இப்போதெல்லாம்
பூனை
எலியைத்தின்பதில்லை
விஷமருந்தின்
தாக்கம்
அதன் இறைச்சியில்
சற்று தூக்கல்
உண்டமயக்கத்தில்
உயிர்பயம்
பலதடவைபயன்படுத்திய
பாமாயில் ரீஃபைன்ட்
ஒத்துக்கொள்வதில்லை
பர்கரும்பீட்சாவும்
புரட்டிப் போடும்
பராத்தாவும் நூடுல்ஸூம்
பசு கூட தின்னாது
கழிவு நீர்ப்பானையிலே
முயலுக்கு வைக்கும்
முட்டைக்கோஸ்கேரட்டுக்கு
டயட் மாறி
வெகுநாளாச்சு
வால்ட் டிஸ்னிக்கு
ஒரு விண்ணப்பம்
மிக்கிமவுசுக்குப்பதிலாக
மிக்கி ராபிட் படம் எடுங்கள்.

இ.செல்வராஜ்
புனைபெயர் சூர்யமித்திரன்
சொந்த ஊர்.காஞ்சிபுரம். தற்போது.வசிப்பிடம்.குடியாத்தம் தொழில்.ஓய்வுபெற்ற உதவிகருவூல
அலுவலர். 1976முதல் வாசிப்பனுபவம். கட்டுரை/கதை/விமர்சனம்/கவிதை/ படைப்பாளர்.