உன்
இடது கை
ஆட்காட்டிவிரலைப்பார்க்கும்போதெல்லாம்
உன்
பின்னால்
நின்று
ஓட்டுப்போட்டது
நினைவிற்கு வருகிறது
அழியா குப்பி மையால்
கோலமிட்டு
அழகு பார்த்த
அந்த விரலில்
நானும் கோலமிட
ஆசை
உனக்கு முன்னால்
என்னை
முறைத்துப் பார்த்த
என் தேவதையின்
தாய்ப்பறவை
உன் கரம் பற்றி
வா..என தடுப்புச்சுவர்
போட
தேர்தல்திருவிழாவும்
தேர்த்திருவிழாவுமாக
மெல்ல
நகர்கிறது
நம் காதல்.
சூர்யமித்திரன்
இ.செல்வராஜ் இயற்பெயர். பல கவிதைகள் வெளிவந்துள்ளது. படைப்புகுழுமத்தின் கல்வெட்டு,கொலுசு,காற்று வெளி,தளம்,கணையாழி, நடுகல்.