நான் தூங்கிக்கொண்டுதான்
இருப்பேன்
யாரும் தாலாட்டாமலே.
தாலாட்டும் ஓலங்களை
இதுவரைக் கேட்டதில்லை.
,
சடல நாற்றதில் பிறந்து
பாடைகளோடும்
உடைந்த பானை
சில்லுகளோடும் விளையாடி
பறையும் ஒப்பாரியும்
அழுகையும் சேர்ந்த
இசைகளைக் கேட்டு
வளர்ந்த காதுகள் இது.
,
நான் கனவுலகில்
வாழ விரும்புகிறேன்.
கனவுகளில் வறட்சி ஏற்படும்முன்
யாராவது வந்துவிடுங்கள்
ஏக்கத்தோடு சொல்லவில்லை
நிஜத்தை அணிய
அவ்வளவு பயமாக இருக்கிறது.
00

துங்கன்
என்னுடைய பெயர் நீ.இராதாகிருஷ்ணன். ‘துங்கன்’ என்ற புனைப்பெயரில் கதை மற்றும் கவிதை எழுதி வருகிறேன். கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் படித்து வருகிறேன். கவிதை நூல் தொகுப்பு ஒன்றை வெளியீட்டு இருக்கிறேன்.

