இன்னும் ஒரு மணி நேரத்தில்
நீ இறங்கிவிடுவாய்.
நானும்.
தொண்டைக் குழிக்குளிருக்கும்
என் எழுத்துக்களைக் கோர்த்து
சொல்லாக உயிர்க்கொடு.
,
தூரம் போதும்
அருகில் வா.
உனக்காக தான்
இடம் பிடித்தேன்.
காலியான இடத்தை
நிரப்பிட்டு போ.
,
பார்வை மொழி போதும்
மௌனத்தை களைத்து
மெல்ல பேசு.
,
குளிரால் மூடியிருக்கும்
இந்தக் கண்ணாடி கதவை
பார்வையால் திறந்து
உறையச் செய்யாதே…
மூடியிருக்கும் மனதை
திறந்து உன்னையும் என்னையும்
சேர்த்து மூடிக்கொள் போதும்.
,
பார்த்து தானே ஏறினேன்.
பார்வையாலே அண்டார்டிகா ஆக்கிவிட்டாயே
இந்தப் பேருந்தை….
,
என் விரலிடுக்கில் இருக்கும்
பீடி உனக்காகத்தான்
காத்துக்கொண்டு இருக்கிறது.
,
சீக்கிரம் வா.
எனக்காக வேண்டாம்.
இந்த பீடிக்காகவது
தீ முட்டி விடு
அதுவாவது புகையட்டும்…
00

என்னுடைய பெயர் நீ.இராதாகிருஷ்ணன். ‘துங்கன்’ என்ற புனைப்பெயரில் கதை மற்றும் கவிதை எழுதி வருகிறேன். கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் படித்து வருகிறேன். கவிதை நூல் தொகுப்பு ஒன்றை வெளியீட்டு இருக்கிறேன்.

