது படைப்புகள் பல்வேறு வார, மாத இதழ்களில் வெளிவருகிறது,தற்போது தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்,